TRB

TNTET

Thursday, 30 June 2016

மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை திட்டமிட்டபடி 11-ந் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும் என்று ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளருமான என்.கண்ணையாவிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் கேள்வி:- 7-வது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள முடிவு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? ஏற்கனவே அறிவித்தபடி போராட்டம் நடக்குமா? பதில்:- ரெயில்வே மற்றும் ராணுவத்தை தனியார் மயமாக்கக்கூடாது என்று கேட்டிருந்தோம். ஆனால் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை. பரிசீலிப்பதாக தான் கூறி இருக்கிறார்கள். மேலும் ஏற்கனவே ரூ.7 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அதை ரூ.26 ஆயிரமாகவும் அல்லது 3 மடங்கு அதிகமாக ரூ.21 ஆயிரமாகவும் வழங்க கேட்டிருந்தோம். ஆனால் அதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என்ற ஊதியக்குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதுபோல் பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது எங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் இல்லை. எங்களுக்கு ஏற்புடையதும் அல்ல. எனவே நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். ரெயில்களும் ஓடாது. இவ்வாறு அவர் பதில் அளித்தார். கபட நாடகம் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- 7 மாத கால அவகாசம் எடுத்துக்கொண்டு, ஊழியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை சம்பளத்தை மாற்றுவோம் என்று கூறிவிட்டு ஊதியக்குழு பரிந்துரை செய்ததை அப்படியே அறிவித்திருக்கிறார்கள். வெறும் 14.3 சதவீதம் மட்டுமே சம்பளம் உயர்த்தி அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு கபட நாடகம். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் விலையில் ரூ.18 ஆயிரம் என்பது மிகவும் குறைவு ஆகும். இதனை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும். கடந்த 70 வருட காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அறிவித்துள்ள மிகவும் மோசமான சம்பள உயர்வு இதுவாகும். 3 லட்சம் ஊழியர்கள்... உலக அளவில் ராணுவ வீரர்களுக்கு குறைவான சம்பளம் இந்தியாவில்தான் கொடுக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் ரெயில்வே, தபால் துறை, பாதுகாப்பு, வருமான வரித்துறை என்பன உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு இலாகாக்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். காலவரையற்ற போராட்டத்தின் முன்னோட்டமாக அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மதிய உணவு இடைவெளியில் மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments: