TRB

Tuesday, 30 May 2017

தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல்

தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல் | இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சத வீதம் ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவி னரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 20 முதல் மே 26 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் விண் ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் 30-ம் தேதி (இன்று) பதி விறக்கம் செய்யப்படும். நிர்ண யிக்கப்பட்ட இடங்கள் அல்லது அதைவிட குறைவான விண்ணப் பங்கள் பெறப்பட்டிருந்தால், தகுதி யான அனைத்து குழந்தைகளும் சேர்க்கப்படுவார்கள். இந்தப் பெயர் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 31-ம் தேதி (நாளை) அந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 31-ம் தேதி (நாளை) குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். குலுக்கல் நடத்துவதற்காக கல்வித் துறை பிரதிநிதி ஒருவரும், மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுவர். சேர்க்கைக்கு விண்ணப்பித் துள்ள குழந்தைகளின் பெற்றோர், பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடக்கும். விண்ணப் பங்கள் அதிக அளவில் பெறப் பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடக்கும்போது, மாவட்டக் கல்வித் துறை உயர் அதிகாரிகள், வரு வாய்த் துறை உயர் அதிகாரிகள் சென்று பார்வையிடுவார்கள். முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் களான ஆதரவற்றவர்கள், எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகளிடம் பெறப்பட்ட தகுதியான விண்ணப் பங்கள் குலுக்கலின்றி தேர்வு செய்யப்படும். அதற்குப் பிறகு, ஒரு கி.மீ. தொலைவுக்குள் வசிக்கிற, வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தை களுக்கு குலுக்கல் நடத்தப்படும். அதன் பிறகும், இடங்கள் காலியாக இருந்தால், ஒரு கி.மீ.க்கு அதிகமான தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்கு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவு நிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவுக் கும் 5 இடங்கள் வீதம் குலுக்கல் முறையில் காத்திருப்பு பட்டியல் தயார் செய்யப்படும். குலுக்கலில் தேர்வான குழந்தைகள் பள்ளியில் சேராவிட்டால் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.