TRB

Monday, 23 February 2015

சென்னையில் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை (சிடெட்) சுமார் 3000 பேர் எழுதினர். தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை (சிடெட்) சுமார் 3000 பேர் எழுதினர். அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, சின்மயா வித்யாலயா, முகப்பேரில் உள்ள டி.ஏ.வி. பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதயா
பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற சிடெட் தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகின்றன. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்றலாம். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்றலாம். விருப்பமுள்ளவர்கள் இரண்டு தாள்களையும் எழுதலாம். முதல் தாள் மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் இரண்டாம் தாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 988 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.