TRB

TNTET

Tuesday, 6 March 2018

தேர்வுக்குத் தயாரா? பிளஸ் டூ உயிரியல்.

தேர்வுக்குத் தயாரா? பிளஸ் டூ உயிரியல் | பிளஸ் டூ உயிரியல் பாடத்துக்கான தேர்வு, உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல் எனத் தலா 75 மதிப்பெண்களை உள்ளடக்கியது. பரவலான உயர்கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிப்பதால் உயிரியல் தேர்வு மாணவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது. உயிரி-தாவரவியல் ஒப்பீட்டளவில் உயிரி விலங்கியலைவிட உயிரி தாவரவியலை மாணவர்கள் எளிமையாகக் கருதுகிறார்கள். உயிரியலின் மதிப்பெண்களை உயிரி-தாவரவியலே தீர்மானிக்கிறது.உயிரி-விலங்கியல் உயிரியலில் ஒப்பீட்டளவில் விலங்கியல் பாடத்தை மாணவர்கள் கடினமாகக் கருதுகிறார்கள். இதற்குக் காரணம் இதர பாடங்களைப் போலத் தன்மதிப்பீடு பகுதி, முந்தைய வருடங்களின் வினாத்தாள்களில் இருந்து மட்டுமே வினாக்களை எதிர்பார்க்க முடிவதில்லை. பாடங்களை முழுவதுமாகப் படிப்பதும், பாட வாரியாக முக்கியக் குறிப்புகளைத் தொகுத்துப் படிப்பதும், அவற்றிலிருந்தே வினாக்களை அடையாளம் கண்டு திருப்புதல் மேற்கொள்வதும், அவ்வப்போது அவற்றை எழுதிப் பார்ப்பதும் விலங்கியல் தயாரிப்புக்கு அடிப்படையாகும். 'விவாதி, உன் கருத்தைக் கூறுக, என்ன செய்வாய்?' என்பதான கேள்விகளுக்கும் இந்தப் பாடக்குறிப்புகளில் இருந்தே விடையளிக்க வேண்டும். அவரவர் கருத்துகளை எழுதக் கூடாது. | DOWNLOAD

No comments: