TRB

TNTET

Sunday, 26 March 2017

JIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017 நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017

JIPMER ADMISSION 2017-2018 | JIPMER - PUDHUCHERRY அறிவித்துள்ள சேர்க்கை அறிவிப்பு...விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2017  நுழைவுத்தேர்வு நாள்: 04.06.2017

It is informed that JIPMER being an Institute of national importance (Act of Parliament) under the Ministry of Health and Family Welfare, Government of India have been EXEMPTED from NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) (NEET-UG) for admission to MBBS Course in JIPMER, Puducherry The prospectus has been uploaded in the JIPMER website (www.jipmer.edu.in) which contains detailed information of important dates, test, syllabus, eligibility criteria to appear/admission, reservation, examination fee, cities of examination, Age etc. (Kindly click the following link to see the MBBS Prospectus – MBBS Prospectus 2017) Details of Online Application User Interface with screen shot will be hosted in the website separately on 27.03.2017 at 11:00 AM. Students and Parents are, therefore, advised to regularly visit the website for updates.www.jipmer.edu.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 25 March 2017

G.O NO 51 - VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு

வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதுமறையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன" என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 6 March 2017

இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது.


30% ஊழியர்களை கூடுதலாக பணிக்கு எடுக்க பிளிப்கார்ட் திட்டம் | இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல் 600 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் முடிவை எடுத்திருக்கும் சூழலில், கூடுதல் பணியாளர்களை எடுக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. பெங்களூரை மையமாக கொண்டு இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்தோடு போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் யார் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியைச் சமாளிக்கும் விதமாக அதிகமான ஊழியர்களை இந்த ஆண்டு பணிக்கு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவ னத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத் கூறியதாவது: இந்த வருடத்தில் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டு வருகிறோம். கடந்த ஆண்டை விட 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதலான ஊழியர்களைப் பணிக்கு எடுப்போம் என்று எதிர்பாக்கிறோம். பெரும்பாலும் முன் அனுபவம் உள்ளவர்களைப் பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். பிளிப்கார்ட் நிறுவனத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஊழியர்களை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு நிதின் சேத் தெரிவித்தார். ஆனால் கடந்த ஆண்டு எவ்வளவு நபர்களை எடுத்தீர்கள், இப்போது கூடுதலாக தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நிதின் சேத் பதிலளிக்கவில்லை. கடந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் 1,500 ஊழியர்களைப் பணிக்கு எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 10,000 தற்காலிக ஊழியர்களை பிளிப்கார்ட் நிறுவனம் பணிக்கு எடுத்தது. இவர்கள் பெரும்பாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்காக எடுக்கப் பட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பிடிஐ எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்களை எடுக்க திட்டமிட்டு வருகிறோம். முன் அனுபவம் உள்ளவர்களை பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 1 March 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE