TRB

TNTET

Wednesday, 4 November 2015

கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015 | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி:11.11.2015

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:859


பணி:கால்நடை பராமரிப்பு உதவியாளர் 

பணியிடம்:தமிழ்நாடு

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

SCA      - 26

SC       - 129

ST         - 09

MBC    - 172

BC       - 227BCM     - 30

GT       - 266

சம்பளம்:மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1400

தகுதி:குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 ஆகும். 10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 40, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிக பட்ச வயது 32 ஆகும். 10, +2 தேர்வு பெற்றிருப்பின் அதிக பட்ச வயது 34, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக பட்ச வயதுவரம்பு இல்லை.பொது பிரிவினருக்கு அதிக பட்சவயது 30 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், கால்நடை பராமரிப்பு(ம) மருத்துப்பணிகள், மத்திய அலுவலகக் கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:11.11.2015விண்ணப்ப மேல் உறையின் மீது"கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015"என பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட்டு அடிக்கோடிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதனை AXIS வங்கி செலுத்துச் சீட்டின் வாயிலாக AXIS வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தி செலுத்துச் சீட்டின் அத்தாட்சியினை (அசல்) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் Director, Animal Husbandry & Veterinary Services, Chenna'sஎன்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் போன்ற விவரங்கள் அறிய http://cms.tn.gov.in/sites/default/files/AH_asst_appl_301015.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,