TRB

TNTET

Saturday, 31 December 2016

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு | பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் (பொறுப்பு) ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநில அரசு பணியாளர்கள் ஒரு ஆண்டில் பண்டிகைகள் அல்லது நிகழ்வுகள் என்ற வகையில் 3 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை (ஆர்.எச்.) பெற்றுக்கொள்ளலாம். பகவான் வைகுண்டசாமியின் பிறந்த தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில் சேர்க்கப்பட்டது. இறந்துபோன உறவினர்களை நினைக்கக்கூடிய நிகழ்ச்சிகளான கல்லறை திருநாள் என்ற கிறிஸ்தவ மத நிகழ்வையும், ஷபே பாரத் என்ற இஸ்லாமியர்களின் முழுநிலவு நிகழ்ச்சியையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள் பட்டியலில் சேர்க்கும்படி கோரிக்கை விடப்பட்டது. அதன்படி அந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல இந்துக்களும் மகாளாய அமாவாசை தினத்தையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 27 December 2016

TNPSC - HIGH COURT SERVICE EXAMINATION - ORAL TEST - POSTPONED | TNPSC உயர்நீதிமன்றப் பணிக்கான நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - HIGH COURT SERVICE EXAMINATION - ORAL TEST - POSTPONED | TNPSC  உயர்நீதிமன்றப் பணிக்கான நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Certificate Verification in respect of the posts of Personal Assistant to the Hon'ble Judges, Personal Assistant to the Registrars and Personal Clerk to the Deputy Registrars included in Madras High Court Service was held on 14.11.2016, 15.11.2016, 07.12.2016, 14.12.2016 and 19.12.2016. The Oral Test relating to the above said posts had been scheduled to be held from 10.01.2017 to 12.01.2017 at the office of the TNPSC. The above Oral Test has been postponed due to administrative reasons. Further dates for the Oral Test will be communicated later. | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய மாண்புமிகு நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 14.11.2016, 15.11.2016, 07.12.2016 , 14.12.2016 மற்றும் 19.12.2016 ஆகிய தேதிகளில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கண்ட பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு 10.12.2016, 11.12.2016 மற்றும் 12.12.2016 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிர்வாகக் காரணங்களுக்காக அப்பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 22 December 2016

TNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது


TNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 05.06.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 4270 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 343 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.01.2017 முதல் 06.01.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். The Written Examination for the posts of Block Health Statistician in Tamil Nadu Medical Subordinate Service was held on 05.06.2016 FN & AN. Totally 4270 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 343 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held from 04.01.2017 to 06.01.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | Direct Recruitment for the Post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016 | Provisional Selection List After Second Phase of Certificate Verification

விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காலியாக வுள்ள முதுநிலை விரிவுரை யாளர், விரிவுரையாளர், இள நிலை விரிவுரையாளர் பணி யிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத் தப்பட்டு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலை யில், 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, விரிவுரையாளர், இளநிலை விரி வுரையாளர் பணியில் பணியில் தமிழ், ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர் களுக்கு உரிய நடைமுறை மற்றும் சரிபார்ப்புக்கு பிறகு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Provisional Selection List After Second Phase of  Certificate Verification As per the Notification No.3/2016 published on 28.06.2016, the Board conducted written Competitive Examination for the Direct Recruitment   of  Senior Lecturer/ Lecturer/Junior Lecturer in SCERT 2016 on 17.09.2016. Board conducted  first phase of  Certificate Verification on 05.11.2016 and released the Provisional Selection list ( First Phase) in the TRB website on 23.11.2016.  The Board conducted Second Phase of Certificate Verification on 02.12.2016.  After the second phase of Certificate Verification for the remaining subjects Tamil, English, Botany, Zoology and History  for the post of Lecturer and Junior Lecturer the Board releases the Provisional Selection List. The list is prepared based on  the Written Examination marks  and Certificate Verification data (First and Second Phase of C.V) for Lecturer/Junior Lecturer following merit-cum-communal rotation, as per rules in vogue.This selection is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras and the decision of User Department on eligibility of candidate.The appointment order for the eligible candidates  after verifying and  satisfying all conditions will be issued by the Director of State Council for Education Research and Training  separately after due process and verifications.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 20 December 2016

அரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்


அரசு ஊழியர் துறைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் | தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக் கான துறைத்தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) நடத்துகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான துறைத்தேர்வுகள் வருகிற 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடி வடைகின்றன. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 17 December 2016

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது


TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர் பிரிவில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அழைக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 27.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Main Written Examination for the 11 vacancies relating to the post of District Educational Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015 FN, 07.08.2015 FN 08.08.2015 FN. 2432 candidates had appeared for the Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said Recruitment, a list of register numbers of 15 Candidates (List-II) those who have admitted provisionally to Certificate Verification to verify their eligibility under Teacher Category against the vacancies in Physics and Chemistry subjects is hosted at the Commission's web-site "www.tnpsc.gov.in". The certificate verification will be held on 27.12.2016 at the Office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, Chennai - 600 003. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 15 December 2016

TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC  VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மா. விஜயகுமார், இ.ஆ.ப., செயலாளர்The Tamil Nadu Public Service Commission in its Notification No.19/2015, dated 12.11.2015 had invited applications for selection of candidate for appointment by direct recruitment to the post of Village Administrative Officer 2014-2015. The Written Examination was held on 28.02.2016 FN and results were published on 01.07.2016. The certificate verification for the said rectt was held from 01.08.2016 to 08.08.2016. The counselling for this recruitment is scheduled to be held from 19.12.2016 to 23.12.2016 at the o/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003. (Near Broadway Bus Stand/Fort Railway Station). 2. The schedule for the counselling along with the list of candidates who have been provisionally admitted for the Counselling has been hosted in the Commission's Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the Counselling. The same may be downloaded from the Commission's website (www.tnpsc.gov.in) The candidates have also been informed about the date, time and venue of the counselling by means of SMS and E-mail also. 3. Candidates are admitted to the Counselling based on the marks obtained by them in the Written Examination, claims made by them in their On-line applications and their admission for counselling is subject to availability of vacancies in their respective reservation categories as per their rank and rule of reservation of appointments. 4. The candidates who have been admitted for Counselling are directed to present themselves as mentioned in the Counselling Schedule. Candidates who do not appear for Counselling on the date and time allotted to them will lose his/her opportunity, and they will not given any further chance to appear for the same. M.VijayaKumar I.A.S., Secretary இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 11 December 2016

வர்தா' புயல் நாளை (12.12.2016) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்தா' புயல் நாளை (12.12.2016) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.|4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வர்தா' புயல் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:     வங்கக் கடலில் உருவான 'வர்தா' புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது சென்னையில் இருந்து 370 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இது, நாளை (திங்கள்) பிற்பகலில், வடக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதியில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். படிப்படியாக இந்த மழையின் அளவு அதிகரித்து நாளை (திங்கள்கிழமை) காலை முதல் அடுத்த நாள் காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கவிருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC - SUB- INSPECTOR OF FISHERIES, FOREMAN (MARINE) - EXAMINATION - TODAY - 11.12.2016

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Name of the Post
Sub-Inspector of Fisheries 
Foreman (Marine)
in the Tamil Nadu Fisheries Subordinate Service
Pay Scale
Rs.9,300 - 34800/- (PB2) + Grade Pay 4,400/-
Notification No.
18/2016
Date of Notification
09.09.2016

Last date for submission of Application 

06.10.2016
Number of Vacancies

Sub- Inspector of Fisheries – 12 vacancies
Foreman (Marine) – 4 vacancies

Qualification
Annexed

No. of applications successfully Registered

4722

No. of candidates admitted

4375

No. of candidates Rejected

347
Date of Exam

11.12.2016 (Sunday) FN Paper – I – Zoology
Fisheries Science (or) Fisheries Technology and Navigation Engineering

11.12.2016 (Sunday) AN Paper – II – General Studies

Mode of Exam
OMR (Objective type)
Exam Centre

Chennai centre only


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 9 December 2016

சென்னை உயர்நீதிமன்றப் நேர்முக உதவியாளர்பணி - சான்றிதழ் சரிபார்ப்பு (14.12.2016) அறிவிப்பு.

சென்னை உயர்நீதிமன்றப் நேர்முக உதவியாளர்பணி - சான்றிதழ் சரிபார்ப்பு | இது குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய மாண்புமிகு நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர், பதிவாளர்களுக்கான நேர்முக உதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 17 விண்ணப்பதாரர்களுக்கு 14.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. செயலாளர்Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Certificate Verification in respect of the post(s) of Personal Assistant to the Hon'ble Judges, Personal Assistant to the Registrars and Personal Clerk to the Deputy Registrars included in Madras High Court Service for 17 candidates has been scheduled to be held on 14.12.2016 at the office of the Tamil Nadu Public Service Commission , Frazer Bridge Road, Chennai -3. The details with regard to the above Certificate Verification has been hosted on the Commission's website. SECRETARY இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 8 December 2016

TNPSC GROUP I தேர்விற்கு விண்ணப்பிக்க 12.12.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP I தேர்விற்கு விண்ணப்பிக்க 12.12.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, 09.11.2016 நாளிட்ட 19/2016ம் எண்ணுடைய அறிவிக்கையினை 09.11.2016 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 08.12.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர். இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க 12.12.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த 15.12.2016 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மா. விஜயகுமார், இ.ஆ.ப செயலாளர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE Tamil Nadu Public Service Commission has issued notification no. 19/2016 dated: 09.11.2016 for Direct Recruitment to the posts included in the Group I services. Despite the instructions given to the Candidates, to submit their application through on-line much before the closing date and not to wait till the last date for submitting application to avoid the possibility of delay in submission on account of heavy load or any other reasons on internet/website, large number of candidates are trying to submit their application at the crucial dates. On considering the representations received for extension of last date and to facilitate large number of candidates trying to submit their application, Commission has decided to extend the last date for submission of application upto 12.12.2016 and correspondingly the last date for payment upto 15.12.2016. However, there is no change in the date of Preliminary Examination. Further extension of dates will not be given on any account. Hence the candidates are advised to utilize this opportunity and submit their application well in advance. M. Vijayakumar, I.A.S., Secretary.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மிலாடி நபி: 12க்கு பதில் 13ம் தேதி விடுமுறை- தமிழக அரசு

மிலாடி நபி: 12க்கு பதில் 13ம் தேதி விடுமுறை- தமிழக அரசு | மிலாடி நபி முன்னிட்டு 13.12.2016 ஆம் தேதிஅன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.  G.O Ms. No. 931 Dt: December 08, 2016 Public Holiday for Milad-un-Nabi declared on 13.12.2016 under Negotiable Instruments Act, 1881 – Orders – Issued.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

13 ஆம் தேதி கொண்டாடப்பட விருந்த மிலாடி நபி பண்டிகை 12ஆம் தேதிக்கு ( விடுமுறை ) மாற்ற மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க! | பல்வேறு வழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித் தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம் படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும் கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும் 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் பலர் தேர்ச்சி பெற்றனர். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்றுவந்த வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்வர்கள் இனி நிம்மதியாக அடுத்த தேர்வுக்குத் தயாராகலாம். கூடிய விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்று பிரிவுகளில் நடைபெறும். ஆசிரியர் பயிற்சி பட்டயம்(D.T.Ed.) படித்தவர்கள் தாள் ஒன்றை எழுத வேண்டும். கலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (B.A.+B.Ed.) தாள் இரண்டு எழுத வேண்டும். அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் (B.Sc. + B.Ed.) தாள் இரண்டு "A"எழுத வேண்டும். மூன்று தாள்களுமே 150 கேள்விகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். தேர்ச்சி பெறுவதற்கு தற்போதுள்ள விதிமுறைப்படி பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்தத் தகுதி மதிப்பெண்களில் இருந்து 5 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண்கள் பெற்றால் போதும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். முதல் தாள் 5 பிரிவுகள் கொண்டதாக இருக்கும்தமிழ் - 30 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 30 மதிப்பெண்கள், குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள், கணிதம்- 30 மதிப்பெண்கள், சூழ்நிலையியல் - 30 மதிப்பெண்கள். ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள். இரண்டாம் தாள் கலைப்பிரிவு, நான்கு பிரிவுகள் கொண்டதாக இருக்கும் தமிழ் - 30 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 30 மதிப்பெண்கள், குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள், சமூக அறிவியல்- 60 மதிப்பெண்கள். ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள். இரண்டாம் தாள் அறிவியல் பிரிவு, நான்கு பிரிவுகள் கொண்டதாக இருக்கும் தமிழ் - 30 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 30 மதிப்பெண்கள், குழந்தை வளர்ப்பு உளவியல் - 30 மதிப்பெண்கள், கணிதம் மற்றும் அறிவியல் - 60 மதிப்பெண்கள். ஆக மொத்தம் = 150 மதிப்பெண்கள். வெறுமனே 'ஜஸ்ட் பாஸ்'என்பது வேலை பெறுவதற்கு உதவி செய்யாது என்பதைத் தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வேலை வாய்ப்பு பெறுவதற்கு 'வெயிட்டேஜ்'முறையைத் தமிழக அரசு பின்பற்றுகிறது. முதல் தாளில் வெற்றி பெற்று, இடைநிலை ஆசிரியராக விரும்புபவர்களுக்கு, அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பட்டயப்படிப்பு மதிப்பெண்களில் இருந்து 25 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் 'வெயிட்டேஜ்'முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும். இரண்டாம் தாளில் வெற்றி பெற்று பட்டதாரி ஆசிரியராக விரும்புபவர்களுக்கு அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 10 சதவீதமும், டிகிரி மதிப்பெண்களில் இருந்து 15 சதவீதமும், பி.எட்.மதிப்பெண்கள் 15 சதவீதமும், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் இருந்து 60 சதவீதமும் என்ற அளவில் 'வெயிட்டேஜ்' முறையில் மதிப்பெண்களின்படி வேலைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்படும். +2, டிகிரி மதிப்பெண்கள் எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. இனிமேல் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தகுதித் தேர்வில் நாம் எவ்வளவு அதிகம் மதிப்பெண்கள் பெறுகிறோம் என்பதை வைத்துத்தான் நம் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும். ஆக, ஆசிரியர் வேலை தேடுவோர் கையில் உள்ள ஒரே மந்திரக்கோல், தகுதித் தேர்வு மட்டுமே! மொத்தமுள்ள 150 கேள்விகளுக்கு 130 மதிப்பெண்களையாவது தாண்டினால்தான் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை நோக்கி நெருங்க முடியும். எனவே, தகுதித் தேர்வுக்கு திட்டமிட்டுச் சரியாக நிறைவாகத் தயாராக வேண்டும். மூன்று தாள்களுக்கும், தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகியவை பொதுவானவை. தமிழ்ப் பாடத்திற்கு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இலக்கண அறிவோடு, பாடப்பகுதியில் உள்ள முழுமையான இலக்கிய, உரைநடைச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலப் பாடத்திற்கு அடிப்படை இலக்கணம் அவசியம். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களின் பயிற்சிகளை முறையாக 'ஒர்க் அவுட்'செய்து பார்த்தால் போதும்.குழந்தை வளர்ப்பு உளவியல் என்பது கொஞ்சம் புதிய பகுதி, இதற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஆனாலும் தேர்வர்கள், தங்களது D.T.Ed. அல்லது B.Ed படிப்பில் படித்திருப்பீர்கள். மனவெழுச்சி, சமூக உணர்வு, ஒப்பார் குழு, அறிவு வளர்ச்சி, உளவியல் முறைகள், தனி ஆள் ஆய்வு, பல்வேறு உளவியல் அறிஞர்களின் கொள்கைகள், வளர்ச்சி, முன்னேற்றம், முதிர்ச்சி, சிந்தனை மற்றும் மொழி, கவனித்தல், மன நோய்கள், வழி காட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல், மீத்திறக் குழந்தைகள், கற்றல் கோட்பாடுகள் ஆகியவை இந்த குழந்தை வளர்ப்பு உளவியலில் அடங்கியிருக்கும். முதல் தாளுக்கான சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு வெளியிட்ட (பழைய) சூழ்நிலையியல் பாடங்களைப் படிக்க வேண்டும்.அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல், அறிவியல், கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பாடங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படிக்காமல், பாடம் முழுவதையும் புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.தேர்வுக்குத் தயாராகும், ஆசிரியப் பட்டதாரிகள் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் தயாராக வேண்டும். ஏனெனில் நீங்கள் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதைத் தேர்வுகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. உங்களுடைய மனப்பான்மைகளும், குணநலன்களும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. உற்சாகத்தோடு தயாராகுங்கள்! வாழ்த்துகள்! ஆக்கம்: முனைவர். ஆதலையூர் சூரியகுமார் எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., எம்.எட்., பி.எச்.டி.,

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 7 December 2016

TNPSC - High Court Services - Certificate verification and Counselling | உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC - High Court Services - Certificate verification and Counselling | உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. I டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுசென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2016 நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) எழுத்துத் தேர்வு கடந்த 28.08.2016 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 02.11.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவு தொடர்பான 290 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் கணினி இயக்குபவர், தட்டச்சர், வாசிப்பவர்/தேர்வாளர், காசாளர், மற்றும் ஒளிப்படி இயக்குபவர் பதவிகளுக்கு 13.12.2016/14.12.2016 முதல் 16.12.2016 வரை நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு SMS மற்றும் E-mail மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண், அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் தங்களின் தரவரிசையை இழக்க நேரிடும் எனவும், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேதி: 02.12.2016 TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 20.07.2016 had invited applications for appointment by direct recruitment to the posts of Computer Operator, Typist, Reader/Examiner, Cashier and Xerox Operator in the Madras High Court Services. The Written examination was held on 28.08.2016 FN & AN (Non - Oral Test Posts) and results published on 02.11.2016. In order to fill up the 290 unfilled vacancies, Certificate verification / Counselling for the post of Computer Operator, Typist, Reader/Examiner, Cashier and Xerox Operator is to be held from 13.12.2016/14.12.2016 to 16.12.2016 at 10.00 A.M. in the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600 003. 2. Candidates are informed individually by speed post / SMS / E-mail about the date and time of the Certificate verification / Counselling. 3. Candidates are admitted to the Certificate verification / Counselling based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. 4 The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. Hence, mere calling for Certificate verification / counselling itself will not confer him/her to claim any right on the post. 5. Candidates who do not appear for Certificate verification / Counselling on the date and time allotted to them will loose his/her opportunity in the combined merit list and they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commission இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 6 December 2016

கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது... கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்...அம்மா அவர்களுக்கு கல்விச்சோலையின் கண்ணீர் அஞ்சலி. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்...அம்மாவின் புகழ் உலகத்தை ஆளட்டும்...

கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது... கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்...அம்மா அவர்களுக்கு கல்விச்சோலையின் கண்ணீர் அஞ்சலி. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்...அம்மாவின் புகழ் உலகத்தை ஆளட்டும்... | உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68. இதனை அப்போலோ மருத்துவ மனை நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை யடுத்து அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. இன்று ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. பின்னர் இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. முதல்வரின் மறைவையொட்டி தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். முதலில் முதல்வர் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அக்டோபர் 1-ம் தேதி தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்து சென் றார். அப்போது, முதல்வர் ஜெயலலிதா வுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக வும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டது. நுரையீரல் தொற்றை நீக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவர் முதல் வருக்கு நுரையீரல் தொற்றை நீக்கு வதற்கான சிகிச்சை அளித்தார். இதை யடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் ஜி.கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் அவ்வப்போது வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்துச் சென்றனர். அவர்களது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. தொடர் சிகிச்சை காரணமாக நுரை யீரல் தொற்று குறைந்து, முதல்வரின் உடல்நிலை சீராகி வருவதாகவும், எனினும் அவர் மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெற வேண் டும் என்றும் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அக்டோபர் 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், மருத்துவர்களிடம் விசாரித்தார். அக்டோபர் 7-ம் தேதி, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், நிதியமைச்சர் .பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துப் பேசினார். அக்டோபர் 8-ம் தேதி திமுக பொருளாளர் மு..ஸ்டாலின், 10-ம் தேதி கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து சென்றனர். இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை உள்ளிட்ட இலாகாக்களை நிதியமைச்சர் .பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவே தொடருவார் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 12-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அக்டோபர் 13-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நலம் தொடர்பாக விசாரித்தனர். அக்டோபர் 22-ம் தேதி ஆளுநர் 2-வது முறையாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் மருத்துவ குழுவினரிடம் விசாரித்தறிந்தார். இதற்கிடையே முதல்வர் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் தமிழகம் முழுவதும் கோயில்களில் யாகம், பூஜைகளை நடத்தினர். இதையடுத்து முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், கடந்த 10 நாட் களுக்கு முன்பு சிறிது சிறிதாக நீக்கப் பட்டு, இயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு வந்தார். அவருக்கு சிங்கப் பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை யில் இருந்து வந்த மேரி, சீமா ஆகியோர் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு முதல்வரை மாற்றினர். அப்போது, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறும்போது, ''முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம்'' என்றார். மாரடைப்பு முதல்வர் எப்போது வீட்டுக்குச் செல்வார், எப்போது மீண்டும் பணிக்கு வருவார் என கட்சியினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீரென மார டைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும் மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் என பல ரும் மருத்துவமனைக்கு வந்தனர். முதல்வர் உடல்நிலை தொடர்பான செய்திகளால் பதற்றம் நிலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர் வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட் டது. அதில், ''முதல்வர் ஜெயலலிதா வுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய நோய், நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், முதல்வர் உடல் நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சென்னை வந்தார். ராஜ்பவனில் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு நள்ளிரவு 12 மணிக்கு அப்போலோ மருத்துவமனை வந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை ஆகியவற்றை அறிந்து கொண்டு ராஜ்பவன் திரும்பினார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதும், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் அதிகள வில் மருத்துவமனை முன்பு குவிந்தனர். பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவ மனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், ''முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு எக்மோ (ECMO) என்ற கருவி மூலம், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என தெரிவித்தது. முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் முதல்வரின் உயிர் பிரிந்தது. இதைக் கேட்டதும் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த அதிமுகவினர் 'அம்மா' என்று கதறித் அழுதனர். தமிழகமே கண்ணீர் கடலில் மிதக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE