TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Wednesday, 27 April 2016

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் விநியோகம் தமிழக அரசு அறிவிப்பு

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பம் விநியோகம்  தமிழக அரசு அறிவிப்பு
அரசு கல்வி நிறுவனத்தில் தொழி லாளர் மேலாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழி லாளர் மேலாண்மை) படிப்புகளும், தொழிலாளர் நிர்வாகம் தொடர்பான முதுநிலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகள், தொழிலாளர் நல அலுவலர், பணியாளர் அலுவலர், மனித ஆற்றல் அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு பிரத்யேக கல்வித் தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசின் தொழிலாளர் துறையில் தொழிலாளர் அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் ஆகிய பணிகளில் மேற்கண்ட படிப்புகள் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பிளஸ்-2 முடித்தவர்கள் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பிலும், பட்டதாரிகள் தொழிலாளர் மேலாண்மை முதுகலை படிப்பு மற்றும் டிப்ளமா படிப்பிலும் சேரலாம். இந்த படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 15-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 30-ம் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100 மட்டும். சாதி சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்). விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புவோர் ரூ.250-க்கு (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.150) டிமாண்ட் டிராப்டை "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai-5" என்ற பெயரில் எடுத்து சென்னையில் உள்ள தொழிலாளர் கல்வி நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். முழு முகவரி: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், 5, காமராஜர் சாலை, சென்னை 600 005. தொலைபேசி எண்கள்: 044-28440102, 28445778.
கூடுதல் விவரங்களை அறிய மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப் பாளர்களான உதவி பேராசிரியர் வி.ஜி.தியாகராஜன் (செல்போன் எண் 98411-92332), உதவி பேராசிரியர் ஆர்.ரமேஷ்குமார் (98841-59410) ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.