PGTRB 2012-2013 இரண்டாவது பட்டியல் TRB இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளி
களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.
இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டவர்கள் மீண்டும் அழைக் கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்க ப்பட்டுள்ளனர்.
மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
Teachers Recruitment Board
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
| |
Dated: 20-10-2014 |
Member Secretary
|
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
| |
Dated: 20-10-2014 |
Member Secretary
|
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,