TRB

Monday, 3 November 2014

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய கல்விக்கொள்கை அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் புதிய கல்விக்கொள்கை அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். கேரளாவின் நெடுமசேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: உத்தேச கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை அடுத்த ஆண்டில் தொடங்கும். மத்திய அரசின் கல்விக் கொள்கை அவசியமானதாகும். கல்விக் கொள்கையை இறுதிசெய்ய 7 மாதங்களிலிருந்து 3 ஆண்டுகள் வரை தேவைப்படும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், வல்லுநர்கள் கொள்கையை வகுக்கிறார்கள். இந்தப் பணியில் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்களையும் இணையச் செய்திட வேண்டும். நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. இதை மனித ஆற்றல்துறை அமைச்சர் என்ற தகுதியில் சொல்லவில்லை. சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் எனது 2 குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் என்றார்.

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.