TRB

Saturday, 11 February 2017

TNTET2017 | ஆசிரியர் தகுதி தேர்வு 2017 விண்ணப்பங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வந்தடைந்த நிலையில் விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக (பொறுப்பு) காகர்லா உஷா வியாழக்கிழமை மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி..,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி..டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி..டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி...,க்கள் ஆலோசனை கூட்டத்தை, பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி...,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 'ஈகோ' யுத்தம் தான் காரணம் என தகவல் வெளியாகியது.இந்நிலையில், சி...,க் களுக்கு பதில் நேர்முக உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்தது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் பிப்.,10 ல் நடந்தது. இதில் டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை உயர் அதிகாரி கவனமின்றி சி...,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் பங்கேற்க சி...,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். இதனால் சி..., நேர்முக உதவியாளர்களை அழைத்து டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது," என்றார். தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விபு நய்யார் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் பொறுப்பு அதிகாரியாக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்ட மைப்பு நிதிச் சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குநர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக (பொறுப்பு) வியாழக்கிழமை மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள விபு நய்யார், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத் தப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தேர்வு வாரியத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், விபு நய்யார் மாற்றப்பட்டுள்ளார்..

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.