TRB

Saturday, 14 June 2014

பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2014-15ம் கல்வியாண்டில் முதலாண்டு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு சென்னை அண்ணா பல்லைக்கழக கலந்தாய்வில் கலந்துகொள்ள வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 50% இருவழிப் பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற, கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் நகலை (ஜெராக்ஸ்) சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களின் அலுவலர்களிடம் மாணவ, மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட அலுவலர்கள், ‘50% கட்டணச் சலுகை வழங்கப்பட்டது’ என்று அழைப்புக் கடிதத்தின் முன் பக்கத்தில் சான்றளித்த பின்பு தக்க பயணச் சீட்டுகளை (1+1) மாணவர்களுக்கு வழங்குவர். கலந்தாய்வு முடித்து திரும்பிச் செல்வதற்கும் இதே நடைமுறை பொருந்தும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschool news ,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.