TRB

Monday, 28 November 2016

அரசியல் சட்ட தினம்: நவம்பர் 26

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவுடன் அதன் தலைவர் அம்பேத்கர் 
சட்ட தினம் உணர்த்தும் கடமைகள்! சட்ட தின உறுதிமொழி என்பது வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது கே.சந்துரு இந்திய சட்ட வரலாற்றில் 26.11.1949 என்ற தேதி முக்கிய தேதியாகும். அந்த நாளில்தான் அரசமைப்புச் சட்ட இறுதி வடிவத்தினை, அரசமைப்புச் சட்டப்பேரவை தீர்மானமாக நிறைவேற்றிய நாள். 67 ஆண்டுகளுக்குப் பின்னர், சட்ட தினத்தைக் கொண்டாடிவரும் நாம், கடந்து வந்த பாதையை நினைவுகூர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தில் சுரண்டப்பட்டுவந்த மக்களுக்குக் கிடைத்த அரசியல் சுதந்திரம், அதையொட்டி உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு என்றே எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம், அதை உருவாக்கிய தலைசிறந்த சட்ட மேதைகளின் குழு, அக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் வீற்றிருந்தது போன்றவற்றையெல்லாம் நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவரான அம்பேத்கர், உறுப்பினர்களின் ஓட்டெடுப்புக்கு விடும் முன்னர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆற்றிய சரித்திரப் புகழ்பெற்ற உரையின் ஒரு பகுதி:- "1950 ஜனவரி 26-ம் தேதியன்று, நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்குச் சமத்துவம் இருக்கும். ஆனால், சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் 'ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒருநெறி' என்பதை அங்கீகரிப்போம். ஆனால், நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில், நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்துவருவோம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறை களுடன் நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம்? நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப்போகிறோம்? இப்படித் தொடர்ந்து மறுத்துவருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்துக்குப் பேரிடர் மட்டுமே விளைவிப்போம். இம்முரண்பாடுகளை நாம் முடிந்த வரை குறைவான காலத்துக்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப் பட்டுவிடும்." சோஷலிசம் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாகி, உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெற்ற அச்சட்டத்தின் ஆரம்ப வடிவில் சோஷலிசம் என்ற வார்த்தை எங்கேயும் பயன்படுத்தப் படவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத் தின் பல பகுதிகளில் சோஷலிசக் கூறுகள் எதிரொலித்தன. சட்டப் பிரிவு 39 நிறைவேற்றப் பட்டிருந்தால், முழுமையான சோஷலிச நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். அப்பிரிவில் அரசை வழிகாட்டும் நெறிமுறைகளாகக் கூறப்பட்டிருப்பவையாவன: "பொருளாதாரச் சுரண்டலுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் முடிவு கட்டி, நியாயமான சமூக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய கடமையை அரசின் மேல் சுமத்துகிறது. "மக்கள் அனைவருக்கும் சமூக-பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க அரசாங்கம் முயல வேண்டும். தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும் அவ்வுணர்வு பரவ வகை செய்ய வேண்டும் என்று நெறிமுறைக் கோட்பாடுகளின் அடித்தளமாக விளங்கும். ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்துத் தொழி லாளர்களின் ஆரோக்கியமும் பலமும் சிறாரின் இளம்பிராயமும் தவறாகப் பயன்படுத்தாம லும், பொருளாதாரத் தேவைகளின் காரண மாகக் குடிமக்கள் தமது வயதுக்கும், வலுவுக்கும் பொருத்தமில்லாத வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படாமலும்; சிறாரும் இளைஞரும் சுரண்டப்படாமல் காக்குமாறும் அரசு தன்னுடைய கொள்கைளை நெறிப்படுத்த வேண்டும்." சோஷலிசக் கருத்துகள் முழுவதிலும் பொதிந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அக்கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காக 1977-ல் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன்படி இந்தியா இறையாண்மை பெற்ற சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அந்த முகப்பு வார்த்தைகள் நான்கும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களென்று கூறலாம். இதில் ஒரு தூண் பழுதுபட்டாலும் 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் அவ்வமைப்பு தகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 66 ஆண்டுகள் ஆன பின்னரும், இந்த நான்கு தூண்களும் பலவிதத்தில் தாக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் 1975-77-ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைப் பிரகடனம், அரசமைப்புச் சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கியது. பாபர் மசூதி இடிப்பும், இந்துத்துவத்தின் ஆட்சி என்ற பரப்புரையும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு வேட்டுவைத்துள்ளன. தனியார்மயமாக்கலும், உலகமயமாக்கலும் அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள சோஷலிசக் கோட்பாடுகளுக்கு ஆபத்து விளைவிக்கின்றன. திருத்தப்படும் தொழிலாளர் சட்டங்கள் இதற்குச் சரியான உதாரணங்களாகும். தொழிலாளர் சட்டம் திருத்துவதற்கு முன்னாலேயே தனியார் மயமாக்கலை வரவேற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், அதன் சில நீதிபதிகளின் தனிப் பட்ட கருத்துகளும் சோஷலிச அணுகுமுறை யைக் கேலிக்கூத்தாக்கிவிட்டன. சட்ட நாளை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், அம்பேத் கரின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவிட்ட மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள், நம்மைக் கவலைக்குள்ளாக்குகின்றன. "இந்தியா சோஷ லிச நாடு என்பதெல்லாம் வெற்று முழக்கம். இது ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை இக்கருத்தை ஒட்டியே இருக்க வேண்டும்" என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது வேதனையளிக்கிறது. கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையா என்ற கேள்வி அரை நூற்றாண்டு காலம் நீதிமன்றங்களில் எழுப்பப்பட்டு வந்தது. அதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக 2002-ல் அரசமைப்புச் சட்டம் மேலும் ஒரு முறை திருத்தப்பட்டு, 21-A என்ற பிரிவு கொண்டுவரப்பட்டது. அதன்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது. ஆனால், அதற்கான சட்டமோ பத்து வருடங்களுக்குப் பின்னால் உருவாக்கப்பட்டது. புதிய சட்டத்தின்படி (2012) அரசு அக்கடமையை நிறைவேற்றும் பொறுப்பைத் தனியார்களுக்கும் தாரை வார்த்தது. 20 நூற்றாண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட பகுதியினருக்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கு முன்னரே அச்சட்டத்தின் பிரிவுகள் குற்றுயிராக்கப்பட்டன. இன்று தமிழகத்தில் 42% மாணவர்கள், கட்டணம் செலுத்தியே பள்ளிக் கல்வியைப் பயின்றுவருவதைப் பார்க்கும்போது, சட்டத் தின் அடிப்படைக்கும் சமுதாயத்தின் செயல் பாடுகளுக்கும் எட்டாத இடைவெளிதான் தெரி கிறது. புதிய நூற்றாண்டு தொடங்கிய பின்னரும், இந்நாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு சமநீதி மறுக்கப்பட்டுவருவதையும், இன்னும் உலர்கழிவுகளைத் தலையில் சுமப்பது ஒரு பகுதியினரின் வேலையாக்கப்பட்டிருப்பதை யும், பெரும்பான்மையான மக்கள் இன்ன மும் வறுமைக்கோட்டின் கீழ் வாடிவருவதை யும் பார்க்கும்போது, கூரையே வானமாக்கிக் கொண்டு குடியிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களைக் காணும்போது, முன்னர் கூறிய டாக்டர் அம்பேத்கரின் கூற்றுகள்தான் மேலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. சட்ட தின உறுதிமொழி என்பது சடங்காக மாறிவிடாமல், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். நெறிகாட்டு வழிமுறைகள் சட்ட உரிமைகளாக மாற்றப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் என்று ஓயாமல் குரலெழுப்பும் காவிக் கட்சியினர், அரசமைப்புச் சட்டத்தின் மற்ற பகுதிகளை வசதியாக மறந்துவிட்டது ஏனோ? - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை. சோஷலிசக் கருத்துகள் முழுவதிலும் பொதிந்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் அக்கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காக 1977-ல் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன்படி இந்தியா இறையாண்மை பெற்ற சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. அந்த முகப்பு வார்த்தைகள் நான்கும் இந்தியாவைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களென்று கூறலாம். இதில் ஒரு தூண் பழுதுபட்டாலும் 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் அவ்வமைப்பு தகர்ந்துவிடும் ஆபத்து உள்ளது!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 26 November 2016

அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை!

அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை! | உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது. பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் தற்காலிகமான ஒரு பொருளாதார தேக்கநிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, அமைப்புசாராத் துறையில். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு சம்பளத்தில் ரூ.10,000 முன் ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இதே போன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாநில அரசுகளும்கூட இம்முடிவை எடுக்கலாம். அப்படி எடுத்தால், அதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. "நாட்டின் எல்லா மக்களும் வங்கிகள் முன் காத்திருக்கையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை?" என்று சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் வரும் கேள்வி நியாயமற்றது. அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுகையில், நம் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களில் தொடங்கி கிராமப் பஞ்சாயத்து உதவியாளர் வரை அதில் அடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை வெறுமனே சில ஆயிரங்கள், லட்சங்களுக்குள் அடங்குவது அல்ல; தெருவுக்கு ஒருவர் அல்லது இருபது குடும்பங்களுக்கு ஒரு குடும்பம் என்கிற அளவுக்குப் பரந்து விரிந்தது அது. அரசு ஊழியர்களின் பணம் எப்போதுமே நம்முடைய சந்தை இயக்கத்தின் மிக முக்கியமான சுழற்சிச் சக்கரங்களில் ஒன்றாக இருக்கிறது. எப்படியும் இந்த மாதச் சம்பளத்தை அவர்களுக்கு அரசு அளித்துதான் ஆக வேண்டும். அதில் கொஞ்சத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்குப் பதிலாக, பணமாக முன்கூட்டி அளிக்கும்போது பணம் நேரடியாகச் சந்தையில் சுழற்சிக்குக் கீழ் நோக்கிப் போகும் என்று அரசு நம்பினால், அது நியாயமானது. அரசின் சமீபத்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுவரை பலர் பணிச் சுமையால் உயிரிழந்திருக்கின்றனர். வங்கித் துறையினர் மட்டும் அல்லாது சுங்கத் துறையினர், கலால் துறையினர், வருமான வரித் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் தொடங்கி அன்றாடம் கருவூலத்துக்குப் பணம் கட்டும் தேவையுள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் தத்தமது அளவில் சிறு அளவிலேனும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கள்ளப் பொருளாதாரத்துக்கு எதிராக மேலதிகமாக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் அரசு ஊழியர்களைக் கொண்டே நடந்தாக வேண்டும் என்பது யாரும் அறியாதது அல்ல. ஏற்கெனவே பணிச் சுமை அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களுடைய தனிப்பட்ட பாதிப்பைக் கொஞ்சம் குறைக்கலாம் என்று அரசு முடிவெடுத்தால், அது தவறும் அல்ல. நம் சமூகத்தில் அமைப்புரீதியில் பாதிப்படையும்போதெல்லாம், அரசு ஊழியர்கள் மீது வன்மக் கண்ணைத் திருப்புவது நம் பொதுப் புத்தியில் வலுவாகவே படிந்திருக்கிறது. இது ஒரு சமூக மனநோயே அன்றி வேறு அல்ல!                                                                                                                                                                

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உருகும் ஆர்டிக் பனியால் உலகுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உருகும் ஆர்டிக் பனியால் உலகுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை | ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் பனிப் பாறைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உருகி வருவதால் உலகம் முழுவதும் பேரழிவுக்கான விளைவுகள் ஏற்படக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பனிப்பிரதேசமான ஆர்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முன் எப்போதும் இல்லாத அள வுக்கு அதிகமாக உருகி வரு கின்றன. இதனால் கடல் மட்டம் உயருவதுடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உலகம் முழுவதும் பருவநிலையில் மாற்றம் ஏற்படலாம் என ஆர்டிக் பகுதியை ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து நேற்று வெளி யிடப்பட்ட புதிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆர்டிக் பகுதியில் தற்போது தட்பவெட்பம் 20 டிகரி சென்டி கிரேடாக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். பனிப்பிரதேசத்தில் தற்போது அதிக அளவில் தாவரங்கள் வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் பனி குறைவதுடன் அதிக அளவில் வெப்பம் உறிஞ்சப்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாவரங்களில் இருந்து வெளியாகும் பசுமை குடில் வாயுவால் ஆர்டிக் பகுதி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கடலின் பருவநிலைகளிலும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஆர்டிக் பகுதி ஆராய்ச்சி யாளரான கார்ஸன் கூறும்போது, ''அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப், ஆர்டிக் பகுதி ஆராய்ச்சிக்கு செலவிடுவதை வட, விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளார். இது மிகப் பெரிய தவறாகும். துருவப் பகுதிகளில் துல்லியமாக ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான அபாயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தற்போது ஆர்டிக் பகுதியில் மிகப் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பெரிய பிரச்சினையாகவும் உருவாகியுள்ளது. ஆனால் குறைந்த அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது'' என்றார். ஆர்டிக்கில் பனி உருகி வரு வதால் அதன் அருகே வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப் படக்கூடும் என்றும் விஞ்ஞானி கள் எச்சரிக்கின்றனர். எனவே வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போதிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அல்சரை குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு!

அல்சரை குணமாக்கும் அருமருந்து 'பீட்ரூட்' சாறு!
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். கோதுமை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாகும். புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும். பீட்ரூட் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. பீட்ரூட் இரத்த சோகை, உடல் எடை ஆகியவற்றை குறைக்க செய்யும். பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 25 November 2016

Direct Recruitment for the Post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016 | Provisional Selection List After Certificate Verification

Direct Recruitment for the Post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016 | Provisional Selection List After Certificate Verification As per the Notification No.3/2016 Published on 28.06.2016, the Board conducted written Competitive Examination for the Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016 on 17.09.2016. Board also conducted first phase of Certificate Verification on 05.11.2016 based on Written Examination marks. Now, the Board releases the Provisional Selection list for all subjects in Senior Lecturer. For Lecturer in Maths, Physics, Chemistry, Geography and Physical Education and Junior Lecturer in Telugu also the Board releases the Provisional Selection List. The list is prepared based on the Written Examination marks and Certificate Verification data for Senior Lecturer / Lecturer / Junior Lecturer following merit-cum-communal rotation, as per rules in vogue. This Selection is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras and the decision of User Department on eligibility of candidate. For remaining subjects, from the available Merit list, candidates are called for Second Phase of Certificate Verification. The appointment order for the eligible candidates after verifying and satisfying all conditions will be issued by the Director of State Council for Education Research and Training seperately after due process and verifications.

 

CLICK | http://trb.tn.nic.in/DTERT2016/23112016/msg1.htm

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | EXECUTIVE OFFICER GRADE IV - NO. OF VACCANCIES 49 - LAST DATE 25.12.2016 - EXAM DATE 30.04.2017

TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | EXECUTIVE OFFICER GRADE IV - NO. OF VACCANCIES 49 - LAST DATE 25.12.2016 - EXAM DATE 30.04.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 November 2016

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயர்த்தப்படுமா? குறைந்தபட்சம் ஒரு தடவையாவது தளர்த்த கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயர்த்தப்படுமா? குறைந்தபட்சம் ஒரு தடவையாவது தளர்த்த கோரிக்கை | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்படுமா என்று கிராமப்புற இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வயது வரம்பை தளர்த்த வேண்டும் என அவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் (துணை கலெக்டர்), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (கிரேடு-1) வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு போன்று, குரூப்-1 தேர்வும் மாநில அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வாக கருதப்படுகிறது. குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக துணை ஆட்சியர் பதவியில் சேருவோர் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல், டிஎஸ்பி-யாக பணியில் சேருவோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருப்பதால் குரூப்-1 தேர்வுக்கு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல், துணை ஆட்சியர், டிஎஸ்பி நீங்கலாக மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரும் வருவாய் பிரிவு அல்லாத பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெறலாம். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்களின் அடுத்த உடனடி வாய்ப்பாக இருப்பது குரூப்-1 தேர்வுதான். தற்போது குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2001-06 வரையிலான காலத்தில் பணி நியமன தடைச் சட்டம் அமலில் இருந்ததால் குரூப்-1 தேர்வு உட்பட எந்த போட்டித்தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி நடத்தவில்லை. பணிநியமன தடைச் சட்டம் அமலில் இருந்ததால் பாதிக்கப் பட்ட இளைஞர்களின் நலனை கருத் தில்கொண்டு 2006-11 காலத்தில், குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டது. எனினும், அந்தக் காலகட்டத்தில் குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படவில்லை. இதனால், வயது வரம்பு சலுகையை இளைஞர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது. ஆந்திரம், கேரளம், குஜராத், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 39, 38, 45, 45 என்ற அளவில் உள்ளன. அதிலும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெண்களுக்கு மேலும் கூடுதலாக 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான வயது வரம்பைக் கூட யுபிஎஸ்சி 35-ல் இருந்து 37-ஆக உயர்த்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களில் பெரும் பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அவர் களுக்கு குரூப்-1 தேர்வு பற்றிய விழிப்புணர்வு காலதாமதமாகவே ஏற்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தேர்வுக்கு தயாராகி முயற்சிக்கும்போது வயது வரம்பு கடந்துவிடுகிறது. எனவே, இதர மாநிலங்களில் இருப்பதைப் போல் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45-ஆக உயர்த்த வேண்டும் என்றும் குறைந்தபட்சம், ஒரு தடவையாவது வயது வரம்பை தளர்த்த வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் திட்டமிட்டபடி ஐஏஎஸ் தேர்வை நடத்தி வரும் யுபிஎஸ்சி வயது வரம்பை 37-ஆக உயர்த்தி இருக்கும்போது தமிழக அரசும் கிராமப்புற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வயது வரம்பை 45-ஆக தளர்த்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து, வயது வரம்பால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறும்போது, "தமிழக முதல்வரிடம் நாங்கள் வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒருவேளை வயது வரம்பை 45-ஆக நிரந்தரமாக உயர்த்த முடியாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வயது வரம்பை தளர்த்தி குரூப்-1 தேர்வெழுத அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்தனர். தற்போது 85 காலியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 22 November 2016

புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.

புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு  | புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக் கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடைசியாக ஆசிரி யர் தகுதித்தேர்வு கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத் தப்படவில்லை. தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 50 சதவீத மதிப்பெண் தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனம் ஆகியவை தொடர்பான வழக்கு கள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்து வதற்கான சூழல் உருவாகி யுள்ளது. முந்தைய தகுதித்தேர்வு மூலம் பள்ளிக் கல்வித்துறையிலும் சரி, தொடக்கக் கல்வித்துறையிலும் சரி அதிக எண்ணிக்கையிலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணிநிரவல் காரண மாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முற்றிலுமாக குறைந்துவிட்டன. ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியர்களையே மாணவர் பற்றாக்குறை காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த புதிய தகுதித்தேர்வானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரவும், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற உதவுமே தவிர அரசு பள்ளிகளில் முன்பு போல ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரி யர், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "அரசு பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் முந் தைய தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது மாணவர் பற்றாக்குறை காரண மாக காலியிடங்களும் இல்லா மல் போய்விட்டன. பள்ளிக் கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், குறிப் பிட்ட சில பாடங்களில் சுமார் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) என ஆயிரத்துக்கும் குறைவான காலியிடங்களே நிரப்ப வாய்ப் பிருக்கிறது" என்று தெரிவித்தனர். இந்த ஆண்டு தகுதித்தேர்வு மூலம் சுமார் 4,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித் திருப்பதால் எஞ்சிய 3,500 காலியிடங்கள் தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக் கக்கூடும். இதற்கிடையே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சுமார் 1,600 காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.