TRB

Friday, 22 April 2016

மருத்துவக் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான தடை

மருத்துவக் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான தடை கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும்.
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய பொது நுழைவுத்தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
முன்பு, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் தரப்பட்டு கல்லூரிகளில் சேர்க்கப்பட்டார்கள். இது நகர்ப்புற, மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், மாநில கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கும் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு AIPMT (All India Pre-Medical / Pre-Dental  Entrance Test)  என்ற நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது.மாநில அரசு நுழைவுத்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், இந்தியாவில் உள்ள அனைத்து  அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் ஒரேமாதிரியான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தினால் மாநிலங்களின் உரிமை பறிபோய் விடும், உள்ளூர் மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013ல் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுக்குத் தடை விதித்தது.இந்த தடையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதையேற்ற உச்சநீதிமன்றம், அகில இந்தியப் பொது நுழைவுத்தேர்வுக்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. "ஏற்கனவே, தமிழகம் போன்ற மாநிலங்களில் 15% இடங்களை மத்திய அரசுக்கு கொடுத்துவிடுவதால் உள்மாநில மாணவர்களுக்குப் போதிய இடங்கள் கிடைப்பதில்லை.இந்தச்சூழலில் அனைத்து இடங்களுக்கும் ஐ.ஐ.டி.களுக்கு நடத்துவதைப் போல அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தினால் பிற மாநில மாணவர்களே அனைத்து இடங்களையும் பெற்றுச்செல்லும் நிலை ஏற்படும். இந்த நுழைவுத்தேர்வால் 69% இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும். நகர்ப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்குச் சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களும், ஏழைக் குடும்பத்து மாணவர்களும் வாய்ப்பை இழப்பார்கள் ..." என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.