TRB

TNTET

Wednesday, 18 February 2015

மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளிகள் அந்த கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று கல்வி கட்டண நிர்ணய கமிட்டி தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு பரிந்துரை

மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளிகள் அந்த கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று கல்வி கட்டண நிர்ணய கமிட்டி தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்தார். புதிய கட்டணம் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் வருடத்திற்கு எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த கட்டணம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி இந்த கல்வி ஆண்டு முடிந்த உடன் 2 வருடம் முடிகிறது. 2015-16 வருடம் மட்டும் உள்ளது. புதிதாக 2016-2017ம் ஆண்டுக்குத்தான் புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டி உள்ளது. நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-கூடுதல் கட்டணம் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், கல்வி கட்டணம் அதிகமாக வாங்குவதாகவும் பள்ளிகள் மீது 55 புகார்கள் வந்தன. அவற்றில் 45 புகார்கள் முடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த வகையில் மாணவர்களுக்கு இதுவரை ரூ.46 லட்சத்து 19 ஆயிரத்து 250 திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் 520 இருந்தன. காரணம் அந்த பள்ளிகள் கட்டண நிர்ணயத்திற்கு அழைத்தால் வருவதில்லை. இப்போது அந்த பள்ளிகளில் 339 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இன்னும் 181 பள்ளிகள் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருக்கிறது. அந்த பள்ளிகளுக்கும் விரைவில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.ரூ.7 கோடிகமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் போதாது என்று கூறி நீதிமன்றத்தை நாடியவர்கள் 100 பேர்கள் இருக்கும். கல்வி கட்டணம் அதிகமாக வசூலித்த பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்க வேண்டியது மொத்தம் 7 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரத்து 395 ஆகும். இந்த பணத்தை திரும்ப கொடுக்க ஏற்பாடு செய்யும்படி மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தெரிவித்தார்.