TRB

Saturday, 14 May 2016

அரசு கல்லூரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க குழப்பம்

அரசு கல்லூரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க குழப்பம்
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அளிக்கும் தேதியில், நிலவும் குழப்பத்துக்கு, அரசு கல்லுாரி நிர்வாகம் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும், என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உடுமலை, அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை மற்றும் முதுநிலைப்பிரிவுகளில் இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இளநிலைப்பிரிவில், 15 பாடப்பிரிவுகளில் மொத்தமாக, 742 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 2ம் தேதி முதல் துவங்கியது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் மற்றும் நகல்களோடு பூர்த்தி செய்து அனுப்ப, 14 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பத்தோடு, மதிப்பெண் சான்றிதழ் அல்லது, கம்ப்யூட்டரில் பதிவிறக்கும் செய்த மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிப்பது கட்டாயமாக உள்ளது.
இந்நிலையில், தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 17 ம்தேதி என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளின் தேதி அறிவிக்கப்படும் முன்பு, தேர்தலுக்கு முன்பே முடிவுகள் வந்துவிடும். அதிலும் பத்தாம் தேதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து, 17 ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் சேர்க்கை தாமதமாக நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. தவிர, 17 ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்பது கல்வித்துறை அறிவித்திருந்தாலும், ஓட்டுபதிவுக்கு அடுத்த நாளே முடிவுகள் வெளியிடப்படுவதற்கு வாய்ப்பில்லை என கல்வித்துறை வட்டாரங்களிடம் சந்தேகமான நிலையே உள்ளது.
இதனால், அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடப்பதால், கல்லுாரி நிர்வாகத்தினரிடமும் தெளிவான பதில் இல்லை.
விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதி நாளும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. தேர்வு முடிவுகளுக்கு பின்னரே, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தாலும், கல்லுாரி குறிப்பிட்டுள்ள இறுதி நாள் கடந்து விடுவதால், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் மாணவர்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
விண்ணப்பங்களை சமர்பிப்பது குறித்து கல்லுாரி நிர்வாகம் விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.