TRB

Friday, 26 August 2016

மனம் என்னும் மாபெரும் சக்தி! டாக்டர் பி. கிருஷ்ணகுமார்

மனம் என்னும் மாபெரும் சக்தி! டாக்டர் பி. கிருஷ்ணகுமார்
அனைத்து விதமான செயல்களுக் கும் தேவையான எண்ணி லடங்கா ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது மனித மனம். அதனா லேயே எல்லாவற்றுக்கும் அடிப்படை மனம் என்கிறோம். ஒவ்வொரு தனி நபருக்குமான தகவல் செயல்பாடு, நினைவக மேம்பாடு, ஆக்கப்பூர்வ சிந்தனை, சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் தொடர்ச்சியான கற்றல் என அனைத்து நிலைகளிலும் மனமே பிரதானமாக செயல்படுகின்றது. அப்படிப்பட்ட இந்த மனதிற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலையும், மலர்ச்சி யையும் ஏற்படுத்துவதற்கான செயல் பாடுகளைச் சொல்வதே “மைக்கேல் ஜே ஜெல்ப்” மற்றும் “கெல்லி ஹோவெல்” ஆகியோரால் எழுதப்பட்ட “பிரைன் பவர்” என்ற இந்த புத்தகம். வயதிற்கு ஏற்ப வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமது மனதின் மேம்பாட்டிற்கான வழி முறைகள் எளிதாகக் கூறப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
எதிர் சிந்தனை! எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப் போல, உங்களுக்குத் தோன்றும் எதிர் மறையான எண்ணங்களுக்கு நேர் எதிராக உங்களது சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும்போது, அவை தானாகவே நேர்மறையான எண்ணங்க ளாக மாறிவிடுகின்றன. உதாரணமாக, “எனக்கு வயதாகிக்கொண்டே இருப்ப தால், அனைத்து விஷயங்களும் மறந்து விடுகின்றது. என்னால் எதையும் சரி யாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவ தில்லை” என்பது உங்களது கூற்றாக இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இதையே, “நான் எப்போதும் முக்கிய மான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறேன்” என்பதாக மாற்றிக்கொள்ளுங்கள் என்கின்றனர் ஆசிரியர்கள். உங்களது எதிர்மறையான அல்லது நம்பிக்கையற்ற சிந்தனை முறைகளை, அதன் நேர் எதிர் கோணத்தில் மாற்றிச் செயல்பட கற்றுக்கொள்ளும்போது, வாழ்க்கையின் சவால்களை மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் எதிர் கொள்ள முடிகின்றது என்பதே உண்மை. தொடர்ந்து இதை பழக்கப்படுத்தும் போது, நாளடைவில் முடியாது மற்றும் கடினம் என்பதெல்லாம் முடியும் மற்றும் சுலபம் என்பதாக மாறிவிடுவதை காணலாம். மறப்போம் மன்னிப்போம்! மன வலிமைக்கும் அதன்மூலம் வாழ்வின் விரிவாக்கத்திற்குமான மிகச்சிறந்த சிகிச்சை மன்னிப்பு. ஆம், இதுவே கோபத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்தி மனதை சீராக இயங்க வைக்கின்றது. “தவறு மனிதத்தன்மை, மன்னிப்பு தெய்வத்தன்மை” என்கிறார் புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் அலெக்ஸ் சாண்டர் போப். இந்த மன்னிப்பு மனப்பான்மையானது தொடர்ந்து நமது வாழ்வில் வழக்கத்திற்கு வரும்போது பதற்றம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்றவை கூட குறைவதாகத் தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். மேலும், மன்னிப்பு என்பது கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் கற்றுக்கொள்ள முடிந்த ஒரு திறன் என்பதையும் வலியுறுத்துகின்றனர். கற்றுக்கொண்டே இருப்போம்! கற்றுக்கொள்ளத் தேவையான தீவிர ஆர்வத்துடனேயே நாமெல்லாம் பிறந்திருக்கின்றோம். ஆம், கற்றல் என்பது நம்முடைய பிறப்பிலிருந்தே நமக்குள் விதைக்கப்பட்ட ஒன்று. மேலும், கற்றலுக்கு காலநேரம், வயது என எவ்வித கட்டுப்பாடும், விதிமுறைகளும் கிடையாது. பொதுவாக நமது மற்ற உடல் உறுப்புகளிலிருந்து மூளை வெகுவாக வேறுபடுகின்றது. கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் என உடலின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது நமது மூளையானது தொடர்ந்து உபயோகப் படுத்தப்படும்போது இன்னும் அதிகமாக கூர்மைப்படுத்தப்படுகின்றது. கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத் தும்போது நமது மனதை அதிக வலிமையுடன் தொடர்ந்து வைத்திருக்க முடிகின்றது. கற்றுக்கொள்ளும் ஆர்வத் தினை அதிகரித்துக் கொள்ளுதல், புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் கண்டறிதல், புதிய விஷயங்களை அறிந்துக்கொள்ளத் தேவையான குறிப்பிட்ட அளவு நேரத்தை தினமும் முறைப்படுத்துதல் போன்ற செயல்களின் மூலமாக நமது மனவலிமையை அதிகப்படுத்த முடிகின்றது. பயிற்சி வேண்டும்! உடலோ அல்லது மனமோ, சீராக இயங்க வேண்டுமானால் அதற்கான பயிற்சி மிகவும் அவசியம். அதற்கான பயிற்சி திட்டங்கள் சிலவற்றை கொடுத்துள்ளார்கள் ஆசிரியர்கள். முதலில், உங்களுக்கு விருப்பமான, உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய செயல்பாட்டினை சரியாக அடையாளம் காண வேண்டும். உடற்பயிற்சிக் கூடம் செல்வது, நடப்பது, ஓடுதல், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடனம் அல்லது யோகா என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல்பாடு ஊக்கமளிக்க லாம். அடுத்தபடியாக சோம்பலை மூட்டைகட்டி வைத்துவிட்டு தேர்ந் தெடுத்த செயல்பாட்டினை முறையாக துவங்க வேண்டும். வலி இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து, அந்த செயல்பாட்டினை உங்களது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாற்றி செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலும் முக்கியம்! நமது சுற்றுச்சூழலின் ஒவ்வொரு காரணியும் நம்முடைய மனதை ஏதோ ஒரு வகையில் தூண்டுவதாகவே உள்ளது. அது சிறந்த வழியிலேயா அல்லது மோசமான வழியிலேயா என்பது அந்தச் சூழலின் தன்மையைப் பொறுத்தது. காட்சிகள், சப்தங்கள், நறுமணம், சுவை மற்றும் நம்மால் தினமும் உணரப்படும் மற்ற உணர்வுகள் என அனைத்தும் நம்முடைய மனதிற்கான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. இதில் நம்மால் முடிந்த நேர்மறை பலன்களைக் கொடுக்கக்கூடிய சூழலை உருவாக்கிக்கொண்டால், அது மனதிற்கு சிறந்த ஊக்கமாக அமையும் என்பதே ஆசிரியர்களின் வாதமாக இருக்கின்றது. ஊக்கமூட்டும் உறவுமுறை! ஆரோக்கியமான உறவுமுறை யானது மனவலிமையின் மேம்பாட்டிற் கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்று. தங்களது பணி ஓய்விற்கு பிறகான வாழ்விற்கு தேவையான சேமிப்பு மற்றும் முதலீடுகளை, பணி யிலுள்ளபோதே சம்பாதித்து வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், அதை செய்துகொண்டும் இருக்கின்றோம் அல்லவா!. சரி, இதே அளவிற்கு எத்தனை பேர் அவர்களுக்கான உறவுமுறைகளில் முதலீடு செய்துள்ளோம் என்பது மில்லியன் டாலர் கேள்வியே. ஓய்வுகால வாழ்விற்கான மனவலிமையின் பெரும்பகுதி நாம் சேர்த்து வைத்துள்ள உறவுகளை சார்ந்தது என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டியது அவசியம். பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றில் மற்றவர்களுடன் சேர்ந்து பங்கேற்பது. உண்மையான நண்பர்களை நமது நட்பு வட்டத்திற்குள் வைத்துக்கொள்வதும் அவசியமான ஒன்றே. இவை அரிதானதும் விலைமதிப்பற்றதும் கூட. சமூக பணிகளில் ஆர்வம் காட்டுவது. தன்னார்வ பணிகளில் ஈடுபடுதல். இளையவர்களுக்கு நம்பிக்கையான வழிகாட்டியாக செயல்படுதல். முடிந்த வரை நம்மைச்சுற்றிலும் நேர்மையான எண்ணம் உடையவர்களைக் கொண் டிருத்தல் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான உறவுகளை அறு வடை செய்யலாம். மனித உறவுகள் மட்டுமே மன வலிமைக்கான காரணிகள் அல்ல. செல்லப்பிராணிகளாக நாம் வளர்க்கக் கூடிய விலங்குகள் மற்றும் பறவைகள் கூட நமது மனவலிமையை மேம்படுத் துவதற்கான சிறந்த உறவுகளே என்கிறார்கள் ஆசிரியர்கள். செல்லப் பிராணி உரிமையாளர்கள் எழுநூற்று எண்பத்து நான்கு பேர்கள் உட்பட கிட்டத்தட்ட ஆறாயிரம் பேரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மற்றவர்களைவிட செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றில் குறிப் பிடத்தக்க அளவில் ஆரோக்கியமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களது மன அழுத்தத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந் துள்ளது. இவை அனைத்தையும் தவிர தூக்கம், ஓய்வு, உணவு மற்றும் பழக்கங்கள் என அனைத்திலும் சரியான முறைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையை கையாளும்போது தேவையான மன வலிமை நம் வசப்படும்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.