TRB

Thursday, 8 March 2018

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது தேர்வு முடிவுகள் மே 30-ல் வெளியீடு

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது தேர்வு முடிவுகள் மே 30-ல் வெளியீடு | பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. 7,070 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ- மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் தேர்வெழுதினர். இதற்காக 2,795 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்களில் அறிவி யல் பிரிவில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 819 பேரும், வணிகவியல் பிரிவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 703 பேரும், கலைப் பிரிவில் 13,969 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 57,424 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். சிறைவாசிகளுக்காக சென்னை புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புத் தேர்வு மையத்தில் 82 ஆண் சிறைவாசிகள் தேர்வெழுதினர். சென்னை நகரில் 407 பள்ளிகளில் இருந்து 49,422 மாணவ- மாணவிகள், 156 மையங்களில் தேர்வெழுதினர். தேர்வுக்கூடத்தில் ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினரும், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆய்வு செய்தார். முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்த பிளஸ் 1 மாணவ - மாணவிகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோரும் வாழ்த்துச் சொல்லி தேர்வுக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்தது. முதல் நாளன்று தமிழ் உள்ளிட்ட மொழித்தாளின் முதல் தாள் தேர்வு நடந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு நடைபெறுவதை ஒட்டி அனைத்துத் தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மைய வளாகத்தில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அரசு தேர்வுத்துறை அறிவித்தபடி, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 12-ம் தேதி தொடங்குகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் 70 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் 5,000 ஆசிரியர்களும், பணியாளர்களும் ஈடுபட இருப்ப தாக அரசு தேர்வுத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.