TRB

Tuesday, 16 June 2015

4 குரூப் நியமனத்துக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு
நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதினர். எழுத்துத் தேர்வு முடிவு கடந்த மே 22-ந் தேதி வெளியானது. தேர்வர்கள் பெற்ற மதிப்பெண், மற்றும் அவர்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தினமும் 200 பேர் என மொத்தம் 7,030 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 3-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.