TRB

TNTET

Monday, 26 October 2015

சித்தா, ஆயுர்வேதா படிப்பு கலந்தாய்வு தொடக்கம்.முதல் நாளில் 308 பேருக்கு அனுமதி கடிதம்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் 308 மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்,
ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2015 - 16-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்று 25.10.2015 காலை 7 மணிக்கு தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 900 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் கலந்தாய்வில் 315 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 801 இடங்கள் காலியாக உள்ளன. வரும் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகின்றன.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,