Monday, 17 December 2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018 (மதுரை,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018 (கோவை, திருப்பூர், சேலம், குன்னூர், ஈரோடு மற்றம் நாமக்கல்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலை - கால அட்டவணை - 17 DECEMBER 2018

வேலை - கால அட்டவணை - 17 DECEMBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணி

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 566 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது டெக்னீசியன், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 422 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக அசிஸ்டன்ட் டெக்னீசியன் (புரொடக்சன் பணிக்கு 108 இடங்களும், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் (பி அண்ட் ஏ) பணிக்கு 31 இடங்களும், ஜூனியர் ரஸ்அபவுட் பணிக்கு 42 இடங்களும் உள்ளன. சிமென்டிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளிலும் அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், வேதியியல் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு முடித்து, பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.370 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஜனவரி இறுதி வாரத்தில் இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

115 இடங்கள்

மற்றொரு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் ஜூ‌னியர் அசிஸ்டன்ட், மெடிக்கல் அசிஸ்டன்ட், சூப்பிரவைசர் போன்ற பணிகளுக்கு 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங், பார்மசி, ஆப்டோமெட்ரி டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள், பி.எஸ்சி. வேதியியல், ஜியாலஜி படித்தவர்களுக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 27-ந் தேதியாகும். இதற்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி

உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் வேலை தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய வன உயிரியல் பூங்காக்கள் செயல்படுகின்றன. தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணிகளுக்கு மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் கலெக்டர், பூங்கா காவலர், பூங்கா வழிநடத்துனர், அட்டன்டன்ட், கேங்மேன், பியூன் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணி வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் The Ministry of Environment, Forest, and Climate Change, National Zoological Park, New Delhi என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 6-1-2019-ந் தேதியாகும். இதுபற்றிய விவரங்களை www.envfor.nic.in என்று இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி பணி

பிராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் (BECIL) எனப்படும் ஒலிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் (பேஷன்ட் கேர்), கோஆர்டினேட்டர் (பேஷன்ட் கேர்) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், கோஆர்டினேட்டர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். லைப் சயின்ஸ் பட்டப்படிப்புடன், ஹாஸ்பிட்டல்/ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். லைப்சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் கோஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-12-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமானப்படையில் ஏர்மேன் வேலை டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேரலாம்

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு இளைஞர்கள் சேர்க்கப் படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஏர்மேன்’ (குரூப்-எக்ஸ்) டெக்னிக்கல், ‘குரூப் ஒய்’ (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... கல்வித் தகுதி: குரூப் எக்ஸ், விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 (10+2 முறையில்)/ இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பிரிவில் சேர விரும்புபவர்கள் பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சில் சேர விரும்பு பவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்2/இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 19-1-1999 மற்றும் 1-1-2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். உடற்தகுதி: குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடையளவு குறைந்தபட்சம் 55 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை தேவையான அளவுக்குள் இருக்கிறதா? என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு கால பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு செய்ய முடியும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 2-1-2019 முதல் 21-1-2019-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற மார்ச் 14 முதல் 17-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதள பக்கங்களை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்படையில் 400 பேர் சேர்ப்பு 10-ம் வகுப்பு படிப்பு தகுதி

கடற்படையில்10-ம் வகுப்புபடித்தவர் களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி களின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். மற்றும் ஏ.ஏ. ஆகஸ்டு 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் மாலுமி பணியில் ஏராளமானவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பிளஸ்-2 படித்த 3 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கான அறிவிப்பை பார்த்தோம். தற்போது 10-ம் வகுப்பு படித்தவர்கள் ‘செய்லர் பார் மெட்ரிக் ரெக்ரூட் (எம்.ஆர். அக்டோபர் 2019)’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதிகளை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-1998 மற்றும் 30-9-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். இதற்கான தேர்வு முறைகள் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு இந்த கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் : 14-12-2018-ந் தேதி

விண்ணப்பிக்க கடைசிநாள் : 30-12-2018

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindian navy.gov.in என்ற முகவரியைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனத்தில் வேலை

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் ‘கேபின் குரூவ்- டிரெயினி’ பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 1-1-2019-ந் தேதியில் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் 12-ம் வகுப்பை 10+2 என்ற முறையில் தொடர்ச்சியாக படித்து முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக 1-1-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.airindiaexpress.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கப்பல்கட்டும் தளத்தில் 798 பணியிடங்கள்

கப்பல்கட்டும் தளத்தில் 798 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளங்களில் ஒன்று ‘மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’. மும்பையில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது டெக்னிக்கல் ஸ்டாப், ஆபரேட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 798 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிகபட்சமாக கம்போசிட் வெல்டர் பணிக்கு 228 பேரும், எலக்ட்ரீசியன் பணிக்கு 44 பேரும், ஸ்ட்ரக்சரல் பேப்ரிகேட்டர் பணிக்கு 187 பேரும், யூடிலிட்டி ஹேண்ட் பணிக்கு 141 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், மெஷினிஸ்ட், ஜூனியர் பிளானர், டிரைவர், ஸ்டோர்கீப்பர், சேப்டிஇன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:- வயது வரம்பு விண்ணப்பதாரர் 1-11-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 38 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள குறிப்பிட்ட தொழிற்பயிற்சி பிரிவில் என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கப்பல்கட்டும் தளத்தில் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு 20 சதவீதம் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 24-ந்தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் பட்டியல் டிசம்பர் 28-ந்தேதி வெளி யிடப்படும். தேர்வு தேதி விவரம் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mazdock.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலக்கரி நிறுவனத்தில் 370 காலியிடங்கள்

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் ‌ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி வாரியாக ஜூ‌னியர் ஓவர்மேன் பணிக்கு 149 இடங்களும், மைனிங் சர்தார் பணிக்கு 201 இடங்களும், டெபுடி சர்வேயர் பணிக்கு 20 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மைன் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு மற்றும் மைனிங் சர்தார், மைன் சர்வேயர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதில் விதிவிலக்கு விவரங்கள், கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-12-2018-ந் தேதி விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. 10-1-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.mahanadicoal.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 15 December 2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.12.2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.12.2018 (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மட்டும் )
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN TAMIL NADU MINISTERIAL SERVICE| விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.01.2019| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : COST ASSISTANT IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT IN TAMIL NADU MINISTERIAL SERVICE| விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.01.2019| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com
List of Current Notifications
S No.Notification NumberName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2018
0236/2018 04.12.201802.01.201902.03.2019 FN&ANAPPLY ONLINE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE/ASSISTANT DIRECTOR OF TRAINING AND ASSISTANT ENGINEER (INDUSTRIES)| விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2018| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE/ASSISTANT DIRECTOR OF TRAINING AND ASSISTANT ENGINEER (INDUSTRIES)| விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2018| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com
List of Current Notifications
S No.Notification NumberName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2018
0335/2018 26.11.201824.12.201802.03.2019 FN&ANAPPLY ONLINE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2018| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2018| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com
List of Current Notifications
S No.Notification NumberName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2018
0434/2018 16.11.201816.12.201824.02.2019 FN&ANAPPLY ONLINE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : LIBRARIAN GRADE-I| விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2018| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : LIBRARIAN GRADE-I| விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.12.2018| முழு விவங்களுக்கு | www.tnpscworld.com
List of Current Notifications
S No.Notification NumberName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2018
0533/2018 14.11.201816.12.201823.02.2019 FN&ANAPPLY ONLINE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : DISTRICT EDUCATIONAL OFFICER| விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2019 | முழு விவங்களுக்கு | www.tnpscworld.com

TNPSC RECRUITMENT 2018 | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : DISTRICT EDUCATIONAL OFFICER| விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2019 | முழு விவங்களுக்கு | www.tnpscworld.com
List of Current Notifications
S No.Notification NumberName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
NOTIFICATIONS - 2018
0137/2018 10.12.201809.01.201902.03.2019  FNAPPLY ONLINE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 13 December 2018

ரயில்வே பாதுகாப்புப் படையின் குரூப் A முதல் F வரையிலான பதவிகளுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு!!

ரயில்வே பணி தேர்வு ரயில்வே பாதுகாப்புப் படையின் குரூப் A முதல் F வரையிலான பதவிகளுக்கு டிசம்பர் 19, 20 இல் தேர்வு நடக்க உள்ளதாக மத்திய ஆட்சேர்ப்புக் குழு தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வில் சுமார் 73 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு. தேர்வாளர்கள் ஹால்டிக்கெட்டை www.indianrailways.gov.in பதிவிறக்கம் செய்யலாம். தேர்வின் போது அரசு அடையாள அட்டைகளில் எதாவது ஒன்றின் அசல் வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 10 December 2018

வேலை - கால அட்டவணை - 10 DECEMBER 2018

வேலை - கால அட்டவணை - 10 DECEMBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஐ.டி.யின் டெல்லி கிளையில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட் பணி

இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் டெல்லி கிளையில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.டெக் படிப்புடன் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 20-ந் தேதியாகும். கூடுதல் விவரங்களை அறிய http://www.iitd.ac.in/ என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் பணியிடங்கள்..

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். ராணுவத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபடும் இந்த நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினர் 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளா்வு பெற முடியும். இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு 12-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரம் http://bel-india.in/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்.சி.ஏ.ஓ.ஆர். மையத்தில் திட்ட ஆராய்ச்சியாளர், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ உள்ளிட்ட பணி

துருவப்பகுதி மற்றும் கடல் ஆராய்ச்சி செய்யும் தேசிய நிறுவனம் சுருக்கமாக என்.சி.ஏ.ஓ.ஆர். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஆய்வு மையத்தில் திட்ட ஆராய்ச்சியாளர், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ உள்ளிட்ட பணிகளுக்கு 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடல் அறிவியல், ஓசனோகிராபி, கடல் வேதியியல், கடல் உயிரியியல் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, என்ஜினீயரிங் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்ளுக்கு பணிகள் உள்ளன. இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கும் ஒருசில பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை இணைய தளத்தில் பார்த்துவிட்டு டிசம்பர் 27-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங் களுக்கு பார்க்க வேண்டிய இணையதள முகவரி http://www.ncaor.gov.in
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொச்சியில் உள்ள கப்பல்தளத்தில் பயிற்சிப் பணி

கொச்சியில் உள்ள கப்பல்தளத்தில் பயிற்சிப் பணியிடங் களுக்கு 320 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் பணிமனைகள் பல்வேறு இடங்களில் செயல்படுகின்றன. அவற்றில் கொச்சின் சிப்யார்டு லிமிடெட் எனும் கப்பல்கட்டும் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கிராஜூவேட்/ டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு 120 பேரும், டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 185 பேரும், டெக்னீசியன் (வெக்கேசனல்) அப்ரண்டிஸ் பணிக்கு 15 பேரும் தேர்வு செய்யப் படுகிறார்கள். மொத்தம் 320 இடங்கள் நிரப்பப்படுகிறது. என்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பட்டதாரி/டெக்சீனியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் பிரிவில் சேரலாம். மேல்நிலைக் கல்வி (12-ம் வகுப்பு) அறிவியல் பிரிவில் படித்தவர்கள் வெக்கேசனல் பயிற்சியாக இதில் சேரலாம். ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் அப்ரண்டிஸ்ஷிப் விதிகளுக்கு உட்பட்ட வயது வரம்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு பயிற்சிக்கான வயது வரம்பை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 20-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்ற இணையதளம் வழியாக பெயரை பதிவு செய்துவிட்டு, குறிப்பிட்ட முகவரிக்கு நகல் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை அறிய apprenticeship@cochinshipyard.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரி பணி

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 312 போ் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ். தற்போது இந்த நிறுவனத்தில் ஸ்கேல்-1 தரத்திலான நிர்வாக அதிகாரி (பொது மற்றும் சிறப்புநிலை) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 312 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கம்பெனி செகரெட்ரி பணிக்கு 2 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 30 இடங்களும், நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் 35 இடங்களும், பொதுப் பிரிவில் 245 இடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-12-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

கம்பெனி செகரெட்ரி, எப்.சி.எஸ், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள், சட்டப்படிப்பு மற்றும் இதர அறிவியல் கலை படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. பொருளாதாரம் மற்றும் அக்கவுண்ட்ஸ் முதுநிலை படிப்புடன், நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை ஆன்லைன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 26-ந் தேதியாகும். முதல்நிலை ஆன்லைன் தேர்வு 30-1-2019 அன்றும், முதன்மை ஆன்லைன் தேர்வு 2-3-2019-ந் தேதியும் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.newindia.co.in/portal/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவியாளர், அதிகாரி, மேலாளர் உள்ளிட்ட பணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்று, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்’. தற்போது இந்த நிறுவனத்தில் உதவியாளர், அதிகாரி, மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 46 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். பிளஸ்-2, பி.டெக், டிப்ளமோ படிப்புகள், இதர பட்டப்படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. போன்ற படிப்புகளை படித்தவர் களுக்கு பணி வாய்ப்ப்புகள் உள்ளன. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தபால் மூலம் கொச்சியில் உள்ள ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் டிசம்பர் 15-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.airindiaexpress.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் போன்ற பணி

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சுருக்கமாக என்.ஐ.என். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் போன்ற பணிகளுக்கு 39 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் பணிக்கும், பிளஸ்-2 படிப்புடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் டெக்னீசியன் பணிக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் என்ஜினீயரிங் பட்ட தாரிகள் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்கள் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி, டிசம்பர் 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நகல் விண்ணப்பம் வருகிற ஜனவரி 8-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://ninindia.org/ என்ற இணையதளத்தில் பார்த்து விட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு அதிகாரி வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஏர் சேப்டி ஆபீசர், அசிஸ்டன்ட் டைரக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏரோநாட்டிக்கல், பி.எஸ்சி., மெக்கானிக்கல், வேதியியல் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 40 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 13-ந்தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

விமானப்படை நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில் ‘கமிஷன்டு ஆபீசர்’ பணியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்கேட் (AFCAT 1/2019) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்.சி.சி. வீரர்களுக்கான சிறப்பு நுழைவின் அடிப்படையிலும் குறிப்பிட்ட பேர் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற ஆண்/ பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 163 பேர் இந்த பயிற்சிகளில் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1996 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுஉடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1994 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி:

பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித் திருக்க வேண்டும். பி.இ., பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு விதமான பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சி.ஏ. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல்- உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர் காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.

கட்டணம் :

தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். careerindianairforce.edac.in மற்றும் afcat.cdac.in என்ற இணையதள முகவரியில் முழுமையான விவரங்களை படித்தறிந்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 30-12-2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள் : 16-2-2019 மற்றும் 17-2-2019

கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்படையில் மாலுமி பணி

கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - ஆகஸ்டு 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2500 பேரும், செய்லர் (ஏ.ஏ. - ஆகஸ்டு 2019) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரையும் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் உத்தேசமாக 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்களை இந்த பயிற்சியில் சேர்த்து மாலுமியாக பயிற்சியளித்து பணியமர்த்திக் கொள்கிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நிய மனம் பெறலாம்.

இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-1998 மற்றும் 31-7-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்த பாடங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். இதற்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 14-12-2018-ந் தேதி

விண்ணப்பிக்க கடைசிநாள் : 30-12-2018

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindian navy.gov.in என்ற முகவரியைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 9 December 2018

814 கணினி பயிற்றுநர்கள் நியமனம்: அரசு உத்தரவு வெளியீடு

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களில் 814 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் பிறப்பித்துள்ள அரசு உத்தரவு: கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தற்போது 2,939 அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில் தற்போது 814 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட 814 கணினி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஏற்பாடாக நவம்பர் 2018 முதல் பிப்ரவரி2019 முடிய 4 மாதங்கள் அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய நேரடி நியமனம் மூலம் கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும்போது குழு ஒன்றுஅமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், கணினி பயிற்றுநர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்க வசதியாக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும். பணியிடங்களில் கணினி பயிற்றுநர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அந்தந்த ஊர்களில் பள்ளி அருகில் வசிக்கும் உள்ளூர் இளைஞர்களில் கணினி பட்டம் பெற்று பி.எட்., தகுதி பெற்றவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தேர்வுக் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.ஒப்பந்த அடிப்படையிலான இந்தத் தற்காலிக நியமனங்கள் தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நியமனம் தற்காலிகமானது என சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நியமிக்கப்படும் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு மூன்று மாதங்களுக்கு (2018 டிசம்பர்- 2019 பிப்ரவரி வரை) ஊதியம் வழங்கும் வகையில் ஏற்படும் உத்தேச செலவினம் ரூ.1 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 December 2018

கண் சிகிச்சை உதவியாளர் பணி

கண் சிகிச்சை உதவியாளர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தால், பரிந்துரை செய்யப்படும், என, கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள, 43 கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தீர்மானித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க, பிளஸ்2 தேர்ச்சியுடன், மாநில மருத்துவ கல்லுாரியில் நடத்தப்பட்ட 'ஆப்தால்மிக் அசிஸ்டென்ட்' பட்டய படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. ஓ.சி., பிரிவினருக்கு வயது வரம்பு, 30 ஆகும்.மேற்கண்ட தகுதிகளுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற விதவைகள், கலப்புமணம் செய்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அவர்களை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினர் சார்ந்தோருக்கு முன்னுரிமை உண்டு. வரும், 10ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் பிற சான்றுகளுடன் வந்து பதிவு செய்தால், பணிக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அறிவித்துள் ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 4 December 2018

வேலைவாய்ப்பு: ‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’வில் பணி!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில், காலியாக உள்ள வங்கி ஆலோசகர் மற்றும் இயக்குநர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : வங்கி ஆலோசகர், இயக்குநர்

காலியிடங்கள் : 2

சம்பளம் : ரூ.15,000 - ரூ.25,000

கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 15 ஆண்டுகள்

வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10/12/2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 3 December 2018

வேலை - கால அட்டவணை - 3 DECEMBER 2018

வேலை - கால அட்டவணை - 3 DECEMBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணி

தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த (பிரஸ்ஸர்) இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை வாரிய அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 17-2-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு நூலகர், பிலிம் லைபிரரியன், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு நூலகர், பிலிம் லைபிரரியன், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 29 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிாிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. லைபிரரி சயின்ஸ் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள், கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.லிப் சயின்ஸ்., படித்தவர்களுக்கு பணி உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 16-12-2018-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 23-2-2019 அன்றும், கவுன்சலிங் 2019 மே மாதமும் நடைபெறும். இவை பற்றிய விரிவான விவரங்களைwww.tnpsc.gov.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள பிரின்சிபல் (ஐ.டி.ஐ.), அசிஸ்டன்ட் டைரக்டர் பணி.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பிரின்சிபல் (ஐ.டி.ஐ.), அசிஸ்டன்ட் டைரக்டர் போன்ற பணிகளுக்கு 41 பேரை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரி உள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. பி.இ., பி.டெக் மற்றும் ஆர்கிடெக்ட் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு ரூ.350 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். சிலருக்கு அரசு விதிகளின்படி கட்டண தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டண விவரத்தை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 24-12-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 2-3-2019-ந் தேதி நடைபெற உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எச்.ஏ.எல் நிறுவனத்தில் டிராபிக் கண்ட்ரோலர் பணி

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனம் இந்திய விமானப்படைக்குத் தேவையான விமானங்கள், விமான உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் டிராபிக் கண்ட்ரோலர் பணிக்கு 13 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 19-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய உர நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் மேனேஜர் போன்ற அதிகாரி பணி

தேசிய உரங்கள் நிறுவனம் சுருக்கமாக என்.எப்.எல். எனப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் மேனேஜர் போன்ற அதிகாரி பணிகளுக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளது. வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ., காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அக்கவுண்ட் அதிகாரி பணிக்கு ரூ.700-ம், சீனியர் மேனேஜர் பணிக்கு ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். சில பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 14-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.nationalfertilizers.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனத்தில் கமாண்டர், டிரெயினி பைலட், சீனியர் டிரெயினி பைலட் மற்றும் ஏ.ஜி.எம். போன்ற பணி

இந்திய விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர்லைன் அல்லைடு சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கமாண்டர், டிரெயினி பைலட், சீனியர் டிரெயினி பைலட் மற்றும் ஏ.ஜி.எம். போன்ற பணிகளுக்கு 45 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, எம்.பி.ஏ, மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 21-12-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். குரூவ் கண்ட்ரோலர், அசிஸ்டன்ட் குரூவ் கண்ட்ரோலர் பணிகளுக்கு மட்டும் டிசம்பர் 11,12, 18,19-ந் தேதிகளில் நேரடி நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தோல் ஆராய்ச்சி மையத்தில் சீனியர் ரிசர்ச் பெல்லோ, திட்ட உதவியாளர் (கிரேடு1,2,3) பணி

மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சி.எல்.ஆர்.ஐ.) சீனியர் ரிசர்ச் பெல்லோ, திட்ட உதவியாளர் (கிரேடு1,2,3) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.எஸ்சி., எம்.டெக், பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. படித்தவர்களுக்கு சில பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர் 28 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் 14-2-2018-ந் தேதி நடைபெறும் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். தேவையான சான்றுகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.clri.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் என்ஜினீயர்களுக்கு பணி

அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்களின் நலன்களுக்காக இ.எஸ்.ஐ. எனப்படும் எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கழக மருத்துவமனைகள் நாடு முழுவதும் செயல்படுகிறது. தற்போது புதுடெல்லியில் உள்ள இ்.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஜூனியர் என்ஜினீயர் (சிவில்- எலக்ட்ரிக்கல்) பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சிவில் பிரிவில் 52 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 27 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் 16-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். சிவில் மற்றும் எலக்டரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இந்த ரூ.250 தொகையானது தேர்வாளர் தேர்வை எதிர்கொள்ளும்போது திருப்பி வழங்கப்படும். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 15-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். கட்டணம் 18-12-2018-ந் தேதி வரை செலுத்தலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.esic.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அணுசக்தி நிறுவனத்தில் அதிகாரி வேலை

இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெபுடி மேனேஜர், டெபுடி சீப் ஆபீசர், பயர் ஸ்டேசன் ஆபீசர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 94 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ‘குரூப் ஏ, குரூப் பி’ பரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி பணிகளாகும். டெபுடி மேனேஜர் பணிக்கு மட்டும் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 85 காலியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எச்.ஆர், நிதி மற்றும் கணக்கியல், சட்டம், பயர் சேப்டி, இந்தி போன்ற பாடங்களில் முதுநிலை படிப்பும், தேவையான அனுபவமும் பெற்றவர்களுக்கு பணி உள்ளது. இதர வயது வரம்பு, அரசின் விதிவிலக்கு சலுகைகள், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இது பற்றிய விவரங்கள் www.npcil.nic.in என்ற தளத்தில் வெளியிடப்படும். இணையதளம் வழியாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 19-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் அதிகாரி வேலை

வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் சுருக்கமாக ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி சாராத நிர்வாக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணி களுக்கு 17-12-2018-ந் தேதியில் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக இணைக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வெளிநாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் 100 அமெரிக்க டாலர் தொகை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 17-12-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். வெட்னரி வைராலஜி, வெட்னரி பாக்டீரியாலஜி, வெட்னரி மைக்ரோபயாலஜி, டயரி எக்ஸ்டென்சன், அக்ரி எக்ஸ்டன்சன் உள்ளிட்ட படிப்பு களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களைwww.asrb.org.inஎன்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுருக்கமாக என்.எச்.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் யங் புரபெசனல் (நிதி) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை காண்டிராக்ட் அடிப்படையிலான பணியிடங்களாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11-12-2018-ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். வணிகவியல், கணக்கியல் பட்டப்படிப்புகளுடன், ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ., எம்.பி.ஏ. (நிதி) பயிற்சி பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 11-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.nhai.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருச்சி பெல் நிறுவனத்தில் பணி

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் தற்போது வெல்டர், பிட்டர் போன்ற ஆர்ட்டிசன் பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 71 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம் : வெல்டர் 26, பிட்டர் 38, மெஷினிஸ்ட் - 7. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-11-2018-ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன், பணியிடங்கள் உள்ள பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கட்டணம் செலுத்தவும், தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்யவும் 22-12-2018-ந் தேதி கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 20-1-2019-ந் தேதி நடத்தப் படுகிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.bheltry.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின்சார நிறுவனத்தில் 230 பயிற்சிப்பணி டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்

மின்சார நிறுவனத்தில் 230 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணி களுக்கு டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று எஸ்.ஜே.வி.என். லிமிடெட். மினிரத்னா அந்தஸ்து பெற்ற இது மின்சாரத் துறையின் கீழ் செயல்படும் ஒரு துணை நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

டெக்னீசியன் மற்றும் பட்டதாரிகள் பிரிவில் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன. பட்டதாரிகள் பிரிவில் 100 பேரும், டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ படித்த 50 பேரும், ஐ.டி.ஐ. படித்த 80 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 230 இடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 28-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி :

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்கள் அல்லது பிளஸ்-2 அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டிப்ளமோ டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், பி.இ, பி.டெக் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் பட்டதாரி பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு 4-12-2018-ந் தேதி தொடங்குகிறது. 28-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://www.sjvn.nic.in/index-hi.htm என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE