TRB

Tuesday, 10 November 2015

TNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.10.2014 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 21.12.2014 அன்று
நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 22.05.2015 அன்று வெளியிடப்பட்டது. 2) இத்தெரிவு தொடர்பான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. 3) கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 4) கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் E-Mail மூலமும் கலந்தாய்விற்கான அட்டவணை அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. 5) எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. 6) விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.| 1.The Tamil Nadu Public Service Commission in its Notification dated 14.10.2014 had invited applications for direct recruitment to posts included in Group-IV Services for the year 2013 – 2014 and 2014 - 2015. The Written Examination was held on 21.12.2014 FN and results published on 22.05.2015. In order to fill up the 2971 vacancies, I phase of Counselling is to be conducted from 16.11.2015 to 02.12.2015 at 10.00 A.M. in the o/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003. 2. The tentative list of candidates who have been provisionally admitted for the I Phase of Counselling has been hosted in the Commission’s Website. Further, the candidates was informed individually by speed post about the date and time of the Counselling. 3. Candidates are admitted to the Counselling based on their marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. 4. During counselling, allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when the candidates reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. Hence, assurance of appointment could not be given to candidates for all those who were called for counselling. 5. The candidates who have been admitted for Counselling are directed to present themselves as mentioned in the Counselling Schedule. Candidates who do not appear for Counselling on the date and time allotted to them will lose their opportunity in the merit list, and they will not be given any further chance to appear for the counselling.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.