TRB

Tuesday, 13 October 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

தேர்வாணையச் செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை  (12.10.2015) வெளியிட்டுள்ளது. இவ்வறிவிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை (403), மருத்துவம் மற்றும் கிராம சுகாதார பணிகள் (213), பதிவுத்துறை (59) வணிகவரித்துறை (191) தலைமைச்செயலக
நிதித்துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத்துறை (45), போக்குவரத்துத் துறை (35), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை (136) மற்றும்  இதர பல துறைகளில் உள்ள உதவியாளர் பதவி மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பதவி ஆகியவற்றில் உள்ள 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

1.
அறிவிக்கை நாள்
12.10.2015
2.
இணையவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்
11.11.2015
3.
வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த கடைசி நாள்
13.11.2015
4.
தேர்வு நாள் (கொள்குறி வகை)
27.12.2015
5.
கல்வித்தகுதி
அறிவிக்கையில்குறிப்பிட்டுள்ளவாறு
6.
விண்ணப்பக்கட்டணம் (நிரந்தரப் பதிவுக் கட்டணம்)
ரூ. 50/-
7.
தேர்வுக்கட்டணம்
ரூ. 75/-
8.
தேர்வுக்கான பாடம் (கொள்குறி வகை)
பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்
9.
தேர்வு மையங்களின் எண்ணிக்கை
116
           
மேற்படி தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வலைதளமானwww.tnpscexams.net  மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.