TRB

Sunday, 29 May 2016

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழ்நாட்டில் 99.78 சதவீதம் பேர் தேர்ச்சி.

தமிழ்நாட்டில் 99.78 சதவீதம் பேர் தேர்ச்சி சென்னை மண்டலத் தில் உள்ள மற்ற மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:- சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை தமிழகத்தில் 32 ஆயிரத்து 303 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 32 ஆயிரத்து 257 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 99.78 சதவீதம் ஆகும். சென்னை மண்டலத்தில் புதுச்சேரி 99.92 சதவீதம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 சென்னை மண்டலத்தில் 99.69% பேர் தேர்ச்சி சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு கள் வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத் தில் 99.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 14 லட்சத்து 89 ஆயிரத்து 21 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ் டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன்- டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் ஒரு லட் சத்து 62 ஆயிரத்து 252 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவு கள் இணையதளத்தில் (www.cbse results.nic.in) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 14 லட்சத்து 89 ஆயிரத்து 21 பேரில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 861 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.21 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சற்று குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டில் 97.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். சிபிஎஸ்இ-யின் 10 மண்டலங் களில் திருவனந்தபுரம் மண்டலம் 99.87 சதவீத தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.அதற்கு அடுத்தபடி யாக சென்னை மண்டலம் 99.69 சத வீத தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொருத்த வரையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. விடைத்தாள் மதிப்பீட்டில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப “கிரேடு” மட்டுமே குறிப்பிடப்படும். எனவே, எஸ்எஸ்எல்சி தேர்வைப் போல ரேங்க் பட்டியல் வெளி யிடப்படுவது கிடையாது. தமிழ்நாடு, ஆந்திரம், கர் நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தின் தேர்ச்சி நிலை குறித்து அதன் மண்டல அதிகாரி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை மண்டலத்தில் 10-ம் வகுப்புத் தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 252 பேர் எழுதினர். இவர் களில் 93 ஆயிரத்து 158 பேர் மாண வர்கள். 69 ஆயிரத்து 94 பேர் மாணவிகள். தேர்வெழுதியவர் களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 752 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி விகிதம் 99.69 சதவீதம் ஆகும். மாணவர்களில் 99.62 சதவீதம் பேரும், மாணவிகளில் 99.79 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு ஜூலை 16-ம் தேதி முதல் துணை பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண் டும். இதுகுறித்த அறிவிப்பு ஜுன் 10-ம் தேதி வெளியிடப்படும். மேலும்,விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இவ்வாறு சீனிவாசன் கூறினார். என்னென்ன கிரேடு? சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் எந்த மாணவருக்கும் மதி்ப்பெண் வழங்கப்படுவதில்லை. விடைத்தாள் மதிப்பீட்டில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு மட்டுமே வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழிலும் கிரேடு விவரம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக் கும். எந்தெந்த மதிப்பெண்ணுக்கு என்னென்ன கிரேடு என்ற விவரம் வருமாறு:- 91 மதிப்பெண் முதல் 100 வரை - ஏ-1 கிரேடு 81 முதல் 90 வரை - ஏ-2 கிரேடு 71 முதல் 80 வரை - பி-1 கிரேடு 61 முதல் 70 வரை - பி-2 கிரேடு 51 முதல் - 60 வரை - சி-1 கிரேடு 41 முதல் 50 வரை - சி-2 கிரேடு 31 முதல் 40 வரை - டி கிரேடு 30-க்கு கீழே எடுக்கும் மதிப்பெண் எடுத்தால் அதற்கு ஏற்ப இ-1, இ-2 கிரேடு வழங்கப்படும். இ கிரேடு எடுக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஆவர்.


No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.