TRB

TNTET

Wednesday, 18 January 2017

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நாளை தொடங்குகிறது. அரசு பொறியியல் கல்லூரி களில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட என்ஜினியரிங் பாடப் பிரிவுகளிலும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவுகளிலும் 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 27,635 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜனவரி 6-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதமும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டது. யாருக்கும் அழைப்புக்கடிதம் தபாலில் அனுப்பப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 19, 20-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் உள்ள அமைந் துள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளி) நடைபெறு கிறது. ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண் ணப்பதாரர்கள் அழைக்கப்பட் டுள்ளனர். ஒரே கட் ஆப் மதிப் பெண் பெற்றவர்களும் சான்று சரி பார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப் பதாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் உறுப்பினர்-செயலர் உமா அறிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 4 January 2017

மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நேர்காணல்

மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு. 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில்  நேர்காணல் | இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு., 07.08.2015 மு.. மற்றும் 08.08.2015 மு. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் 19.01.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Main Written Examination for the 11 vacancies relating to the post of District Educational Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015 FN, 07.08.2015 FN & 08.08.2015 FN. 2432 candidates had appeared for the Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said Recruitment, a list of register numbers of 30 candidates those who have been provisionally admitted to Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Oral Test will be held on 19.01.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC | HSE | EXAM TIME TABLE AND NOTIFICATION DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

AIIMS - Ph.D PROGRAMME JANUARY 2017 SESSION .LAST DATE 19.01.2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NEST 2017 | NATIONAL ENTRANCE SCREENING TEST 2017

NEST 2017 | NATIONAL ENTRANCE SCREENING TEST 2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE