TRB

Friday, 20 June 2014

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜே.இ.இ. தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இதில் முதலில் முதல்நிலைத் தேர்வும் (மெயின்) பின்னர் முதன்மைத் தேர்வும் (அட்வான்ஸ்) நடத்தப்படும். 2014-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு (எழுத்துத் தேர்வு) ஏப்ரல் 6-ஆம் தேதியும், ஆன்-லைன் தேர்வுகள் ஏப்ரல் 9,11,12 மற்றும் 16-ஆம் தேதிகளிலும் நடத்தப்பட்டன.இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவு மே 2-ஆம் தேதி நள்ளிரவு சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேர முடியும். மேலும் இந்த முதல்நிலைத் தேர்வில் முதல் 1.50 லட்சம் தரவரிசைக்குள் வருபவர்கள் ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுத முடியும்.இந்த முதன்மைத் தேர்வு கடந்த மே 25-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) வெளியிடப்பட உள்ளது.

இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்வதற்கான வாய்ப்பு ஜூன் 24-ஆம் தேதியுடன் முடிந்துவிடும்.மேலும் இந்த உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் கட்டடவியல் பொறியியல் துறைகளில் சேருவதற்கான கட்டடவியல் நுண்ணறி தேர்வு ஜூன் 26-ஆம் தேதி நடத்தப்படும். இதில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த கட்டடவியல் நுண்ணறி தேர்வு முடிவு ஜுன் 29-ஆம் தேதி வெளியிடப்படும்.

JEE(Advanced) - 2014 Result
Tags :
tnschool news ,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.