ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் என்பதும், பள்ளிக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், அப்பள்ளிக் கல்வி சீரழிந்து வருவதற்கும், கல்வியின் தரம் குறைந்துவருவதற்குமான ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது சரியல்ல. - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை | DOWNLOAD
- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Friday, 30 June 2017
ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா?
7-வது ஊதியக்குழு பரிந்துரைக்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு
7-வது ஊதியக்குழு பரிந்துரைக்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு | தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை செயல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதையொட்டி, தமிழக அரசு ஊழியர்களுக்கும் இப்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இந்நிலையில், கடந்தாண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அலுவலர் குழு அமைத்து இது தொடர்பாக பரிந்துரைகள் பெற்று அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவர் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் உள்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை, பணியாளர் மற்றம் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், உறுப்பினர் செயலர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் ஜூன் 30-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப் பிக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டிருந்தது. இக்குழுவினர் சமீபத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற, பெறாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து கோரிக்கைகளை பெற்றனர். இக்குழு அறிக்கை அளிப்பதற்கான காலம் இன்றுடன் முடிவதைத் தொடர்ந்து, மேலும் 3 மாதங்களுக்கு அறிக்கை அளிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கு 1.41 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். அவர்களது தரவரிசைப் பட்டியல் கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. கலந்தாய்வை கடந்த 27-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டிருந்தது. பொதுவாக, பொறியியல் படிப்பைவிட மருத்துவப் படிப்புக்குதான் மாணவர்கள் அதிக முன்னுரிமை தருவார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தமுறை, நீட் தேர்வு முடிவு மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமானதால், ஏற்கெனவே திட்டமிட்டபடி பொறியியல் கலந்தாய்வை 27-ம் தேதி தொடங்க முடியவில்லை. முதலில் பொறியியல் கலந்தாய்வை நடத்தினால், அதில் தேர்வாகிற மாணவர்கள் பிறகு மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கும்போது படிப்பை மாற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் காலி இடங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்கும் விதமாக, மருத்துவக் கலந்தாய்வுக்கு ஏற்ப பொறியியல் கலந்தாய்வு தேதி அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் கலந்தாய்வு பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடித்து ஆகஸ்ட் 1-ம் தேதியன்று முதலாண்டு வகுப்பை தொடங்கிவிட வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் நீட் விவகாரம் காரணமாக எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொறியியல் கலந்தாய்வுப் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதற்கான பணிகளில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக ஜூலை 20 அல்லது 21-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக 30-ம் தேதி (இன்று) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலை. உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
Thursday, 29 June 2017
வேலைக்காக காத்திருக்கும் பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள்...தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா?
பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள். தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும். தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான். மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரைமுறையை தமிழக அரசு உருவாக்கித் தரவில்லை. அதனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலைதான் காணப்படுகிறது. கணினி கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டுவருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் இளங்கலை பட்டத்துடன், பி.எட் பட்டம் கட்டாயம், முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம். ஆனால் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கணினி அறிவியில் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணி வரைமுறைகளையும் அரசாணையையும் உருவாக்கி தந்தால்தான் 40 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கம் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தில் 2011ம் அண்டு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது அந்தப் பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்தில் குறைந்த கல்வித்தகுதி உடைய (DCA PGDCA other Major) ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை செலவு செய்து பயிற்சி கொடுத்தும் பலன் இல்லை. காலங்கள் மாறி வரும் போது அதற்கேற்ப பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும். அந்தந்த பாடங்களுக்குத் தனித்தனியாக பி.எட் பட்டம எதற்காக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 40 ஆயிரம் பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது. எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லாக்காசாகத்தான் உள்ளது. தங்களுடைய பி.எட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை இன்றளவும் உள்ளது. இனியாவது தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வித் தகுதி பின்பற்ற பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணி வரைமுறையை உருவாக்கி அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும். வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் , 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு
பிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்?.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவராஜன் நியமிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினராக, தேர்வுத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராமராஜன், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர்கள் பூபதி, வாசு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சமீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த வருடம் புதிதாக 11ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு வருகிறது. எனவே முதலில் 11ம் வகுப்புக்கு கேள்விகள் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு கேள்விகள் வடிவமைக்க கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பாட நிபுணர்களுடன் பேசி வருகிறார்கள். இந்த கேள்விகள் மாணவர்களின் திறனை பரிசோதிக்கும்படி இருக்கும். மாணவர்கள் புரிந்து படித்திருப்பதை ஆய்வு செய்யும். அதே நேரத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருக்கும். இன்னும் ஒரு மாதத்திற்குள் கேள்விகள் வடிவமைப்பு தயாராகி விடும். அதன்பிறகு அரசின் ஒப்புதல் பெறப்படும். காலாண்டு தேர்வு வர இருக்கிறது. வினாத்தாள் வடிவமைத்து கொடுத்து அதன்பிறகுதான் தேர்வுத்துறை அதை அச்சடிக்க கொடுக்கும். அதனால் தான் விரைவில் கேள்விகளை வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
7-வது ஊதியக் குழு அலவன்ஸ் பரிந்துரைக்கு ஒப்புதல்
7-வது ஊதியக் குழு அலவன்ஸ் பரிந்துரைக்கு ஒப்புதல் | ஏழாவது ஊதியக் குழுவின் அலவன்ஸ் தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஏழாவது ஊதியக் குழு 197 வகையான அலவன்ஸ்கள் குறித்து ஆய்வு செய்து 53 அலவன்ஸ்களை ரத்து செய்ய வும் 37 அலவன்ஸ்களை இணைக் கவும் பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் செயலாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆய்வு செய்து கடந்த 1-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி யில் 34 திருத்தங்களுடன் 7-வது ஊதியக் குழுவின் அலவன்ஸ் பரிந்துரைகளுக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி வீட்டு வாடகைப்படி உட்பட பல்வேறு அலவன்ஸ்கள் உயர்கின்றன. இந்த அலவன்ஸ் உயர்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் 34 லட்சம் பேரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 லட்சம் பேரும் பலன் அடைவார்கள். மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,748 கோடி கூடுதலாக செலவாகும்.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? | பான் எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத் தரவு அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக வருமான வரி கணக்கு தொடர்பான இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in. என்ற பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. வழிமுறைகள் வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in. என்ற இணையப் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இதற்கு எந்த ரிஜிஸ்ட்ரேஷனும் நீங்கள் செய்ய வேண்டாம். பின்னர் அதில் கேட்கப்பட் டுள்ள `பான்' எண்ணுடன் `ஆதார்' எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்க வேண்டும். வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும். எஸ்.எம்.எஸ். மூலம் இணைப்பு ஆதார் எண்ணை பான் எண் ணுடன் இணைப்பதற்கு குறுஞ் செய்தி வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைபேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டு இதனை என்ற 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப்படும். ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும். `பான்' எண்ணுடன் `ஆதார்' எண் இணைப்பை ஏற்படுத்த பய னாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவ சியம். பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால்: ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்கு மாயின் இணைப்பு தோல்வி யடையும். வரி செலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டி யிருக்கும், அதாவது ஆதார் தரவுப் பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங் கைத் திருத்த வேண்டியிருக்கும். பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சரியாக குறிப்பிடுவது மிக அவசியம் | DOWNLOAD
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது | பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இது நடை முறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர், தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்பு உத்தர விட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதில் பான் எண்ணுடன் ஆதார எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் வழியாக வரி தாக்கல் செய்வதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி திருத்தம் கொண்டு வந் தார். வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் மற் றும் பல பான் கார்டுகள் வைத்து வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என இரு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. வருமான வரி சட்டம் 139ஏஏ (2)-ன் படி, வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த்துறை தெரிவித் துள்ளது. வரி செலுத்துபவர்களில் இதுவரை 2.07 கோடி பேர் ஏற் கெனவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் இந்தியாவில் 25 கோடி பேர் பான் எண்ணை வைத்துள்ள னர். ஆதார் எண் மொத்தம் 111 கோடி பேருக்கு இதுவரை வழங்கப் பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளத் தின் மூலமாக இணைப்பதற்கான வசதிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்
ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல் | 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி கூறுகையில், "1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும். அதன் பின்னர் 2018-19-ம் கல்வி ஆண்டில் இந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்" என்றார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும். மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8-ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 28 June 2017
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன்? 20 கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன்? 20 கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந் தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது ஏன் என்பது குறித் தும், இதை கட்டாயமாக்காதது ஏன் என்பது குறித்தும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. தஞ்சை மாவட்டம் பந்த நல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அப்பள்ளி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க தமிழக அரசு கடந்த 2012-ல் உத்தரவிட்டது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழி வகுப்பு கள் தொடங்க அனுமதி மறுப் பது பாரபட்சமானது. எனவே எங்களது பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனு மதிக்க உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று அரசுக்கு 20 கேள்விகளை எழுப்பி பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: கல்வி என்ற மிகப்பெரிய ஆயுதம் கொண்டு உலகையே மாற்றலாம் என நெல்சன் மண் டேலா கூறியுள்ளார். கல்வி யில் கிராமப் புற மாணவர் கள் புறக்கணிக்கப்படுகின்ற னர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழிப் பாடத்தையும் நடத்துவதால், ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி யளிப்பதால் எந்த உபயோக மும் இல்லை. இதேநிலை தொடர்ந்தால் கிராமப்புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்குச் செல் வது கிடையாது. முறையாக வகுப்புகளை நடத்துவது கிடையாது. பலர் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசுப் பள்ளியின் தரம் எப்படி உயரும்? அரசுப் பள்ளி ஆசிரி யர்கள் அர்ப்பணிப்புடன் பணி யாற்றினால் ஒழிய நமது எதிர் காலம் பிரகாசமாக இருக்காது என்றார். பின்னர், சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதி பதி அவற்றுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டார். நீதிபதி எழுப்பிய 20 கேள்விகள் # அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்காதது ஏன்? அதை அரசு கட்டாயமாக்காதது ஏன்? # 2012-க்குப் பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன? # அந்த வகுப்புகளில் தற்போது எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? # தமிழ்வழி ஆசிரியர்களே அங்கு ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகின்றனரா? # ஆங்கில வழி வகுப்பை நடத்த அங்கு பயிற்சி பெற்ற வேறு ஏதேனும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? # அரசுப் பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வது ஏன்? # குறித்த நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? # ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்குவதை ஏன் தடை செய்யக்கூடாது? # ஊரகப்பகுதிகளில் அரசுப் பள்ளிகளை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களை ஏன் அனுமதிக்கக்கூடாது? # பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதை ஏன் தடை செய்யக்கூடாது? # இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசி ரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்? # எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்?. # அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க தமிழக அரசு பறக்கும் படையை அமைத்துள்ளதா? # கிராமப்புற, மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வரு வதை கண்டறிய ஏன் பயோ-மெட்ரிக் எனப் படும் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தை பொருத்தக் கூடாது? # ஆசிரியர்களின் வருகையை நாள் முழு வதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா? # கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன? # கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன? # கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன? # மாறிவரும் கல்வி கற்பிக்கும் முறைக் கேற்ப தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குகிறதா? # அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதைத் தடுக்க மாநில மற்றும் மாவட்ட வாரியாக அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறதா? என்பது குறித்து வரும் ஜூலை 14-ம் தேதிக் குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.
அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விவரத்தை இணையதளத்தில் அறியலாம்
அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விவரத்தை இணையதளத்தில் அறியலாம் | தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங் கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-க்களில் உள்ள அரசு ஒதுக் கீட்டு இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மாவட்ட அளவில் ஜூன் 23 முதல் நடைபெற்று வருகிறது. மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கலந்தாய் வுக்கு அழைக்கப்படுகிறார்கள். கலந்தாய்வு நாள், நேரம், இடம் ஆகிய விவரங்கள் விண்ணப்ப தாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட் டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு கலந் தாய்வு நாள், இடம், நேரம் ஆகிய விவரங்களை அறியலாம்.
5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு ஜூலை 5-ம் தேதி கலந்தாய்வு
5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு ஜூலை 5-ம் தேதி கலந்தாய்வு | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி ஆகிய 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புக ளில் மொத்தம் 624 இடங்கள் உள்ளன. 2017-18ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகளில் சேர 2,934 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இப்பட்டியலை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) காணலாம். கலந்தாய்வு ஜூலை 5-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட மாணவர் களுக்கு தபால் மூலமாக அனுப் பப்பட்டு வருவதாகவும், உரிய கட் ஆஃப் மதிப்பெண் தகுதியிருந்தும் அழைப்புக் கடிதம் வரவில்லை எனில் சட்டப் பல்கலைக்கழகத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.
1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | கால்நடைத் துறையில் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரால் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் வரவேற்கப்பட்டது. மேலும் இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு கடந்த மே 10-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் நானும் கலந்துகொண்டேன். ஆனால், இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்தப் பணிக்கு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, நியாயமான முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோரை நியமித்து நேர்மையாக இந்தத் தேர்வை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, ''கால்நடை உதவியாளர்களுக்கான நியமனம் மாவட்ட அளவில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது மாநில அளவில் தவறுதலாக இந்த நியமனம் நடைபெறவிருந்தது. எனவே, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துள்ளதால் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து கால்நடை துறைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் புதிதாக தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
Tuesday, 27 June 2017
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: கல்வித் துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்று வதற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். இது வரை 47 அறிவிப்புகள் வெளியாகி யுள்ளன. மேலும் பல அறிவிப்புகள் வெளியாக உள்ளன. 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். மத்திய அரசின் பல்வேறு பொதுத் தேர்வு களிலும் வெற்றிபெறும் வகை யில் தமிழக மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் மற்றும் வரை படங்கள் அடங்கிய தொகுப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கு சமமான கல்வியை மாநில அரசு கல்வித் திட்டத்திலும் அமல்படுத்த விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசுப் பள்ளிகளில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பது தொடர்பான உத்தரவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சில நாட்களில் இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும். பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் ரூ.7,700-ஆக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் 1-ம் தேதியே பகுதி நேர ஆசிரி யர்கள் சம்பளம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளில் வசூலிக் கப்படும் கல்விக் கட்டணம் தொடர்பாக, நீதிமன்றத் தீர்ப்புக் குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும், மிக அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவிடம் புகார் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக ஒவ்வொருவரும் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. எனினும், அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை. மதுரையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
Monday, 26 June 2017
பள்ளிகளை கலந்து ஆலோசிக்காமல் ‘பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தமாட்டோம்’ சி.பி.எஸ்.இ அறிவிப்பு
பள்ளிகளை கலந்து ஆலோசிக்காமல் 'பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தமாட்டோம்' சி.பி.எஸ்.இ அறிவிப்பு | மத்திய கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் தவறு நிகழ்வதாக சி.பி.எஸ்.இ.க்கு அடிக்கடி புகார்கள் வந்தன. எனவே இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் விசாரணை நடத்தி சி.பி.எஸ்.இ.க்கு அளித்த பரிந்துரையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளை பிப்ரவரி மாதத்திலேயே நடத்துமாறு கூறப்பட்டு இருந்தது. இது குறித்து சி.பி.எஸ்.இ.யும் பரிசீலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு பள்ளிகள் தரப்பில் இருந்து கவலை தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முன்கூட்டி பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. தரமான விடைத்தாள் மதிப்பீட்டுக்காகவே இந்த திட்டம் பரிசீலிக்கப்படுவதாக கூறிய வாரிய அதிகாரி ஒருவர், எனினும் இது குறித்து பள்ளிகள் மற்றும் வாரியத்துடன் தொடர்புடையவர்கள் அனைவருடனும் கலந்து ஆலோசிக்காமல் இதில் முடிவு எதுவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் | கடைசி நாள் 08.07.2017 |
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் | கடைசி நாள் 08.07.2017 | ஜூன் 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
Sunday, 25 June 2017
ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல்
ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் தகவல் | இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருப்பதாக இந்திய பட்டயக் கணக்காளர் சங்க முன்னாள் தேசிய தலைவர் ஜி.ராமசாமி கூறினார். கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் 68-ம் ஆண்டு விழா வரும் ஜூலை 1-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சி.ஏ. படிப்புக்கான புதிய கல்வித் திட்டத்தை வெளியிடுகிறார். மேலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையையும் அமல்படுத்துகிறார். கல்வி, வருமான வரி, கணக்குப் பதிவியல், தணிக்கைத் துறை என பல்வேறு துறைகளிலும் பங்கு வகிக்கும் பட்டயக் கணக்காளர்கள் சங்கம், தேசிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்தியாவில்தான் அதிகம் என்பதை ஏற்க முடியாது. பல நாடுகளில் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. வணிகத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி, அனைத்து வணிகர் களையும் கணக்குகளை தாக்கல் செய்யவைப்பதே இதன் நோக்கம். சரியான கணக்குகளை பதிவு செய்யும் வணிகர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலைவாசியிலும் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்காது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக இந்திய பட்டயக் கணக்கர் சங்கம் நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதுடன், அனைத்துக் கிளைகளிலும் உதவி மையங்களை உருவாக்கியுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். தற்போது நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. சி.ஏ. பாடங்களில் தற்போதைய தேவைக்கேற்ற மாறு தல்களைக் கொண்டுவந்துள் ளோம். சர்வதேச அளவில் கணக்கு களை சரிபார்க்கும் அளவுக்கு இந்திய ஆடிட்டர்களைத் தயார் செய்து வருகிறோம் என்றார்.
அரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல்
அரசு, தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும் சுகாதாரத் துறை அமைச்சர், செயலாளர் தகவல் | அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை அரசே நடத்தும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தலைமைச் செயல கத்தில் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 456 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,594 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 2,203 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 391 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 783 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 664 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 119 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 30 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதம் 170 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 144 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 26 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு 1,020 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 867 இடங்கள் (85 சதவீதம்), மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாண வர்களுக்கு 153 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களின் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும். 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 1,200 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங் களுக்கு மத்திய அரசின் பொது சுகாதார சேவை இயக்ககம் (டிஜிஎஸ்எஸ்) கலந் தாய்வு நடத்தும். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநி யோகம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரை நடை பெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சமர்ப்பிக்க ஜூலை 8-ம் தேதி கடைசி நாள். தரவரிசைப் பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளி யிடப்படும். கலந் தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும்.
30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்
30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல் | 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் சரோஜா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகிறது. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகையை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதற்காக, பஞ்சாயத்துகளில் டேட்டா என்டரி ஆப்பரேட்டர் நியமிக்கப்படுவார்கள். அங்கன்வாடி மையங்களில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. எனவே, விரைவில் 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். சபாநாயகர் பாராட்டு மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது, தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விவாதம் நடைபெறும். அந்த அளவுக்கு காரசாரமாக விவாதம் இருக்கும். ஆனால், நேற்று பேசிய தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவன் தனது பேச்சை 14 நிமிடங்களில் முடித்துவிட்டார். இடையில் அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு பேசவில்லை. அவர் பேசி முடித்த பிறகே அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்தார். விரைவாக பேசி முடித்த தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவனுக்கு சபாநாயகர் ப.தனபால் பாராட்டு தெரிவித்தார். அவர் பேசும்போது, "அனைத்து உறுப்பினர்களும் கீதா ஜீவனின் பேச்சை பின்பற்றி விரைந்து முடிக்க வேண்டும்" என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை | மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை | மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு | தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை 'நீட்' தேர்வு முடிவின் அடிப்படையில் நடைபெறும் என்றும், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது | DOWNLOAD
Saturday, 24 June 2017
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது | எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்றும், கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களே அதிகமானோர் நீட் தேர்வை எழுதினர். இதனால் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் பெரும்பாலான மாணவர்கள் தேவையான பயிற்சி பெற்ற பின்னரும் குறைவான மதிப்பெண்களே பெறமுடிந்தது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் சுமார் 5,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தால் தான் மாணவர்களை சேர்க்க முடியும். இந்த வருடம் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் 'வருகிற 27-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். ஜூலை 17-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும். மாநில திட்ட கல்வியில் படித்த மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட வாரிய கல்விமுறையில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் வழங்கப்படும். இதுகுறித்த முழு விவரமும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்' என்றார் | DOWNLOAD
Friday, 23 June 2017
NEET 2017 RESULT | நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன.
நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியீடு! | கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று (23.06.2017) வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் அறியலாம். இந்திய அளவில் முதலிடம் 697/720 விரைவில் வெளியாகிறது தமிழக மாணவர்கள் ரேங்கிங் பட்டியல் ஒரு வாரத்தில் விண்ணப்பம். மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும்த என தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புககளுக்கான கலந்தாய்வு தொடங்கிய பின்பே தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் வரவில்லை. இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து விலக்கு கோரியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 7-ந்தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதற்கிடையே நீட் தேர்வில் கேள்விகள் பாரபட்சமாக இருந்ததாக கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்ததுடன், ஜூன் 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று காலை நீட் தேர்வு முடிவு www.cbseneet.nic.in, www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது. முடிவை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். முதல் 25 இடங்களை பிடித்தவர்களின் பெயர், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவ்தீப் சிங் முதலிடம் பெற்றார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 697 மதிப்பெண் பெற்றார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆர்சித் குப்தா, மணிஷ் மூல்சந்தானி ஆகியோர் தலா 695 மதிப்பெண்கள் பெற்று 2-வது, 3-வது இடங்களை பெற்றனர். முதல் 7 இடங்களை மாணவர்களே பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 16 மாணவர்களும், 9 மாணவிகளும் உள்ளனர். முதல் 25 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் ஆண்கள், 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 பேர் பெண்கள். திருநங்கைகள் 5 பேர். திருநங்கைகள் 8 பேர் தேர்வு எழுதியதில் 5 பேர் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை ஆங்கிலத்தில் தான் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேரும், 2-வதாக இந்தியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 663 பேரும் எழுதினார்கள். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 65,170 எம்.பி.பி.எஸ்., 25,730 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் அகில இந்திய கவுன்சிலிங் மூலமும், மீதி 85 சதவீத இடங்கள் மாநில கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநில கவுன்சிலிங் எப்போது நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD
பி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் 30-ம் தேதி கடைசி நாள்
பி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் 30-ம் தேதி கடைசி நாள் | தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14 அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளிலும் உள்ள பிஎட் இடங்களில் 1,777 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன. இதில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 21-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் லெடி வெலிங் டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 13 கல்வியியல் கல்லூரி களில் வரும் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலை சுயசான்றொப்பமிட்டு இந்த சலுகை கட்டணத்தில் விண் ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் ஜூலை 3-ம் தேதிக்குள் 'செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005' என்ற முக வரிக்கு அனுப்ப வேண்டும். கல் வித்தகுதி, தேர்வுமுறை, வெயிட் டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட இதர விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
காலஅவகாசம் நீட்டிப்பு: பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு | பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 2-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில், பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பொருட்டும், 11-வது வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்தும் தமிழக அரசால் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. இப்பணிகளை அனுபவமிக்க கல்வியாளர்கள், திறமையான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் பங்குபெற ஆர்வம் தெரிவிக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் ( www.tnscert.org) விவரங்களை 23-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்காக பதிவு செய்வதற்கான காலம் ஜூலை 2-ந் தேதி (ஞாயிறுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் ஆர்வலர்கள், இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த, பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டச் சீரமைப்பு அறிக்கைகள் (கோத்தாரி குழுவின் அறிக்கை, தேசியக் கலைத்திட்ட வரைவு 2005 மற்றும் புதிய கல்விக்கொள்கை (வரைவு) 2017-18), ஆகியவற்றில் கருத்துச் செறிவு பெற்றிருத்தல் நலம். ஆர்வமுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு
கலந்தாய்வு ஜூலை 19-ந்தேதி தொடங்குகிறது கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் 30-ந்தேதி வெளியீடு துணைவேந்தர் பேட்டி | கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படும் என்றும், கலந்தாய்வு ஜூலை 19-ந்தேதி தொடங்குவதாகவும் துணைவேந்தர் திலகர் கூறினார். நாமக்கல்லில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் குறித்த பட்டப்படிப்பு மற்றும் 3 தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் என மொத்தம் 4 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. கால்நடை மருத்துவ படிப்பிற்கு இந்த ஆண்டு 23 ஆயிரம் பேர் ஆன்-லைனில் விண்ணப்பித்து உள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது, வருகிற 30-ந்தேதி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு வருகிற (ஜூலை) 19-ந்தேதி தொடங்கி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு புதிய படிப்பு எதுவும் இல்லை. அதேபோல புதிய கல்லூரிக்கும் வாய்ப்பு இல்லை. தனியார் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமும் இல்லை. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முடியாத நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு தள்ளிவைப்பு | என்ஜினீயரிங் படிப்புக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ரேங்க் பட்டியல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 584 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 988 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். அவர்களில் ஆண்கள் 85 ஆயிரத்து 950. பெண்கள் 51 ஆயிரத்து 38 ஆகும். விண்ணப்பித்தவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 1,146 பேரும், மாற்றுத்திறனாளிகள் 227 பேரும், விளையாட்டு மாணவர்கள் 2,082 பேரும் உள்ளடங்குவர். 70 ஆயிரத்து 769 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். கடந்த 20-ந்தேதி 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டது. ரேங்க் (தரவரிசை) பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கலந்தாய்வு தள்ளிவைப்பு என்ஜினீயரிங் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. மருத்துவ கலந்தாய்வு தொடங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து அறிவித்த பின்னர், என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து 59 பேர் உள்ளனர். அவர்களில் 36 பேர் 'நீட்' தேர்வு முடிவை எதிர்பார்த்து உள்ளனர். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 199 கட்-ஆப் மதிப்பெண்ணில் 811 பேர் உள்ளனர். அவர்களில் 645 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 198 கட்-ஆப் மதிப்பெண்ணில் 2,097 பேர் உள்ளனர், அதில் 1,681 பேர் மருத்துவம் செல்ல வாய்ப்பு உள்ளது. 197 கட்-ஆப் மதிப்பெண்ணில் 3,766 பேர் உள்ளனர். இவர்களில் 3,016 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ கலந்தாய்வுக்கு முன்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தினால் என்ஜினீயரிங் தேர்வு செய்த பலர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும். அதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் முடிவு இன்று (23.06.2017) வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி. மறுகூட்டல் முடிவு இன்று (23.06.2017) வெளியீடு | கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்று பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் பலர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டல் முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் தற்காலிக சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Tuesday, 20 June 2017
TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு
TN POLICE RECRUITMENT 2017 RESULT PUBLISHED | தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் உட்பட 15,664 பேருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. காலியாக உள்ள 15,664 பணியிடங்களுக்கு 5 லட்சத்து 80000 பேர் தேர்வு எழுதினர் | DOWNLOAD
DGE - SSLC JUN/JULY 2017 - PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Directorate of Government Examinations - SSLC Jun/July 2017 - Private Candidate Hall Ticket download instructions | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். | அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், ஜூலை மாதம் நடை பெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுத அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப் பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய் முறைத் தேர்வு அடங்கிய அறிவி யல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15-க்கு குறை வாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண் டும் செய்ய வேண்டும். அதோடு எழுத்துத் தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும். மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுத வேண்டும். அதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் மீண் டும் கண்டிப்பாக எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOWNLOAD
TNEA 2017 Random Number and Rank Publication |பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு.
TNEA 2017 Random Number and Rank Publication | பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு. | பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகளுக்கு கணினி மூலம் இன்று செவ்வாய்க்கிழமை (20.06.17) ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உட்பட மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (20.06.17) கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. ரேண்டம் எண் என்பது கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் 16 இலக்க எண் ஆகும். பொறியியல் படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிப்பதால் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். அத்தகைய சூழலில், கலந்தாய்வின்போது யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வினா எழலாம். அப்போது, முதலில் கணித மதிப்பெண் பார்க்கப்படும். அதில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவர் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். ஒருவேளை கணித மதிப்பெண் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும் அதுவும் சமமாக இருப்பின் மாணவர்களின் முக்கிய பாடமும் (உயிரியல், கணினி அறிவியல்) அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதியும் பார்ப்பார்கள். எதிர்பாராவிதமாக பிறந்த தேதியும் ஒன்றுபோல் அமைந்தால், கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பார்க்கப்படும். அப்போது, யாருடைய ரேண்டம் எண்ணின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவர்களுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (20.06.17) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்ட அடுத்த சில விநாடிகளில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டு தங்களுக்குரிய ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம் | DOWNLOAD
முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல்
முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல் | இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்றாலும் முதுகலை படிப்பு படித்திருந் தால் அவர்கள் தாராளமாக பிஎட் படிப்பில் சேரலாம். இப்புதிய நடைமுறை இந்த ஆண்டிலி ருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. பிஎட் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். (பொருளாதாரம், வணிக வியல், சமூகவியல், உளவியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடங் களுக்கு மட்டும் முதுகலை பட்டப் படிப்பு அவசியம்). பிஎட் மாணவர் சேர்க்கைக்கு பட்டப் படிப்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனியே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக் கிறது. அதன்படி, பொதுப் பிரிவினர் எனில் 50 சதவீதமும், பிசி வகுப்பினர் எனில் 45 சதவீதமும், எம்பிசி பிரிவினர் என்றால் 43 சதவீதமும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறவில்லை என்ற போதிலும் அவர்கள் முதுகலை பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களும் பிஎட் சேரும் வண்ணம் புதிய நடைமுறை 2017-18-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு புவியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎட் படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் பெற வில்லை என்றாலும் ஒருவேளை அவர்கள் அந்த பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பின் அவர்கள் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் மாணவர் சேர்க்கையின்போது குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி என்ற பிரச்சினை எழுவதில்லை. காரணம், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே கலந்தாய்வில் இடம் கிடைக்கும் நிலை உள்ளது. புதிய நடைமுறையால், தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில், மதிப்பெண் குறைவாக பெற் றவர்களும் பிஎட் படிப்பில் சேர முடியும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். பொறியியல் பட்டதாரிகள் இட ஒதுக்கீடு 10 சதவீதமாக குறைப்பு கலை அறிவியல் பட்டதாரிகளைப் போன்று பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரும் முறை கடந்த 2015-16-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு எந்த விதமான இட ஒதுக்கீடும் அளிக்கப்படவில்லை. அவர்கள் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பிஎட் படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டனர். 2016-17-ம் கல்வி ஆண்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, கணிதம், இயற்பியல் பாடப் பிரிவுகளில் வழங்கப்படும் பிஎட் இடங்களில் 20 சதவீத இடங்கள் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த சிறப்பு இட ஒதுக்கீடு காரணமாக தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என பிஎஸ்சி பட்டதாரிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, அரசு மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு மொத்தம் 240 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பிஎட் படிப்புக்கு பொறியியல் பட்டதாரிகள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக இருப்பதே பொறியியல் பட்டதாரிகள் பிஎட் சேர ஆர்வம் காட்டாததற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், பொறியியல் பட்டதாரிகளுக்கான இட ஒதுக்கீடு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது-ஜெ.கு.லிஸ்பன் குமார்
Subscribe to:
Posts (Atom)