TRB

TNTET

Wednesday, 6 August 2014

சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் திறனறித் தேர்வில் ஆங்கில விடைகளுக்கான மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்றும், 2011-ல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் மீண்டும் 2015-ல் எழுதலாம் எனவும் அறிவித்தார்.

சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று நேற்று முன்தினம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் திறனறித் தேர்வில் ஆங்கில விடைகளுக்கான
மதிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என்றும், 2011-ல் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் மீண்டும் 2015-ல் எழுதலாம் எனவும் அறிவித்தார்.திருப்தியானபதிலாக இல்லைஇந்த பிரச்சினை நேற்றும் பாராளுமன்ற இரு சபைகளிலும் எதிரொலித்தது. நேற்று டெல்லி மேல்-சபை கூடியதும் சபைத் தலைவர் அமீது அன்சாரி கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார். அப்போது காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், அ.தி.மு.க., தி.மு.க., ஐக்கிய ஜனதாதள எம்.பி.க்கள், “முதல்நாள் சபையில் சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வு குறித்து மத்திய மந்திரி அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. எனவே கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இதுபற்றி விவாதிக்க வேண்டும்” என்று ஒரே நேரத்தில் கோரிக்கை விடுத்தனர்.மேலும், இப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இது லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம் என்பதால் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கும் உத்தரவிடவேண்டும். தற்போது இந்த பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். மேலும் வருகிற 24-ந் தேதி நடைபெற இருக்கும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கைகுறிப்பாக அ.தி.மு.க., தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தென்னிந்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து திறனறித் தேர்வையே ரத்து செய்ய வேண்டும். சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகள் தமிழ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என்று கோரினர்.அப்போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை நோக்கிச் சென்று மத்திய அரசு இப்பிரச்சினை தொடர்பாக பதில் அளிக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் கேள்வித் தாள்களை தமிழ் மொழியிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.துண்டு சீட்டில் குறிப்புசபையின் மையப்பகுதிக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் வந்ததால் அவர்களை அமீது அன்சாரி தங்களது இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இது மேல்-சபை எம்.பி.க் களுக்கு அழகல்ல என்று அவர் கூறியதுடன் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயனுக்கு துண்டு சீட்டில் ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்களை மைத்ரேயன் இருக்கைக்கு வருமாறு கூறி அழைத்துக்கொண்டார்.அனைத்து மொழிகளிலும் நடத்தவேண்டும் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில், சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலை தேர்வுகள் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஆங்கிலமும், இந்தியும் தெரியாத மாணவர்களுக்கு தேர்வை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்றார்.அப்போது பா.ஜனதா தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, இப்பிரச்சினை ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் உருவானது. அதை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் பிடியில் சிக்க வைத்துவிட்டது என்றார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சபை ஒத்திவைப்புஅப்போது சபைத் தலைவர் அமீது அன்சாரி குறுக்கிட்டு, இப்பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் முன் அறிவிப்பு தரவேண்டும் என்றார். மேலும், நீங்கள் கேள்வி நேரத்தை விரும்பாவிட்டால் அதற்காக ஒரு குழு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறேன். அதில் கேள்வி நேரம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை தெரிவியுங்கள் என்றார்.ஆனாலும் சபைத் தலைவரின் பேச்சைக் கேட்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பகல் 12 மணி வரை அரை மணி நேரத்துக்கு சபையை அமீது அன்சாரி ஒத்திவைத்தார்.பாராளுமன்றத்திலும் அமளிபாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை காரணமாக நேற்று கடும் அமளி ஏற்பட்டது. சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வு குறித்து பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்பிய சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி.க் கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று சிவில் சர்வீசஸ் திறனறித் தேர்வை ரத்து செய்யவேண்டும், இது குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது பற்றி முன்கூட்டியே அறிவிப்பு கொடுத்தால்தான் விவாதிப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என்று கூறினார். சபாநாயகரின் பதிலில் திருப்தி அடையாத எதிர்க் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அங்கு நின்றவாறே கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். இந்த அமளியால் பகல் 12.30 மணி வரை 15 நிமிட நேரத்துக்கு சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news