TRB

Wednesday, 11 May 2016

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு.

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 7 நாளைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 415 பேர் பதிவு செய்துள்ளனர்.அவர்களில் 96 ஆயிரத்து 632 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.