TRB

TNTET

Tuesday, 22 September 2015

TNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் உள்ள 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.11.2010-ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 26.02.2011 அன்று நடைபெற்றது. மேற்படி பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 01.09.2014 அன்று பிற்பகல் நடைபெற்றது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட 36 விண்ணப்பதாரர்களில் 23 விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு பதிலாக 12 விண்ணப்பதாரர்கள் (இரண்டாம் கட்டம்) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத்தன்மையினை அறியும் பொருட்டும் எதிர்வரும் 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேற்படி அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்டவாறு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்த தெரிவுப் பணிகளுக்குத் தகுதி பெற்றுவிட்டாதாகக் கருத இயலாது. மேலும் 25.09.2015 அன்று குறித்த நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத் தவறினாலோ அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைக் கொண்டுவரத் தவறினாலோ அவ்விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,