TRB

TNTET

Thursday, 31 July 2014

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற உள்ளனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியலும் விரைவில் வெளியாகும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 30 July 2014

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன. கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

நாட்டை உலுக்கிய விபத்து தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நடந்தது. அன்று நடைபெறப் போகும் அசம்பாவிதத்தை அறியாமல் வழக்கம்போல குழந்தைகளும், சிறுவர்களும் குதூகலமாக பள்ளிக்கு சென்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது.

பள்ளியின் மேல்மாடியில் இயங்கி வந்த கூரை வேயப்பட்ட வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் வேகமாக வெளியேற போதிய இடவசதியும் அங்கு இல்லை. இதனால் அந்த அறையில் இருந்த 94 குழந்தைகள் தப்ப முடியாமல் உடல் கருகி மடிந்தார்கள். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.
தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இந்த கொடூர விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.

அந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

அவர்கள் மீது 304 (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்), 120பி (சதிச்செயல்), 338 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் சிறுவர் நீதி சட்டம், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டம், மாநகராட்சி சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 488 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடக்கக்கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் காயத்துடன் உயிர்தப்பிய குழந்தைகள், பலியான குழந்தைகளின் பெற்றோர், அப்போதைய கலெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 230 பேர் சாட்சியம் அளித்தனர்.அரசுதரப்பு சாட்சிகள் விசாரணை மார்ச் 28-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. 22 மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது.

இந்த கொடூர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தீர்ப்பை வழங்குகிறார். இந்ததீர்ப்பை நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து இருக்கிறது.இந்த விபத்தில் காயமடைந்து உயிர்தப்பிய குழந்தைகளின் தழும்புகளும் மறையவில்லை. உயிர்நீத்த குழந்தைகளின் நினைவுகளும் அவர்களது பெற்றோர் மனதில் இருந்து நீங்கவில்லை.இந்த தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறும்போது, ‘‘எங்கள் குழந்தைகள் இறந்தபோது தொலைந்துபோன எங்கள் சந்தோஷம் இதுவரை திரும்ப கிடைக்கவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு, பாதுகாப்பு இல்லாமல் மோசமான பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’’ என்றனர்.இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கல்வி அதிகாரிகள் உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். அதோடு தீர்ப்பை எதிர்பார்த்து ஏராளமானவர்களும் நீதிமன்றத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 28 July 2014

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள். பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் http://www.bdu.ac.in/cde_admission.php மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0431-2407027,28,54.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 27 July 2014

பள்ளிக்கல்வித்துறையில் 15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் அளித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பள்ளிக்கல்வித்துறையில் 15 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதலும் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் அளித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மாவட்ட முதன்மை அலுவலர்கள் மாறுதல்:

  1. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், 
  2. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கஸ்தூரிபாய் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  3. நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடலூருக்கும், 
  4. திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி திருச்சிக்கும், 
  5. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் வேலூருக்கும், 
  6. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் சேலத்துக்கும், 
  7. கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் சென்னைக்கும் (எஸ்எஸ்ஏ), 
  8. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) சுபாஷினி திண்டுக்கல்லுக்கும், 
  9. வேலூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் சுப்பிரமணியன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும், 
  10. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(எஸ்எஸ்ஏ) சுவாமிநாதன் விழுப்புரத்துக்கும் (எஸ்எஸ்ஏ), 
  11. சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கணேசமூர்த்திநீலகிரிக்கும், 
  12. நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) முருகன் திருப்பூருக்கும், 
  13. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) கோபிதாஸ் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  14. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) பூபதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராகவும், 
  15. ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் சீதாலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ) மாற்றப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு விவரம்:

  1. சென்னை ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த அனிதா, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  2. தூத்துக்குடி டிஇஓ ரத்தினம், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்விஅலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  3. திண்டுக்கல் ஐஎம்எஸ்சில் பணிபுரிந்து வந்த பால்ராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  4. பட்டுகோட்டை டிஇஓ நாகேந்திரன், கரூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  5. கிருஷ்ணகிரி டிஇஓ துரைசாமி, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் (எஸ்எஸ்ஏ), 
  6. திருவண்ணாமலை டிஇஓ கணேசன், பெரம்பலூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  7. பழனி டிஇஓ கலையரசி, திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  8. அறந்தாங்கி டிஇஓ தாமரை, நாமக்கல் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  9. சிவகங்கை டிஇஓ ரவிக்குமார், நீலகிரி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  10. கடலூர் டிஇஇஓ குணசேகரன், ஈரோடு கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  11. கடலூர் டிஇஓ மல்லிகா, கோயம்புத்தூர் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  12. உத்தமபாளையம் டிஇஓ ஜெயலட்சுமி, தேனி கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  13. அரியலூர் டிஇஓ கணேசன், புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  14. தூத்துக்குடி டிஇஓ செந்தமிழ்ச்செல்வி, நாகப்பட்டினம் கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், 
  15. தென்காசி டிஇஓ வசந்தி, சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

இதற்கான உத்தரவை தமிழக பள்ளிக் கல்வி துறைநேற்று பிறப்பித்துள்ளது.




Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 26 July 2014

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 809 பேருக்கு ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 809 பேருக்கு ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2013-2014ம் ஆண்டு குரூப் 4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டதில் 1395 பேர் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவ தற்கான கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 809 பேர் பங்கேற்றனர். இவர் களுக்கு அவரவர் முகவரியில் குறிப்பிட்டி ருந்த மாவட்டத்தில் இருந்த காலிப் பணியிடங்களை தேர்வு செய்து அதற்கான பணி நியமன ஆணைகளை வெள்ளிக் கிழமையே பெற்றுக்கொண்டனர். மேலும் பணியிடங்களை தேர்வு செய்யாமல் உள்ளவர்களுக்கு அவரவர் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 25 July 2014

தமிழகம் முழுவதும் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வின் அதிகாரபூர்வ கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி-ஆல் வெளியிடப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 20-ந்தேதி குரூப்-1 முதல்நிலைத்தேர்வு நடத்தப் பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்த விளக்கங்களை உரிய ஆவணங்களுடன் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு ஜூலை 31-ந்தேதிக்குள் அனுப்புமாறும், அதன்பிறகு வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கிளிக் செய்யவும்...
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 July 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார். "மத்திய அரசின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தற்போது வாரத்தில் ஐந்து வேலை நாள்கள் உள்ளன. அதை வாரம் ஆறு நாள்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. அதுபோன்ற கோரிக்கைகளையோ, யோசனையையோ மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. அதே போல் ஈட்டிய விடுப்பு, சாதாரண விடுப்பு ஆகியவற்றை உயர்த்தும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படியும், 23-8-2010 நாளிட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவிக்கையின் அடிப்படையில் 1 முதல் 8 வகுப்பு வரை நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அரசு அதிகாரம் பெற்ற அமைப்பால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண் 60 சதவீதம் இருக்க வேண்டும் எனவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசாணை நிலை எண் 181, நாள் 15-11-2011-ன்படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்தும் முகவாண்மையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் 12-7-2012 அன்று தகுதித்தேர்வை நடத்தியது, இதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 448 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 0.34 சதவீதம் ஆகும்.

தேர்ச்சி விகிதம் மிக குறைந்த அளவே இருந்ததால், ஆசிரியர் தேர்வு வாரியம் 14-10-2012 அன்று துணைத் தகுதித்தேர்வினை நடத்தியது. இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதியதில், 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2.99 சதவீதம் ஆகும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் தகுதித் தேர்வினை நடத்தியது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர்களில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 4 லட்சத்து 311 பேரில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை இடஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசாணை நிலை எண் 25, பள்ளி கல்வித்துறை நாள் 6-2-2014-ல், 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைத்தும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முகமதியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய தேர்வர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இச்சலுகையினால் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் ஒன்றில், 17 ஆயிரத்து 996 பேர்களும், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர்களும் ஆக மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேர்களுடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 183 பேர்கள் ஆக மொத்தம் 72 ஆயிரத்து 701 பேர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என பணிநாடுநர்களால் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் முடிவுற்ற நிலையில், தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடர் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் பாலபாரதி, ‘‘முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் தளர்வு அளித்த பிறகு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 72 ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 10 ஆயிரம் காலி பணியிடங்களைத்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. வெயிட்டேஜ் என்று வரும்போது அதில் பிளஸ்-2 மதிப்பெண்ணும் சேர்க்கப்படுகிறது. நாம் அப்போது படிக்கும்போது பிளஸ்-2-வில் மாவட்டத்திற்கு ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். எனவே, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘அரசின் விதிமுறையை மாற்றும் கோரிக்கையை உறுப்பினர் இங்கே வைக்கிறார். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக 80 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளும் அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. வழக்குகளின் நகல்கள் பெறப்பட்டவுடன், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து, கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும். இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்றார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 23 July 2014

TRB LATEST NEWS | போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருகிறது.

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது. அதிக வேலை பளு: டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இணையதளம் : இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுவாக குறையும். விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளது. இதுவே, இணையதள முறைக்கு மாறினால், பதிவு கட்டணமாக, மிக குறைந்த தொகையை வசூலிக்க, வாய்ப்பு ஏற்படும். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும், டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று, பல வசதிகள் இருப்பதால், அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது ஆய்வு நடந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில், 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய, அக்டோபர், 26ம் தேதி, போட்டி தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள்...: இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. எனவே, இந்த தேர்வில் இருந்து, இணையதள பதிவு முறையை, டி.ஆர்.பி., அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது, இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.எட்., படிப்பும், தகுதியாக நியமிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு, இரு ஆண்டுகள் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர், மூன்று ஆண்டு படிப்பான பி.லிட்., முடித்தால், பட்டதாரி ஆசிரியர்களாகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோவை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது. இதில், சில ஆண்டுகளுக்கு முன், ஏராளமான தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு எழுதுவதில், தாமதம் ஏற்பட்டது.

உதாரணமாக, 2007--08 கல்வியாண்டில், இரண்டாமாண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, 2008ம் ஆண்டு மே மாதத்துக்குள் தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளை தருவது வழக்கம். ஆனால், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்தவர்களுக்கு, பல்வேறு குளறுபடிகளால், கல்வியாண்டுக்கான தேர்வு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது.இதனால், டிசம்பர் அல்லது ஜனவரியில், தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற பின், ஒரு கல்வியாண்டை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தில், ஏராளமானோர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்பில் சேர்ந்தனர்.படித்து முடித்து, தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும், வெற்றி பெற்று, தங்களுக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, அதிர்ச்சியே, பதிலாக கிடைத்துள்ளது.செப்டம்பர் மாதத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோவை முடித்துவிட்டு, அதே கல்வியாண்டில், பி.லிட்., சேர்ந்திருப்பதால், அந்த பட்டம் செல்லாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், ஏராளமானோர், அதிர்ச்சியில், என்ன செய்வதென தெரியாமல், திகைத்து நிற்கின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2007--08ம் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ சேர்ந்து, 2008--09ம் கல்வியாண்டில், படிப்பை முடித்தோம். ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டதால், செப்டம்பரில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. படித்த படிப்புக்கான காலம், 2008--09வுடன் முடிவடைந்துவிட்டதால், 2009--10க்கான கல்வியாண்டில், பி.லிட்., சேர்த்துக்கொண்டனர். அப்போது, பல்கலைக்கழகம், தேர்வுத்துறை உள்ளிட்டவை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.தற்போது, இத்தனை ஆண்டு காத்திருப்பில், அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டால், தகுதியில்லை என திருப்பி அனுப்புகின்றனர். இதற்கு, தேர்வர் எப்படி பொறுப்பாக முடியும் என தெரியவில்லை. அரசு நிறுவனமான ஆசிரியர் தேர்வுத்துறை, தாமதமாக தேர்வு நடத்தியமைக்கு, எங்கள் வாழ்க்கை பலியாகிறது.கடந்த ஆண்டில், இதேபோன்று படித்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், பணி வழங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் எங்களுக்கு மட்டும் பணிவாய்ப்பு மறுக்கப்படுவது, எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றுவது தொடர்பாக, குழு அளித்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றுவது தொடர்பாக, குழு அளித்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி: தமிழகத்தில் மட்டும், 'ஆதிதிராவிடர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில், எஸ்.சி., எஸ்.டி., என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்திலும், எஸ்.சி., என்றே அழைக்கலாம். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட, எஸ்.சி., என்றே அழைக்கின்றனர்.

இந்திய குடியரசு கட்சி, செ.கு.தமிழரசன்: தமிழகத்தில் ஆதிதிராவிடர் என்பதுபோல், ஆந்திராவில் ஆதி ஆந்திரர், கர்நாடகாவில் ஆதி கன்னடர் உள்ளனர்.

கிருஷ்ணசாமி: துறைக்கு அந்த பெயர் இல்லை. துறை பெயரை மாற்ற வேண்டாம்.

அமைச்சர் சுப்ரமணியன்: உறுப்பினர் கிருஷ்ணசாமி, கடந்த ஆண்டும், இதே கோரிக்கையை வலியுறுத்தினார். 76 உட்பிரிவுகளை உள்ளடக்கிய, ஆதிதிராவிடர்களுக்கு, வேறு பெயர் வைக்கலாமா என, மக்கள் கருத்துக்களை அறிய, குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அந்த அறிக்கை, அரசு பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.

ஆதிதிராவிட, பழங்குடியின பொறியியல் பட்டதாரிகள், மேற்படிப்புக்காக ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.சாரணர் இயக்கம் தமிழக சட்டசபையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர் ந.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:–ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சாரணர் சாரணியர் இயக்கத்தை சீரிய முறையில் செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம், 207 பள்ளிகளுக்கு ரூ.1.14 கோடி செலவினம் மேற்கொள்ளப்படும்.சோலார் விளக்கு தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 96 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.இந்த துறையின் கீழ் மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் 13 ஆயிரத்து 154 மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ரூ.550 மதிப்புள்ள ஒரு சூரிய எரிசக்தியுடன் கூடிய ‘‘சோலார்’’ விளக்கு வழங்கப்படும்.ஆயத்த பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவ, மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வீதம், 207 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பணம் அளிக்கப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள், ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. போன்ற மேற்படிப்பில் சேர, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல்பட்டதாரிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் அந்த தேர்வைஎழுதுவதற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் ஆயத்த பயிற்சி அளிக்கப்படும்.முதலுதவி பெட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக ஆயிரத்து 346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின உண்டி உறைவிட பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவி பெட்டி வழங்கப்படும்.இந்த துறையின் கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75 மேல்நிலைப்பள்ளிகளில் 32 ஆயிரத்து 112 மாணவிகள் படிக்கின்றனர். அவர்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு ‘‘நாப்கின் பர்னர்’’ என்ற சுகாதார குட்டை தகளி வழங்கப்படும். வட்டாட்சியர் அலுவலகம் நீலகிரி மாவட்டத்தில் 32 ஆயிரத்து 813 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மாவட்ட தலைநகரான உதகமண்டலத்திலிருந்து கூடலூர் மற்றும் குன்னூர் பகுதிகள் 40 கி.மீ. தொலைவில் உள்ளதால், அரசின் நலத்திட்டங்கள் பழங்குடியின மக்களை எளிதில் சென்றடைய குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவிக்கப்படும். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 207 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கிடையே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்வு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும்ஆயிரத்து 397 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, 100 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 107 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் வாயிலாக யோகா பயிற்சி அளிக்கப்படும். இந்திய குடிமைப்பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி–1) முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் பழங்குடியின தேர்வர்களுக்கு, முதன்மைத் தேர்வினை எழுத ஆகும் இடைநிகழ் செலவினை மேற்கொள்ள ஏதுவாக ஒரு தேர்வருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை, மத்திய அரசின் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 22 July 2014

வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படஉள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாககுறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம்தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாகஇந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 50 லட்சம் ஊழியர்களும், லோக்பால் சட்டத்தின்கீழ் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களுடைய சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப். எஸ். உள்பட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பெயரில், மனைவி அல்லதுகணவன், மைனர் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து விவரங்கள், முதலீட்டு விவரங்கள், கடன் கொடுத்த விவரங்கள், அவர்களுடைய பெயரில் உள்ள கடன் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும். அவர்களுடைய பெயர்களில் உள்ள மோட்டார் வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், படகுகள், தங்கம், வெள்ளி, கரன்சிகள் உள்ளிட்ட விவரங்களை யும், அசையும், அசையா சொத்துகளின் விவரங்களையும் தர வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தின்கீழ் புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் (சொத்துகள், கடன்கள் குறித்து ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது, விதிவிலக்குகள்) விதிகள், 2014ன்கீழ் இந்த அறிக்கையை மத்திய பணியாளர்கள்மற்றும் பயிற்சி துறை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்துக்கான அறிக்கையை அந்த ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஊழியரின் 4 மாத அடிப்படை சம்பளம் அல்லது ரூ.2 லட்சம், இதில் எது அதிகமோ அந்த தொகைக்கான சொத்துகளின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டாம். இந்த விதிவிலக்கை, சம்பந்தபட்ட அதிகார அமைப்பு அளிக்கலாம். இந்த விதிகளின்படி ஏற்கனவே சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்திருந்தாலும், 2014 ஆகஸ்ட் 1ம் தேதிக்கான அறிக்கையை செப்டம்பர் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ‘பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள். அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழி எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது. அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டப் படிப்புக்கு 2வது கட்ட கவுன்சலிங்

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்பட 7 அரசு சட்டக் கல்லூரிகளில், 5 ஆண்டு பிஏ.பிஎல் படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், இந்த கல்லூரி களில் பிஏ.பிஎல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு முதல்கட்ட கவுன்சலிங் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், 324 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி இடங்களை நிரப்புவதற்கான 2வது கட்ட கவுன்சலிங், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் (செவ்வாய், புதன்) நடை பெறுகிறது. காலை 10 மணிக்கு கவுன்சலிங் தொடங்கும். மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை துணைவேந்தர் பி.வணங்காமுடி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதிவரை நடைபெறுகின்றன.

சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதிவரை நடைபெறுகின்றன. சுருக்கெழுத்து உயர்வேகத் தேர்வு சென்னை தரமணியில் உள்ள மாநில வணிகவியல் கல்வி நிறுவனத்தில் மட்டும் நடத் தப்படுகிறது. முதல் 2 நாட்கள் சுருக்கெழுத்து உயர்வேக தேர்வும் அதைத் தொடர்ந்து இளநிலை, முதுநிலை சுருக்கெழுத்து தட்டச்சு தேர்வுகளும் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம்தேதி வரை பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வு வாரியத்தின் தலைவருமான குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 July 2014

‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. ‘சி-டெட்’ தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பிஎட் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை உண்டு. தகுதியுடைய ஆசிரியர்கள் www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த ஆகஸ்ட் 6ம் தேதி கடைசி நாள். தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நாடு முழு வதும் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட இடத்தில் ‘சி-டெட்’ தேர்வுக்கு, ஆன்லைனில் இலவசமாக விண்ணப் பிக்க சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த 3 கல்வியாண்டுகளாக தமிழகத்தில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையை கணக்கிட்டு வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6ம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது. அதனைதொடர்ந்து கடந்த 3 கல்வியாண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை குறைவு, தமிழ்வழி மாணவர்களை ஆங்கில வழி பள்ளியில் சேர்ப்பது போன்ற பிரச்னைகளும் இருந்து வருகிறது. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை, புத்தகங்கள் தட்டுப்பாடு போன்றவையும் ஆங்கில வழி வகுப்புகளை செயல்படுத்துவதில் சவாலாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 கல்வியாண்டுகளாக தமிழகத்தில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையை கணக்கிட்டு வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரால் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஆங்கில பள்ளிகள் விபரத்தை மாவட்ட அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி அடிப்படையில் ஒன்றிய வாரியாக ஆங்கில வழி வகுப்புகள் உள்ள பள்ளிகள், மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. 2012&13, 2013&14, 2014&15 ஆகிய கல்வியாண்டுகளில் உள்ள விவரங்களை கல்வி அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் ஆங்கில வழி பள்ளிகள் முறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது.தேர்வுக்கான கீ ஆன்சர் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 89,433 (55 சதவீதம்) பேர் தேர்வு எழுதவரவில்லை. சென்னையில் 21,692 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இவ்வளவு பேர் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உயர் பதவிகளான துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஜூலை 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று குரூப் 1 முதல்நிலை தேர்வு நடந்தது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 35,675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி என மொத்தம் 108 அரசு பள்ளிகள், கல்லூரிகளில் இத்தேர்வு நடந்தது.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுதுவதற்கு பல மையங்களில் ஆண்களும், பெண்களும் காலை 8 மணிக்கே வரத் தொடங்கினர். இதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி அடிப்படை தகுதியாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வை ஏராளமான முதுநிலை, மருத்துவம், இன்ஜினியரிங் படித்த பட்டதாரி மாணவ& மாணவிகளும் எழுதினர்.

பல பெண்கள் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் குழந்தையை கணவன்மார்கள் பார்த்துக் கொண்டனர். தேர்வு எழுதுவோர், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், தலைமை கண்காணிப்பாளர் 570 பேர், கண்காணிப்பாளர் 7009 பேர், ஆய்வு அதிகாரிகள் 570 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.சென்னையில் மட்டும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கண்காணிப்பில் தேர்வுகள் நடந்தது. பல்வேறு மையங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. தேர்வு நடந்த அனைத்து இடங்களிலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் என்று கண்டறியப்பட்ட மையங்கள் வெப் கேமரா மூலம் சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட்டது. தேர்வு நடைபெற்ற அனைத்து பள்ளிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் திருவல்லிக்கேணியில் உள்ள சி.எஸ்.ஐ. கெல்லட் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி ஷோபனா உடன் இருந்தார்.

தேர்வில் பொது அறிவியலில் 150 வினாக்களும், ஒருவரின் சிந்தனைத்திறன், பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறனை ஆய்வு செய்யும் வகையில் 50 வினாக்களும் என 200 வினாக்கள் கேட்கப்பட்டன. மொத்தம் 300 மதிப்பெண்கள். தேர்வு எழுதி விட்டு வந்தவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 55 சதவீதம் பேர் அதாவது 89,433 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.சென்னையில் 35, 675 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 42 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 14,983 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 21,692(48 சதவீதம்) பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்று டி.என்.பி. எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வு நடந்த பல மைய ங்கள் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த அளவுக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளதை கண்டு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு பேர் ஆப்சென்ட் ஆக என்ன காரணம் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர்(பொறுப்பு) பால சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

குரூப் 1 பதவியில் 79 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது அரசின் கையில்தான் உள்ளது. தேர்வுக்கான கீ ஆன்சர் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். அதில், ஏதேனும் ஆட்சேபம் இருப்பதாக தேர்வாளர்கள் தெரிவித்தால் அதுகுறித்து கமிட்டி ஆய்வு செய்து மறு கீஆன்சர் வெளியிடப்படும். அதன் பின்னர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். தேர்வுக்கான ரிசல்ட்டை 2 அல்லது 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும். ஒரு காலி பணியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 4,000 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர், மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 20 July 2014

“இந்திய பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடுபட வேண்டும்” என்று திருச்சி என்.ஐ.டி. பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

“இந்திய பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடுபட வேண்டும்” என்று திருச்சி என்.ஐ.டி. பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.பிரணாப் முகர்ஜிதிருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்.ஐ.டி) ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நேற்று மாலை நடைபெற்றது. தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிர்வாகக்குழு தலைவர் ராஜாராம் நித்தியானந்தா வரவேற்று பேசினார். திருச்சி என்.ஐ.டி இயக்குனர் சுந்தர்ராஜன் பொன்விழா ஆண்டறிக்கையை படித்தார்.இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-இந்திய பொறியியல் துறையில் திருச்சி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பெற்று உள்ளது. திருச்சி அருகில் காவிரியின் குறுக்கே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை நீர்ப்பாசன ஒழுங்குமுறையில் உலக அளவில் சிறப்பான இடத்தை பெற்று உள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் உச்சியில் 90 டன் எடை உள்ள ஒற்றைக்கல்லை வைத்து இருப்பது கட்டுமான தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இரண்டாவது மைல்கல் ஆகும்.சர்வதேச தரம்பொறியியல் துறையை பொறுத்தவரை இந்திய அளவில் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. ஆனால் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் எடுத்த புள்ளி விவர கணக்கின்படி முதல் 200 நிறுவனங்களில் இந்திய பொறியியல் கல்வி கூடங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இது தான் நிலைமை. எனவே பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த நாம் பாடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்.தற்போது நமது நாட்டின் சில ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் 50 முன்னணி சிவில் மற்றும் மின்னியல் பொறியியல் துறையில் இடம் பெற்று உள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் முன்னணியில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் ஐந்து கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. ஆசிய அளவில் முதல் 100 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களில், இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது மூன்றில் இருந்து 10 ஆக உயர்ந்து உள்ளது. எனவே சர்வதேச அளவில் இந்திய பொறியியல் துறையின் தரத்தை உயர்த்திக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சர்வதேச தரத்தில் இந்திய பொறியியல் கல்வியை உயர்த்துவதற்கான பூர்வாங்க பணிகளை ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.சவால்கள்பொறியியல் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் குறுகிய கால கல்வி ஒப்பந்தங்களை செய்து கொள்ளவேண்டும். நமது பொறியியல் தொழில்நுட்பம் சாதாரண விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும் பயன்படும் அளவில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் பொறியியல் ஆசிரியர்களும், மாணவர்களும் இறங்கவேண்டும். திருச்சி என்.ஐ.டி.யில் ஏற்கனவே கிராமப்புற தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.கவர்னர் ரோசய்யாவிழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா வாழ்த்தி பேசினார். என்.ஐ.டி. பொன்விழா மலரை கவர்னர் ரோசய்யா வெளியிட அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செம்மொழி வாரம் கொண்டாட கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஆகஸ்டு 7-ந் தேதியில் இருந்து 13-ந் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் கடிதம் எழுதியிருப்பதாக தெரிய வந்தது.மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி வாரியப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.), கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) ஆகியவை இந்த கொண்டாட்டத்தை நடத்தும்போது, மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு நிலைகளிலும் அதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.இங்கு பொருத்தமற்றதுபழம்பெரும் மொழியான தமிழ் மொழியின் அடிப்படையில், தமிழகம் பாரம்பரிய கலாசாரங்களைக் கொண்டது என்பது உங்களுக்கு தெரியும். இங்கு சமூகநீதி மற்றும் மொழி ஆகியவை வலிமையான இயக்கமாக உள்ளன.எனவே சமஸ்கிருத வாரம் என்ற ஒரு கொண்டாட்டத்தை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் தமிழகத்தில் கொண்டாடுவது மிகவும் பொருத்தமற்றது. அந்தந்த மாநிலத்தின் மொழிவாரியான பாரம்பரியத்தின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் செம்மொழி வாரம் என்ற ஒரு நிகழ்வை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமாக அமையலாம்.கடிதத்தில் திருத்தம்எனவே அந்தந்த மாநிலங்கள் மற்றும் அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஆகியவை, அந்த மாநிலத்தில் உள்ள கலாசாரம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டாட்ட விழாக்களை நடத்துவதற்கு ஏதுவான வகையில் கடிதத்தில் மாற்றங் களை செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.இந்தியா போன்ற பல பிரிவுகளைக் கொண்ட நாட்டில், இதுபோன்ற விழாக்களை நடத்துவதுதான் கலாசார மற்றும் மொழி உணர்வுகளுக்கு பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 30 மற்றும் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை., அறிவித்துள்ளது. பி.டெக் படிப்பிற்கான கவுன்சிலில் ஆகஸ்ட்1ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

கால்நடை மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 30 மற்றும் 31ல் நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை., அறிவித்துள்ளது. பி.டெக் படிப்பிற்கான கவுன்சிலில் ஆகஸ்ட்1ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அவை விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவை விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் 253 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் 253 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியில் ஏற்பட்டுள்ள 16 பிடிஎஸ் காலியிடங்களுக்கும், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள 18 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1020 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்று சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள 14 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், அண்மையில் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்த திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், எம்.சி.ஐ. அனுமதி அளித்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியின் 43 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியின் 21 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை அளித்து வரும் சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவ கல்லூரியின் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ற 7 சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் 25 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 253 எம்.பி.பி.எஸ். இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வகுப்பு வாரியாக காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் தமிழக சுகாதார துறையின் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில்,மாநிலங்கள் அளவில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.

தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது. முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால், தமிழகம் தான், 'நெம்பர் - 1' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த விவரங்கள், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க புத்தகத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேசிய கல்வி திட்டமிடல் மேலாண்மை பல்கலைக்கழகம் (நியூபா), 2012 - 13ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களின்படி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின், கல்வி முன்னேற்றக் குறியீட்டு தரத்தை, பட்டியலாக வெளியிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் கல்வித்தரம் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், சராசரி குறியீடு மற்றும் தரம் (ரேங்க்) அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய அளவில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக, அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, கொள்கை விளக்க புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முதல் இடத்தை, லட்சத்தீவுகளும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரியும் பிடித்துள்ளன. தேசிய அளவில், மூன்றாவது இடத்தை, தமிழகம் பிடித்திருந்தாலும், யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களுக்குள், தமிழகம், முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு, புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகக் கூறப்படும் குஜராத்திற்கு, 18வது இடம் தான் கிடைத்துள்ளது.
'டாப்' 10 மாநிலங்கள்
1. லட்சத்தீவுகள்
2. புதுச்சேரி
3. தமிழகம்
4. சிக்கிம்
5. கர்நாடகா
6. பஞ்சாப்
7. டாமன் மற்றும் டையூ
8. மகாராஷ்டிரா
9. மணிப்பூர்
10. மிசோரம்

கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகக் கூறப்படும் கேரளா, 14வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு, 23வது இடம் கிடைத்துள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

'தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால், அம்மாநில பாடத்திட்டங்கள், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கிறதா என ஆய்வு செய்த பின், பிற மாநில சான்றிதழ்களை அங்கீகரிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட, மூன்று மாநில எல்லையோர தமிழக மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்கள், அண்டை மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். பின், வேலை வாய்ப்பிற்காக, தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக, 'பிற மாநில பாடத்திட்டம், தமிழக பாடத்திட்டத்திற்கு இணையானவை' என, அம்மாநிலங்களில் தரப்பட்ட சான்றிதழுக்கு, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி துறையிடம், ஒப்புதல் பெற வேண்டும். இதன்படி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி துறையும், ஒப்புதல் வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த, 2008 - 09ல், தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிக்கு, புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, புதிய பாட திட்டத்திற்கு நிகராக, அண்டை மாநில பாடத்திட்டங்கள் இருக்காது என நினைத்து, வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு,ஒப்புதல் அங்கீகாரம் வழங்குவதை, தற்காலிகமாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனரகம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த ஏராளமான மாணவர்கள், தமிழக ஆசிரியர் பயிற்சி கல்வி துறைக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, அண்டை மாநில பாட திட்டங்கள், தமிழக பாட திட்டங்களுக்கு நிகராக இருக்கிறதா என, இயக்குனரகம்,ஆய்வு செய்தது. இதில், தமிழக பாட திட்டங்களுக்கு இணையாக, அண்டை மாநில பாடத்திட்டங்கள் இருப்பது, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கலாம் என, தமிழக அரசுக்கு, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சித்துறை இயக்குனர் பரிந்துரை செய்தார். இதை ஏற்று, அண்டை மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆய்வுக்குப் பின், துறை இயக்குனர், ஒப்புதல் அளிக்கலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, புதிய அரசாணையையும், தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, விரைவில், தமிழக அரசின் அங்கீகாரம் அளிக்கப்படும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 19 July 2014

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 14 | வீட்டுக்கொரு நூலகம்.

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 14 | வீட்டுக்கொரு நூலகம்.

அனைத்துக் குழந்தைகளும் புத்தங்களைப் படித்துத் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கம் ஆகும். அந்நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள் 6.00 இலட்சம் ரூபா செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 12 | நடமாடும் நூலகங்கள் அமைத்தல்.

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 12 | நடமாடும் நூலகங்கள் அமைத்தல்.

தற்போது தமிழ்நாட்டில் 10 நடமாடும் நூலகங்கள் இயங்கி வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, நூலகத்திற்கு வர இயலாத முதியவர்கள், உடல்நலமற்றோர், இல்லத்தரசிகள் போன்றோர் புத்தகங்கள், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்களைப் படிக்கும் வகையில், வாகனங்கள் வாயிலாக தருமபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் 70.00 இலட்சம் ரூபாய் செலவில் “நடமாடும் நூலகங்கள்” அறிமுகப்படுத்தப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 4 | பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளித்தல்.

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 4 | பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி அளித்தல்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, நலன் மற்றும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டு பல முன்னோடித் திட்டங்களை தீட்டி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, 2014-2015ஆம் கல்வியாண்டில் பெண் குழந்தைகள் குறிப்பாக பழங்குடியினத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் தங்களைக் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும் பொருட்டு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நீலகிரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 482 அரசுப் பள்ளிகளில் பயிலும் 4,782 பெண் குழந்தைகளுக்குக் கராத்தே பயிற்சி 14 இலட்சம் ரூபாய் செலவில் அளிக்கப்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 11 | அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு வழங்குதல்.

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை | அறிவிப்பு 11 | அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு வழங்குதல்.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கோடை விடுமுறையின்போதும் நிர்வாக நலன் கருதி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். எனவே, இவர்கள் விடுமுறையற்ற (Non Vacation Department) பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் விடுமுறைக் காலங்களில் பள்ளிகளுக்கு வருகை புரிவதில்லை. எனவே, இவர்கள் விடுமுறை உள்ள (Vacation Department) பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர். தற்போது ஆசிரியர்களைப் போன்று விடுமுறையுள்ள பணியாளர்களாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்கள் கருதப்படுகின்றனர். ஆனால், பள்ளி மற்றும் அங்கிருக்கும் தளவாடப் பொருள்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை நாட்களிலும் காவலர்கள் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே, காவலர்களை விடுமுறையற்ற (Non Vacation Department)பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினை ஈட்டிய விடுப்பாகக் கணக்கிட்டு, தற்போது ஓராண்டிற்கு வழங்கப்படும் 17 நாட்கள் ஈட்டியவிடுப்பினை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional List of Candidates Called for Interview


PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR INTERVIEW

ELECTRONICS SCIENCE AND ELECTRONICS COMMUNICATIONS
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 16 July 2014

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால்,அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 15 July 2014

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு என, அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, தேர்வுப் பட்டியல் வந்ததும், உடனடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற 43,242 பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான இறுதி தேர்வுப் பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சி பெற்ற 43,242 பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான இறுதி தேர்வுப் பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. 

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி ருப்பதாவது: 

கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்குதேர்வு செய்யப்படாதவர்கள், 2013 தகுதித்தேர்வு மற்றும் சிறப்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் (தகுதித்தேர்வு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு ஆகிய மதிப்பெண்களின் தொகுப்பு) ஆசிரியர்தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (wwwtrb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் மட்டும் தங்கள் மாவட்டத்துக்கு குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் வந்து சரி செய்துகொள்ள வேண்டும். மாவட்ட வாரியான முகாம் விவரம் மற்றும் தேவையான ஆவணங்களின் விவரத்தை இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படாத விண்ணப்பதாரர்கள், எக்காரணம் கொண்டும் முகாம் மையங்களுக்கு செல்லத்தேவையில்லை. 

மேலும் 2012, 2013-ம் ஆண்டு களில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப் படுகிறது. அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்துக்குரிய மையத்துக்கு குறிப்பிட்ட நாட்களில் தேவை யான ஆவணங்களுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் (பட்டதாரி ஆசிரியர்கள்) வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்ணில் திருத்தம் செய்ய வேண்டியவர்கள் நேரில் முறையிட குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தேர்வு பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் ஜி.அறிவொளியிடம் கேட்டபோது, “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10,726 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும்” என்றார். கடந்த 2012, 2013 தகுதித் தேர்விலும் அண்மையில் நடத்தப் பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தாள்-2-ல் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) மொத்தம் 52,631 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 9,389 பேருக்கு அரசுப் பணி கிடைத்துவிட்டது. எஞ்சிய 43,242 பேர் வேலைக் காக காத்திருக்கின்றனர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் விவரப்படி 10,726 பேருக்கு வேலை கிடைத்துவிடும்.
TNTET NOTIFICATION - 2014
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 14 July 2014

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிட விவரங்களையும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். தமிழ் - 782, ஆங்கிலம் - 2822, கணிதம் - 911, இயற்பியல் - 605 வேதியியல் - 605, தாவரவியல் - 260, விலங்கியல் - 260 காலிப்பணியிடங்கள் உள்ளன. வரலாறு - 3592, புவியியல் - 899-ல் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தேர்வு வாரியம் தகவல்

கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்விவரங்களை சரிபார்க்கலாம்.2012-ல் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் விவரம் சரிபார்க்கலாம்.2013-ல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்ததில் தகுதியானோர் விவரம் வெளியீடு2014-ல் சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் சான்று சாரிபார்த்ததில்தகுதியானோர் விவரம்...பணியிடத்திற்கு தகுதியானோர் விவரம் www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.விவரத்தில் திருத்தம் இருப்பவர்கள் மட்டும் நேரில் வர வேண்டிய மையம், தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.www.trb.tn.nic.in- என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் அறியலாம். 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.சான்று சரிபார்ப்பின்போது அரசுப் பணியில் சேர தேர்வர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.விருப்பத்தை ஆசிரியர் பணி தெரிவிற்கான விண்ணப்பமாக தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ளும்.
TNTET NOTIFICATION - 2014
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 79 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு, வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்'டை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 79 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு, வரும், 20ம் தேதி நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்'டை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் - 3, டி.எஸ்.பி., - 33, வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் - 33 மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில், உதவி இயக்குனர் - 10 என, 79 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.உரிய முறையில் விண்ணப்பித்தும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், உரிய விவரங்களை, contacttnpsc.@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அதிக வயது பிரச்னை காரணமாக, 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.

*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இவர்களுக்கான காலக்கெடு, அடுத்த ஆண்டுடன் முடிவதால், இவர்கள், தொடர்ந்து பணியில் நீடிக்க முடியுமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதிக்குப் பின், அரசு பள்ளிகளில் நியமனம் ஆன ஆசிரியர் அனைவருமே, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள். 2012 டி.இ.டி., தேர்வில், 2,448 பேர், அதே ஆண்டின் இறுதியில் நடந்த சிறப்பு டி.இ.டி., தேர்வில், 21 ஆயிரம் பேர், அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றதற்குப் பின்னரே, பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். எனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பிரச்னை இல்லை.தனியார் பள்ளிகளில், மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின், எத்தனை ஆசிரியர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரம், மாவட்ட வாரியாக சேகரிக்கப்படும்.இவர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்றால், கண்டிப்பாக, கால அவகாசம் நீட்டிப்பாகும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 12 July 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477 பேர் எழுதினர். தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,477 பேர் எழுதினர். தேர்வு முடிவு ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற 933 பேருக்கு ஜூலை 1, 2-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருத்தப்பட்ட கீ ஆன்சர் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. திருத்தப்பட்ட தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தெரிந்துகொள்ளலாம். புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16-ம் தேதி நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம், தன்விவரக்குறிப்பு, அடையாள படிவம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் இதற்கு வரத் தேவையில்லை.சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகள் தங்கள் சார்பில் யாராவது ஒருவரை பங்கேற்கச் செய்யலாம். இதற்காக விண்ணப்பதாரர் கையெழுத்திட்டு வழங்கிய அதிகார கடிதத்தை சான்றிதழ் சரிபார்ப்பின்போது அந்த நபர் சமர்ப்பிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 6 July 2014

ஆசிரியர் தேர்வு பட்டியலை விரைந்து வெளியிட டி.ஆர்.பி., நடவடிக்கை .

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது. டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில் உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார். அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், வெயிட்டேஜ் கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார். இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, தேர்வு பட்டியலை வெளியிட இனி எங்களுக்கு எந்த தடையும் கிடையாது. ஆசிரியர் தேர்வுக்கான புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில் தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE