TRB

Tuesday, 21 October 2014

குடியரசு தினத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் ‘கபீர் புரஸ்கார்’ விருது பெற தகுதியானோர், டிசம்பர் 15-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் ‘கபீர் புரஸ்கார்’ விருது பெற தகுதியானோர், டிசம்பர் 15-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலர் யதீந்திர நாத் ஸ்வைன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. இவ்விருது 3 அளவுகளில் மூவருக்கு வழங்கப்படுகிறது. இது, முறையே ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தகுதியுரையை கொண்டதாகும். ஒரு சாதி, இனம் அல்லது வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ, அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போது அல்லது தொடரும் வன்முறையில் காப்பாற்றியது வெளிப்படையாக தெரிந்தால் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. 2015-ம் ஆண்டு குடியரசு தினத்தில் வழங்கப்படவுள்ள ‘கபீர் புரஸ்கார்’ விருதை பெற தகுதியானவர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் மூலம் ‘அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை- 600 009’ என்ற முகவரிக்கு டிசம்பர் 15-ம் தேதிக்கு முன்பு அனுப்பிவைக்க வேண்டும். உரிய காலத்தில் வராத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.