TRB

Thursday, 9 October 2014

The Nobel Prize in Chemistry 2014 | நேனோ பரிமாணத்தில் காணக்கூடிய புளூரோசென்ட் நுண்ணோக்கி தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்காக வேதியியல் துறை நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேனோ பரிமாணத்தில் காணக்கூடிய புளூரோசென்ட் நுண்ணோக்கி தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் எரிக் பெட்ஸிக், வில்லியம் மோர்னர், ஜெர்மனி விஞ்ஞானி ஸ்டீபன் ஹெல் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட் டுள்ளது. 

The Nobel Prize in Chemistry 2014 was awarded jointly to Eric Betzig, Stefan W. Hell and William E. Moerner "for the development of super-resolved fluorescence microscopy".

நேனோ பரிமாணத்தில் காணக்கூடிய புளூரோசென்ட் நுண்ணோக்கி தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் எரிக் பெட்ஸிக், வில்லியம் மோர்னர், ஜெர்மனி விஞ்ஞானி ஸ்டீபன் ஹெல் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட் டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. எரிக் பெட்ஸிக், அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹோவர்ட் ஹுக்ஸ் மருத்துவ மையத்தில் பணிபுரிகிறார். வில்லியம் மோர்னர், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஸ்டீபன் ஹெல், ஜெர்மனியின் கோட்டிங்ஜெனில் உள்ள மாக்ஸ் பிளாங்க் மையத்தில் பணிபுரிகிறார். இப்போது பயன்பாட்டில் உள்ள ஆப்டிகல் நுண்ணோக்கிகள், 0.2 மைக்ரோ மீட்டர்களுக்கு மேல் உள்ளவற்றை தெளிவாக காட்டுவதில்லை. அந்த தடையை புளூரோ சென்ட் மூலக்கூறைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நுண்ணோக்கி மூலம் இவர்கள் தகர்த்தெறிந்துள்ளனர். இதன் மூலம், உடலில் உள்ள செல்களுக்கு இடையேயான நுண்ணிய மூலக்கூறைக்கூட நுண்ணோக்கி வழியாக காண முடியும். இதை பயன்படுத்தி ஸ்டீபன் ஹெல், மூளை நரம்பு செல்கள் தொடர்பான ஆராய்ச்சியில் சிறப்பான முன்னேற்றங்களை பெற்றுள்ளார். மோர்னர் புரதம் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். கருவில் உள்ள செல் பிரிதல் தொடர்பான ஆய்வில் பெட்ஸிக் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க வேதியியல் சங்கத் தலைவர் டாம் பார்டன் கூறும்போது, “ஆப்டிகல் நுண்ணோக்கி வழியாக தெரியாத நுண்ணிய பொருட்களை பார்க்க எலக்ட்ரான் நுண்ணோக்கியை பயன்படுத்தி வந்தோம். ஆனால், உயிருடன் உள்ள செல்களை அதில் வைத்து பார்க்க முடியாது. ஆனால், இந்த 3 பேரின் கண்டுபிடிப்பு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேக்டீரியாக்களுக்குள் உள்ளவற்றைக் கூட இனிமேல் நுண்ணோக்கியால் காண முடியும்” என்றார். எரிக் பெட்ஸிக் ஸ்டீபன் ஹெல் வில்லியம் மோர்னர்
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.