TRB

TNTET

Friday, 5 September 2014

பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு எழுத தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்தில் (www.tndge.in) தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு எழுத ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்து குறிப்பிட்ட நாட்களில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யத்தவறிய தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் இணைய
தளத்தில் (www.tndge.in) தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தக்கல்) கீழ் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த தகவலை அரசுத்தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news