TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Wednesday, 9 September 2015

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது.

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன. இளங்கலைப் பட்டம்
முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இதற்கான கலந்தாய்வு வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதர பிரிவினருக்கு 10-ம் தேதியும், பழங்குடியினர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிடர் (பிற) ஆகியோருக்கு 11-ம் தேதியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர் மரபினர், பிற்படுப்படுத்தப் பட்டோர் (முஸ்லீம்) ஆகியோ ருக்கு 12-ம் தேதியும், பிற்படுத்தப் பட்டோர் (பிற) பிரிவினருக்கு 13-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,