TRB

Friday, 18 November 2016

இளைஞர்களின் ஐஏஎஸ் கனவுக்கு வழிகாட்டும் அரசு கல்லூரி பேராசிரியர்

இளைஞர்களின் ஐஏஎஸ் கனவுக்கு வழிகாட்டும் அரசு கல்லூரி பேராசிரியர் இதுவரை 73 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகி உள்ளனர் | இளைஞர்களின் லட்சியமான ஐஏஎஸ் கனவை நனவாக்க இலவசப் பயிற்சி அளித்து, போட் டித் தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியர் பி.கனகராஜ்(47). கோவை அரசு கலைக் கல்லூரியில், அரசியல் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றும் இவர், தஞ்சை அருகே உள்ள குருவாடிப்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
ஐஏஎஸ் கனவுடன் இருந்த கனகராஜ், முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளில் வென்றார். ஆனால், நேர்முகத் தேர்வில் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, கோவை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாள ராகச் சேர்ந்தார். சில மாணவர்கள் 2004-ம் ஆண்டு இவரை அணுகி, ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராவது குறித்து கேட்டுள்ளனர். அவர் களுக்கு கனகராஜ் வழிகாட்டியுள் ளார். 2007-08-ல் இவரிடம் பயிற்சி பெற்ற 8 மாணவர்களில் 2 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஏராளமானோர் இவரை அணுகத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பைத் தனது வீட்டில் தொடங்கினார். அரசு கலைக் கல்லூரியில் மாலை நேரங் களிலும், ஞாயிற்றுக்கிழமைகளி லும் சுமார் 80 பேருக்கு பயிற்சி அளித்தார். இதில் 12 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரிடம் பயிற்சி பெற வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையே, கோவையில் உள்ள 17 மாநகராட்சிப் பள்ளி களில் பயிலும் ஏராளமான மாண வர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளித்தார். இதையடுத்து, மாநக ராட்சி நிர்வாகம், 2011-ல் கோவை நஞ்சப்பா சாலை பகுதியில் உயர் கல்வி மையத்தைத் தொடங்கி, அங்கு வகுப்புகளை நடத்திக் கொள்ள இவருக்கு அனுமதி அளித்தது. இவரிடம் பயின்றவர் களில் 73 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகளாகி உள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய தேர்வு, வங்கித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் வென்று, அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் கனக ராஜ் கூறியதாவது: தற்போது 400-க் கும் மேற்பட்ட மாணவர்கள், மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுக் குப் பயிற்சி பெற்று வருகின்றனர். 'கோல்டன் சண்டே' என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் வகுப்புகளில் 250-க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். இந்த மையத்தில் 80 பேர் தின மும் வந்து படிக்கின்றனர். இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. ஐஏஎஸ் தேர்வுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் நேர்காணலுக்கு உதவும் வகையில் ஆங்கிலத்தில் புத்தகம் தயாரித்து, ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். வாழ்வுக்காக திறனேற்றுதல் இதுதவிர, 55 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 'வாழ்வுக் காக திறனேற்றுதல்' என்ற விழிப் புணர்வுப் பயிற்சி முகாம் நடத்தி யுள்ளோம். இதில், உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான ஆலோ சனைகள், தன்னம்பிக்கை, தகவல் தொடர்பு, ஆங்கிலப் பயிற்சி அளித் துள்ளதுடன், 20 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வுக் கையேடுகளையும் வழங்கியுள்ளோம். கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்காக, கல்லூரியி லேயே வகுப்புகளை நடத்தி வருகிறோம். காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, அட்டப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கும், 'வாழ்வுக்காக திற னேற்றுதல்' வகுப்புகளை நடத்தி யுள்ளோம். நானும், பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் எனது மனைவி வெண்ணிலாவும் சம்பாதிக்கும் பணம், எங்களது வாழ்க்கையை நடத்த போதுமானதாக உள்ளது. பயிற்சி வகுப்புகளை நடத்த எவ் விதக் கட்டணமும் வசூலிப்ப தில்லை. சொந்தப் பணம் மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் புத்தகங்களையும், விழிப்புணர்வுக் கையேடுகளையும் தயாரித்து இலவசமாக வழங்குகிறோம். மாணவர்கள் உயர் கல்வி பயிலவும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவுவது, அவர் களை நேர்மையும் சமூக அக்கறையும் உள்ள அதிகாரிகளாக உருவாக்குவது என்பதே எனது லட்சியம் என்றார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.