TRB

Wednesday, 3 September 2014

டிசம்பர் மாதம் நடத்தப்படும் துறைத் தேர்வுக்கு இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு தடவை (மே மற்றும் டிசம்பர்) நடத்தப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான 2-வது துறைத் தேர்வு டிசம்பர் 23-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி
வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் 9 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் தேர்வு நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் (www.tnpsc.gov.in) 1-ந் தேதி தொடங்கியது. இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஹால் டிக்கெட்டுகளை டிசம்பர் 12 முதல் 31-ந் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.