TRB

Friday, 9 October 2015

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் அடங்கிய பல்வேறு
பதவிகளுக்கான 100 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-இல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் 31,653 பேர் கலந்து கொண்டனர். இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணலுக்கு 219 பேர் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறுகிறது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.