TRB

Saturday, 26 December 2015

சி.பி.எஸ்.இ., மாதிரி வினாத்தாட்கள் வெளியீடு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம்மூலம், வினா வங்கி, கூடுதல் வழிகாட்டி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதை விட ஒரு படி மேலாக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், கணிதப்பதிவியல், பொருளியல், வேளாண்மை உள்ளிட்டஅனைத்து பாடங்களுக்கும், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.வினாத்தாள் விவரங்களை, http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.