TRB

Friday, 5 September 2014

ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


ஆளுநர் கே.ரோசய்யா: 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில், ஆசிரியர் சமூகத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய திறவுகோலாக உள்ளது. சமூகத்தின் தூண்களாக ஆசிரியர் கள் உள்ளனர். அவர்கள் இளை ஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்காக விளங்கி, அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறார்கள். ஒரு நாட்டின் தலைவிதி வகுப் பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் நுட்பத்திறன் கொண்ட மதிப்புடையவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆசிரியர் தின நன்னாளில் ஆசிரி யர்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றுவோம். 

முதல்வர் ஜெயலலிதா: 

‘நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்ப டுகிறது’ என்று ஆசிரியப் பணி யின் உயர்வினை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் புகழ்ந் துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல - நல்லொழுக்கத்தையும் சிறந்த பண்பையும் பொது அறிவையும் சமூக சிந்தனைகளையும் மாணவச் சமுதாயத்துக்கு கற்பிப்பதாகும். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங் களுக்குத் தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப் பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமை யிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர் சமுதாய மேம்பாட்டுக் கென இடைவிடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி அனை வருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.