TRB

Monday, 10 November 2014

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2014 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும்.விரிவான விவரங்கள்...

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான PTA மாதிரி வினாப் புத்தகங்கள் 10.11.2014 முதல் அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கும். இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ்
2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப் புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிகழாண்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினாப் புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி, ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையில் விற்பனை செய்யப்படும். 10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுதியின் விலை ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.200-க்கும், தமிழ் வழி புத்தகங்கள் ரூ.205-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.