TRB

TNTET

Wednesday, 9 September 2015

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலர் ராமநாதன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு அரசால் அங்கிகாரம் பெற்ற பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்று பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அங்கிகாரம் பெற்ற செவிலியர், ஆக்சிலரி நர்ஸ், ஹெல்த் விசிட்டர் பட்டய படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் சான்று பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.இதற்கான வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு உத்தேச பதிவு மூப்பு நாளது தேதி வரையில் பதிவு செய்தவர்கள் தகுதியுடையோர் ஆவார்.எனவே மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் உத்தேச பதிவு மூப்புடையபதிவுதாரர்கள் அனைத்து கல்வி சான்றுகளுடன் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 11-ம் தேதிக்குள் வர வேண்டும். அங்கு தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,