TRB

Wednesday, 21 January 2015

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும்
கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக் கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் 5-ல் தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெற்றன. விடைத்தாள்கள் மதிப்பீடு 8 மையங்களில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் பல்கலைக் கழகத்தின் இணையதள முகவரி www.thiruvalluvaruniversity.ac.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அனைத்தும் அந்தந்தக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் பிப்ரவரி 15-க்குள் அனுப்பி வைக்கப்படும். மறுமதிப்பீடு செய்ய விரும்புவோருக்கு இத்தேர்வில் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர் அதற்கான கட்டணம் செலுத்தி அந்தந்தக் கல்லூரி முதல்வர் வழியாக ஆன்லைனில் ஜனவரி 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவுகளை காண திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.