TRB

Saturday, 25 February 2017

TRB-TNTET 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சி டிப்ளமா (டிடிஎட்) முடித்தவர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட் முடித்தவர்கள் எழுதலாம். தமிழ் இலக் கிய படிப்பைப் பொருத்தவரையில், பி.லிட். பட்டத்துடன் பிஎட் அல்லது டிடிஎட் அல்லது தமிழ் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.