TRB

Friday, 8 July 2016

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பதவி: ஜூலை 15-இல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பதவி: ஜூலை 15-இல் விண்ணப்பம் விநியோகம்
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பம் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை வழங்கப்படும். விண்ணப்ப படிவக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பத்துடன் வழங்கப்படும் ரசீதுடன் வங்கிகளில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அதே பள்ளியில் சமர்ப்பித்து ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2 comments:

Unknown said...

TRB - Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT / DIET -2016

COACHING CLASSES FOR EDUCATION & G.K.

EXAM DATE: 17.09.2016

HOLYCROSS STUDY POINT,
5-A, Narasimma Achari Street,
Near TOWN EB Office,
DHARMAPURI-636701.

CELL: 9791 371 444

Unknown said...

sir wil u take classes for english?

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.