TRB

TNTET

Tuesday, 16 September 2014

புதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐதராபாத் மண்டல நவோதயா வித்யாலயா சமிதி துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்
இயங்கி வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பில் மாணவர்கள் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்றாம், நான்காம் வகுப்புகளில் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று ஐந்தாம் வகுப்பில் அரசு அங்கீகரித்த பள்ளியில் படிப்பவராக இருத்தல் வேண்டும். 1.05.2002 ஆண்டு முதல் 30.04.2006 வரை பிறந்தவராக இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பில் சேர்வதற்கான தெரிவு நிலை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடக்க உள்ளது. தேர்வினை மாணவர் விரும்பும் மொழியில் எழுதலாம். தெரிவு நிலை தேர்வினை பற்றிய கையேடு முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலகங்கள், ஜவஹர் நவோதயா பள்ளி அலுவலகம், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிகளில் கிடைக்கும். விண்ணப்ப படிவத்தை www.navodayahyd.gov.in, www.jnvpuducherry.gov.in என்ற வெப்சைட்டில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news