Monday, 30 April 2018

TNPSC - LAB ASSISTANT EXAM. HALL TICKET DOWNLOAD

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியிடங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் (Forensic Science Department) பதவிக்கான எழுத்துத்தேர்வு 06.05.2018 அன்று முற்பகல் மட்டும் சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள தகுதியான விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். | The Commission has issued Notification No.02/2018 dated: 25.01.2018, for the Written Examination for 56 vacancies in the post of Laboratory Assistant in Forensic Science Department for the year 2016-2018 in the Tamil Nadu Forensic Science Subordinate Service. The examination which is scheduled to be held on 06.05.2018 FN at 8 district centres including Chennai. The Memo of admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission's website (www.tnpsc.gov.in and www.tnpscexams.net). If there is any doubt in downloading Hall Ticket, the candidate may got clarified from the Commission's e-mail ID contacttnpsc@gmail.com or the Commission's Grievance Cell toll free number 1800 425 1002.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நடவடிக்கை தகவல் தொழில்நுட்பத்துறை புதிய ஏற்பாடு

அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நடவடிக்கை தகவல் தொழில்நுட்பத்துறை புதிய ஏற்பாடு ச.கார்த்திகேயன் அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் அரசு இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நவீன ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை செய்து வருகிறது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 558 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் ஜாதிச்சான்று, இருப்பிடச் சான்று, டிஎன்பிஎஸ்சி தேர்வு, குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஆன் லைன் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அடுத்த மாதம் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதில் தேர்ச்சி பெறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிப்பார்கள். மேலும் பள்ளி தொடக்க வகுப்புகளில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். அவர்கள் விண்ணப்பிக்க ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவற்றைப் பெற வேண்டியிருக்கும். அதற்காக மே, ஜூன் மாதங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு இ-சேவை மையங்களை நாடுவர். அதிக அளவில் இ-சேவை மையங்களுக்கு மாணவர்கள் வருவதால் கடந்த ஆண்டு சர்வரின் வேகம் குறைந்து, அனைத்து மையங்களிலும் பணிகள் முடங்கின. இதை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் மே, ஜூன் மாதங்களில் சர்வர் முடங்காமல் இருக்க தகவல் தொழில்நுட்பத்துறை நவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: தற்போது அரசின் பல சேவைகள் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான மின்னாளுமை சேவைகளும் வழங்கப்படுகின்றன. இரு சேவைகளும் ஒரே சர்வர் மூலமாக இயங்கின. இனி பொதுமக்களே இணையதளம் வழியாக 24 மணி நேரமும் விண்ணப்பிக்கும் வசதியை வழங்க இருக்கிறோம். மேலும் இ-சேவை, மாவட்ட அளவிலான மின்னாளுமை திட்டம், இணைய சேவை ஆகியவற்றுக்கு தனித்தனியே சர்வர்களை நிறுவ இருக்கிறோம். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள உமாங் (Unified Mobile Application for New Age Governance ) கைபேசி செயலியில் தமிழக அரசின் மின்னாளுமை சேவைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து பொதுமக்களே வருமானச் சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றுக்கு 24 மணி நேரமும் விண்ணப்பிக்க முடியும். மேலும் இணையம் மூலமாக வழங்கப்படும் பல்வேறு சேவைகளை ஒரே இணையதளத்தில் பொதுமக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களால் பொதுமக்கள் 24 மணி நேரமும் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும் என்பதாலும், பல சேவைகளுக்கு தனித்தனி சர்வர்கள் நிறுவப்பட்டிருப்பதாலும், இனி வரும் காலங்களில் மே, ஜூன் மாதங்களில் அரசு சேவைகள் கோரி விண்ணப்பிக்கும் பணி முடங்காது. மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் இணைய பயிற்சிகள்

உலகம் கணினிமயமாகி வந்ததையொட்டி, உலகில் உள்ளவர்கள் தமிழ்ச் சமூகம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் தொடர்பான பல அடிப்படை கல்விகளை இணையதளம் வழியே கற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், தமிழக அரசால் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது ‘தமிழ் இணைய கல்விக்கழகமாக (தமிழ் விர்ச்சுவல் அகடமி)’ செயல்பட்டு வருகிறது. தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ச்சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த பல்வேறு தொகுப்புகளை காண முடியும். தமிழ்மொழி, பாரம்பரியம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும். கணினி நிரல் எழுதுபவர்கள், மொழி அறிஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 50 பேர் இணைய தள மேம்பாடு மற்றும் கல்விப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தமிழ் ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருக்களை வழங்குதல், சில தமிழ் மென்பொருட்களை உருவாக்குதல், நூல்கள், கலைச்சொற்கள், சுவடிகளை இணைய மயமாக்குதல் உள்ளிட்ட பணிகளை இணைய கல்விக் கழகம் கவனிக்கிறது. பன்னாட்டு மாணவர்களுக்கு இணையம் வழி தமிழ் கற்பித்தல் பயிற்சியும் வழங்குகிறது. தமிழ் மொழி, கலாச்சாரம் சார்ந்த பல்வேறு டிப்ளமோ படிப்புகள், பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. கணினி தொழில்நுட்பம் பற்றிய தமிழ் அறிமுகம் இணையத்தில் கிடைக்கிறது. தமிழ் கற்க விரும்புபவர்களுக்கு மழலைகளுக்கான பயிற்சி, அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக மேற்சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம். பட்டப்படிப்பு அளவிலான இளநிலை தமிழியல், மொழிபெயர்ப்பியல் போன்ற படிப்புகளையும் படிக்கலாம். அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தமிழ் வழி பயிலாதவர்கள் இணைய பல்கலைக்கழகம் வழங்கும் பயிற்சி வழியாக தமிழையும், தமிழ்ச்சமூகத்தையும் அறியலாம்!. இது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.tamilvu.org/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள் சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் எனப்படும் நிலக்கரி நிறுவனம் மத்திய சுரங்கத் துறையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு 672 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் பிரிவில் 180 பேரும், எலக்ட்ரீசியன் (மைன்) பிரிவில் 172 பேரும் சேர்க்கப்படு கிறார்கள். ஸ்டெனோகிராபர், வெல்டர், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், ஆட்டோ எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், ஹாஸ்பிடல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் அசிஸ்டன்ட் போன்ற பிரிவுகளிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. 8, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 7-5-2018-ந் தேதியில் 16 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக 7-5-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை http://www.secl-cil.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய ஆயுதப்படைப் பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி கமாண்டன்ட் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு 398 காலியிடங்கள் மத்திய ஆயுதப்படைப் பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 398 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் ‘அசிஸ்டன்ட் கமாண்டன்ட்’ பணியிடங்களை நிரப்ப, யூ.பி.எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ‘சென்டிரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2018’ எனப்படும் இந்த தேர்வின் மூலம், மொத்தம் 398 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. படைப்பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம்: பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.) பிரிவில் 60 பணியிடங்களும், சென்டிரல் ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் (சி.ஆர்.பி.எப்.) -179 பணியிடங்களும், சி.ஐ.எஸ்.எப். படைப்பிரிவில் 84 இடங்களும், இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.) பிரிவில் 84 பணியிடங்களும், சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.) பிரிவில் 29 பணியிடங்களும் உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு 12-8-2018-ந் தேதி நடத்தப் படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1993 மற்றும் 1-8-1998 ஆகிய தேதி களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல் கலைக்கழகம் மற்றும் கல்வி மையங்களில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, உடல் அளவுகள் தேர்வு, உடல்திறன் தேர்வு மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல்/ஆளுமைத்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-5-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். பார்ட் 1, பார்ட் 2 என்ற இருநிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.upsc.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கேபின் குரூவ் பணியிடங்களுக்கு 295 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆண்களுக்கு 86 இடங்களும், பெண்களுக்கு 209 பணியிடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. அனுபவம் உள்ள கேபின் குரூவ் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி, டிராவல் அண்ட் டூரிசம் பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தி அல்லது ஆங்கில மொழியறிவு பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airindia.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு

ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு இந்திய ராணுவத்தில் பட்டதாரி என்ஜினீயர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் அடிப் படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 128-வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் என்ற பயிற்சித் திட்டத்தில், பட்டதாரி என்ஜினீயர்கள், இந்திய ராணுவ அகாடமியில் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 40 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர விரும்புபவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். அவர்கள் 1-1-2019 தேதியில் 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சிவில், ஆர்கிடெக்சர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், மெட்டலர்ஜிகல், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்புடைய பட்டப் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டேராடூனில் உள்ள ராணுவ அகாடமியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்றபின் பணி நியமனம் பெறலாம். லெப்டினன்ட் அதிகாரி முதல் பிரிகேடியர், மேஜர் ஜெனரல் வரை பல்வேறு பதவி உயர்வுகளை பெறும் வாய்ப்பு மிக்க பணியாகும். உடல்திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-5-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரெயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

இந்திய ரெயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரெயில்வே கார்ப்பரேசன் லிமிடெட். மற்ற ரெயில்வே மண்டலங்களுடன் சாராத, அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரெயில்வே அமைப்பாக இது செயல்படுகிறது. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் தற்போது ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 113 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 55 இடங்களும், கூட்ஸ் கார்டு பணிக்கு 37 இடங்களும் உள்ளன. பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்கள் சீனியர் கிளார்க் பணிக்கும், மற்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதர பணிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.konkanrailway.com/ என்ற இணைய தளத்தின் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மின்சார நிறுவனத்தில் 446 பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மின்சார நிறுவனத்தில் 446 பணிகள் தேசிய அனல்மின் நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 446 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய அனல் மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மின்சார நிறுவனமான இது நாட்டின் 25 சதவீத மின் தேவையை தீர்த்து வைக்கும் நிறுவனமாக விளங்குகிறது. 53 ஆயிரத்து 651 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. 2032-ம் ஆண்டுக்குள் 130 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் இலக்கை நோக்கி திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பல்வேறு மண்டலங்களிலும் டிப்ளமோ டிரெயினி மற்றும் எக்சிகியூட்டிவ் டிரெயினி போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ டிரெயினி பணிக்கு மேற்கு மண்டலத்தில் 174 இடங்களும், கிழக்கு மண்டலத்தில் 83 பணியிடங்களும், தெற்கு மண்டலத்தில் 25 இடங்களும் உள்ளன. இது தவிர அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கு 164 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... டிப்ளமோ டிரெயினி பணியிடங் களுக்கு விண்ணப்பிப்பவர்கள், 9-5-2018-ந் தேதியில் 25 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மைனிங், சி அண்ட் ஐ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இவை சார்ந்த என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. டிப்ளமோ டிரெயினி பணிகளுக்கு 9-5-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 164 அதிகாரி பணியிடங்கள் மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் அதிகாரி தரத்திலான 164 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எக்சி கியூட்டிவ் டிரெயினி (நிதி) பணிக்கு 47 இடங்களும், அசிஸ்டன்ட் கெமிஸ்ட் பணிக்கு 20 இடங்களும், மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 35 இடங்களும், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு 15 இடங்களும், அசோசியேட் பணிக்கு 47 இடங்களும் உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எம்.ஏ., எம்எஸ்.சி., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். படித்தவர்களுக்கு இந்த பணி யிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க 16-5-2018-ந் தேதி கடைசி நாளாகும். இவை பற்றிய விவரங்களை http://www.ntpccareers.net/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஸ்டேட் வங்கியில் 2000 அதிகாரி பணிகள் ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் வங்கி. நாடுமுழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர் களாகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 2-4-1988 மற்றும் 1-4-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளாக நடைபெறும். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்தாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். முக்கிய தேதிகள் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை 1,7,8-ந் தேதிகள் முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 4-8-2018-ந் தேதி நேர்காணல் நடைபெறும் நாள்: 24-9-18 முதல் 12-10-2018-ந் தேதி வரை இடைப்பட்ட குறித்த நாட்களில். இது பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு 6 மாவட்டங்களில் நடந்தது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.1.2018 அன்று தமிழ்நாடு தொழிலாளர் சேவைத்துறையில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் காலியாக உள்ள 10 இடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். கடந்த 11.2.2018 அன்று விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். அதன்படி, தமிழகத்தில் 5 ஆயிரத்து 849 பேர் இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருந்தனர். அதில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது உள்பட சில காரணங்களுக்காக 1,177 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 4 ஆயிரத்து 672 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதினார்கள். காலை சமூக அறிவியல் மற்றும் தொழிலாளர் சட்டம் தொடர்பான தேர்வும், பிற்பகலில் பொது பாடம் தொடர்பான தேர்வும் நடந்தது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடுஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 பிரிவுகள் உள்ளன. இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இந்த பாடப்பிரிவுகளில் 1,020 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு சட்டப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை-2018 ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் சேர்த்து நடத்த வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். அதை அரசு நன்கு பரிசீலனை செய்து என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த இந்த கல்வியாண்டு (2018-2019) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் இனி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த இருக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் DOWNLOAD.


தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் - DOWNLOAD. DOWNLOAD   DOWNLOAD 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு

பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இலவச சீருடைகள், புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை, வரும் கல்வியாண்டில், விரைவாக செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 16.16 லட்சம், 'ஜியாமெட்ரி பாக்ஸ்' வாங்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.அதேபோல், 15.15 லட்சம் பெட்டி, வண்ண பென்சில் வாங்க, 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவியருக்கு, 58 லட்சம் ஜோடி, இலவச காலணிகள் வழங்குவதற்காக, 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்கவும், டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், 'டிஜிட்டல்' கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும், அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கும் வகையில், 'டிஜிட்டல்' கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, 'ஆன்லைன்' சான்றிதழ் படிப்புகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்றஉயர் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகின்றன. இந்நிலையில், 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளும், டிஜிட்டல் கல்வி திட்டத்தை, கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டும்' என, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கையை, அரசுக்கு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஜூலை, 27ல், மத்திய மனிதள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள, துணை வேந்தர்கள் கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது. விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள்.இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது...தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள். வார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு.புத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும். எனக்கு, தனித்துவமான ஆசிரியராக இருக்க வேண்டுமென்பதே விருப்பம். இதற்காக, வகுப்பு நிகழ்வுகள் முழுவதும், செயல்வழி கற்றலாக மாற்றி விட்டோம். இப்படி சொல்லி கொடுப்பது, ஆயுள் முழுக்க மறக்காது.எல்லா பாடங்களுக்கும், செயல்திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை மாணவர்களே தயாரித்து, வகுப்பறையில் வைக்கின்றனர். கணிதத்தில் கொள்ளளவு என்ற பாடத்திற்கு, ஒரு லிட்டர், அரை லிட்டர் என அளவைகள் கொண்ட, பாட்டில்கள் சேகரித்து, எப்படி அளப்பது என்பதை சொல்லி கொடுக்கிறேன். குழுவாக பிரித்து, லிட்டர் அளவீடு குறித்து, வினாடி-வினா நடத்தப்படுவதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்கின்றனர். ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், பட்டம் குறித்த பாடம் உள்ளது. இதை செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கியதோடு, பட்டம் திருவிழாவை பள்ளியில் நடத்தினோம்.இதுபோன்ற செயல்பாடுகளை,பெற்றோர் அறிந்து கொள்ள மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு, மாதந்தோறும் பரிசுகள் வழங்குகிறோம்.தலைமையாசிரியர் விசாலாட்சி,ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பள்ளி சார் செயல்பாடுகளுக்கு,பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனைகளையும் பெறுகிறார். ஒரு பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கும் இருந்தால், மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பே இல்லைஎன்றார் ஆசிரியர் கிறிஸ்டோபர்.பெண்கல்வி குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான, சிறுமுயற்சி என்ற ஆசிரியருக்கு, கைக்குலுக்கி விடைபெற்றோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது | பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயம்: ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றம்சாட்டினார்.கோவில்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர்கள் துரைராஜ் மோகன்தாஸ், காசிராஜன், சண்முகத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில்பட்டி வட்டார செயலாளர் குமாரசாமி வரவேற்றார்.அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை, ஆசிரியர்களுக்கு விருதுவழங்கினார். மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில துணை பொதுச் செயலாளர் முனியாண்டி, அரசு ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் அய்யலுசாமி உட்பட திரளான ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய ஓய்வூதிய திட்டத்தில் 4 லட்சத்து 75ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்ட18 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய தொகுப்பு வாரிய ஆணையத்துக்கு அனுப்பப்படாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டதோடு சரி, அரசு இதுவரை நிலுவைத்தொகை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப சொன்னால், பணியிடங்களை குறைக்க அரசு குழு அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டங்களை வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர் பணியிடங்களை குறைத்து விட்டு, யாரை வைத்து பாடம் நடத்த முடியும்?.காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை மூடச் சொல்கின்றன. தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடக்கூடிய அபாயம் உள்ளது. ஆசிரியர் மாறுதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது” என்றார் அவர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் - உயர்கல்வித்துதறை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக கலந்தாய்வு நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 27 April 2018

10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள் இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிந்தன. இதில் மொழிப்பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த வாரமே திருத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கணக்குப் பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் 24ம் தேதி திருத்த வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டு இ ருந்தது.இதையடுத்து தமிழகத்தில் 70 மையங்களில் நேற்று பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத் தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வுக்கான விடைக்குறிப்பை(Key Answer) தேர்வுத்துறை வழங்கியுள்ளது.கேள்வித்தாளில் பகுதி இரண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்நிலையில் கேள்வி எண் 17ல் கேட்கப்பட்ட கேள்விக்கு(Range)விடை எப்படி இருக்க வேண்டும் என்று பாடப்புத்தகத்தில் பின்பகுதியில் உள்ள கேள்வி பதிலில் 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது -1, +1, -1/2. +1/2 ஆகியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அச்சிட்டு வழங்கியுள்ள வினா வங்கியிலும் மேற்கண்ட நான்கு விடைகளே அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், விடைத்தாள் திருத்துவதற்காக தேர்வுத்துறை கொடுத்துள்ள விடைக்குறிப்பில் -1, +1 மட்டும் எழுதி இருந்தால் மட்டுமே 2 மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 4 பதில்கள் எழுதி இருந்தால் அந்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம்எழுந்துள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்,மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்வுத்துறை கூறுவது என்ன? பத்தாம் வகுப்பு கணக்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ள விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வினா எண் 4: தமிழ் வழிப்பாட விடைக்கு மட்டுமே விடைக்குறிப்பின்படி ‘முயற்சிசெய்திருப்பின் உரிய மதிப்பெண்’ வழங்க வேண்டும். ஆங்கில வழிப் பாட விடைக்கு விடைக்குறிப்பின்படி விடை எழுதியிருந்தால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும். வினா எண் 17, 28, 34, 39: விடைக்குறிப்பின்படியே மதிப்பெண் வழங்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

விடைத்தாள் திருத்தும் பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாளை திருத்தலாம் என்று ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்ட தலைவரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசுத்தேர்வுத்துறை இயக்குநரகத்தால் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 18ம் தேதி வெளியான அறிவிப்பில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஆசிரியர்களுடன், கூடுதலாக தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள். எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் அறிவிப்பை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. திருத்தும் பணிகளும் கண்காணிக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் பாதிக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதில், மெட்ரிக் பள்ளி ஆசிரியார்கள் விடைத்தாளை திருத்த தடையில்லை என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தொழிலாளர் கல்வி நிலையத்தின் சார்பில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள், பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். மற்றும் ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளும் உரிய அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் - 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், பட்டம் பெற்றவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் விநியோகம் தற்போது நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட பி.ஏ. விண்ணப்பங்கள் மே 30-ம் தேதி மாலைக்குள்ளும், பிற விண்ணப்பங்கள் ஜூன் 29-ம் தேதிக்குள்ளும் கிடைக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் ரூ.200 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100 மட்டும், சாதிச்சன்று நகல் தேவை) ஆகும். விண்ணப்பத்தை அஞ்சலில் பெற, விண்ணப்ப கட்டணம், அஞ்சல் கட்டணம் ரூ.50 அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai - 5 என்ற பெயரில் எடுத்து அனுப்பலாம். விவரங்களுக்கு 9884159410, 044 – 28440102 எண்களில் அல்லது tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் அங்கிருந்து போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 4-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று பிற்பகலில் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் இருந்து 10 பேர், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை சந்திக்க சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. பேச்சுவார்த்தையின்போது ‘போராட்டத்தை கைவிட்டு வாருங்கள், உங்களது கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்று முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டக்குழுவினர் தலைமை செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக மாலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை போராட்டக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்து, போராட்டக்குழுவினர் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர். இந்த 4 நாட்கள் உண்ணாவிரதத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தை முடிந்ததும், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு நபர் கமிஷனில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளும் ஒவ்வொரு துறைகளின் கோரிக்கைகளும் உள்ளன. அவற்றை அரசு பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது. சங்கத்தின் தலைவர் ராபர்ட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். அதுவும் நிலுவையில் இருக்கிறது. இது 2009-ம் ஆண்டு ஏற்பட்ட முரண்பாடு என்ற முறையில் அரசு அதை பற்றி பரிசீலித்துக் கொண்டுள்ளது. உண்ணாவிரதம் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று இருக்கிறார்கள். ஒரு நபர் கமிஷன் பரிந்துரை வந்தவுடன் முதல்-அமைச்சரிடம் பேசுவேன்’ என்றார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போராட்டக்குழுவின் நிர்வாகிகள் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அவர்களின் அறிவிப்புக்காக இடைநிலை ஆசிரியர்கள் ஆவலோடு காத்து இருந்தனர். அவர்களிடம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் நம்முடைய உண்ணாவிரதத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம். உடனடியாக அரசு ஆணை பெற முடியாவிட்டாலும், 3 மாதம் கழித்து நாம் எதிர்பார்த்த அரசு ஆணை கிடைக்கும் என்று 99 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. மீதம் உள்ள ஒரு சதவீதம் தவறினால், உச்ச கட்ட போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கும் என்று கூறினார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசுடன் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில், பள்ளிக்கல்வி துறை செயலாளர் எங்களுடைய கோரிக்கையை, நியாயத்தை புரிந்து கொண்டு மனுவை பெற்று, அதனை ஒரு நபர் கமிஷனுக்கு அளித்து, நகலையும் எழுத்துப்பூர்வமான நகலையும் தருவேன் என்று உறுதியளித்துள்ளார். அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் ஒருநபர் கமிஷனில் உங்களுடைய ஊதியக்குழுவை களைய முதல்-அமைச்சர் வரை சென்று அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். அதனை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். புறப்பட்டு சென்றனர் இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு போலீசார் சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்து இருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பணி மாறுதல்கள் பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை

பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாக நலன் கருதியும், பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு பணிமாறுதல் கோரினால் அவர்களுக்கு கட்டாயம் பணிமாறுதல் அளிக்கப்பட வேண்டும். அவர்களை நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்கள் இடத்தில் நியமனம் செய்ய வேண்டும். ஓராண்டு பணி முடித்தவர்கள் பணிமாறுதல் கோரும் நிலையில் அவர்களின் கோரிக்கை சரியாக இருப்பின் பணிமாறுதல் வழங்கலாம். பணியாளர் அல்லது சார்பதிவாளரின் கோரிக்கையின்பேரில் குறிப்பிட்ட பணியாளரை ஒரு குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரிந்துரைத்தால் எக்காரணம் கொண்டும் நியமிக்கக்கூடாது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணி இடங்கள் மிகக்குறைவாக உள்ளதால், அவர்களை அதே பணி இடத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 April 2018

கேந்திரிய வித்யாலயா 5193 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேந்திரிய வித்யாலயா சங்கத்தன் 5193 பணிகள் Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 5193 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள்: 1. Vice-Principal - 146 Posts 2. Post Graduate Teacher (PGT) Hindi - 218 3. Post Graduate Teacher (PGT) English - 226 4. Post Graduate Teacher (PGT) Physics - 257 5. Post Graduate Teacher (PGT) Chemistry - 267 6. Post Graduate Teacher (PGT) Mathematics - 218 7. Post Graduate Teacher (PGT) Biology - 208 8. Post Graduate Teacher (PGT) History - 76 9. Post Graduate Teacher (PGT) Geography - 72 10. Post Graduate Teacher (PGT) Economics - 489 11. Trained Graduate Teacher (TGT) Hindi - 584 12. Trained Graduate Teacher (TGT) English - 594 13. Trained Graduate Teacher (TGT) Sanskrit - 347 14. Trained Graduate Teacher (TGT) Science/ Biology - 487 15. Trained Graduate Teacher (TGT) Mathematics - 566 16. Trained Graduate Teacher (TGT) Social Science - 575 17. Head Master (HM) - 163 தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.kvsangathan.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF..........” என்று குறிப்பிடவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2018 கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(1)-10-04-2018.PDF
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் | இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளமும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. ஆறாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தி வந்தனர். கடந்த நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன் கிண்டியில் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் பழச்சாறு அருந்தி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தள்ளிப்போகிறது ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதிய கல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC - Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17.12.2017 மு.ப. அன்று ஒருங்கிணைந்த குடிமைப்பணி - I A தேர்வு (தொகுதி - I A)ல் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான 14 - காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அத்தேர்வில் 10459 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 472 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு 28.07.2018 முதல் 04.08.2018 வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும். | The Preliminary Written Examination for 14 vacancies in the post of Assistant Conservator of Forests included in Group – I A service in Tamil Nadu Forest Service was conducted by the Tamil Nadu Public Service Commission on 17.12.2017 FN. 10459 candidates have appeared in the Preliminary Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said recruitment, a list of 472 Register Numbers of Candidates admitted to Main Written Examination has been hosted at the Commission’s website “www.tnpsc.gov.in”. The Main Written Examination will be held from 28.07.2018 to 04.08.2018 at Chennai Centre only. R.SUDHAN , I.A.S., CONTROLLER OF EXAMINATIONS
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

நாடு முழுவதும் 24 பல்கலைக்கழங்கள் போலியாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி பட்டியலிட்டுள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 24 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுஜிசி சட்டத்துக்கு புறம்பாக அங்கீகாரம் இல்லாமல் 24 பல்கலைக்கழகங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவை போலி பல்கலைக்கழகங்கள் என அறிவிக்கப்படுகிறது. எவ்வித பட்டமும் வழங்க இந்த பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, இதுபோன்ற கல்வி நிறுவனங்களிடம் மாணவர்களும் பெற்றோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. கமர்சியல் யுனிவர்சிட்டி, யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வக்கேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர்-சென்ட்ரிக் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி, இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி பார் செல்ப் எம்ப்ளாய்மென்ட், ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா அண்ட் வாரனாசியா சான்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா ஆகிய டெல்லியைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் இந்த போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. யுஜிசி கடந்த ஆண்டு வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 22 நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைந்தன. மார்ச் 26-ம் தேதி அன்று நடைபெற்ற பொருளாதார பாடத் தேர்வின்போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, பொருளாதார பாடத்துக்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, மறுதேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நடந்தது. மாணவர்கள் தங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அதே மையங்களில் தேர்வெழுதினர். வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்தும், தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு வரும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பில் தங்களது மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதில் மாற்றம் செய்ய முடியாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனால் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இதற்காக தனியாக மொழி தெரியாத பிற மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் செல்ல நேரிடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்களும் ஒருவித மன அழுத்தத்துடனேயே இந்தத் தேர்வை எதிர்கொள்ள நேரிடும். எனவே தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி: தமிழக மாணவிக்கு கேரளாவில் தேர்வு எழுத ‘ஹால்டிக்கெட்’

‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக திருப்போரூர் மாணவிக்கு, கேரள மாநிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என ‘ஹால்டிக்கெட்’ வந்துள்ளது. திருப்போரூர் மாணவி மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு மே மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த தேர்வில் பங்கு பெற மாணவர்கள் பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூரை சேர்ந்தவர் பெருமாள். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் ஸ்ரீவிஜி (வயது 17). இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருக்கிறார். நேற்று முன்தினம் ஸ்ரீவிஜி, ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். கேரள தேர்வு மையம் ஒதுக்கீடு இதில் தேர்வு மையங்களை தேர்வு செய்யும்போது சென்னை, காஞ்சீபுரம், நெல்லை ஆகிய மண்டலங்களை குறிப்பிட்டு இருந்தார். ஆன்லைன் விண்ணப்ப பதிவேற்றம் முடிந்ததும் அவருக்கு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட்டது. அதில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ளது. இதை பார்த்த மாணவி ஸ்ரீவிஜி அதிர்ச்சி அடைந்தார். மருத்துவக்கல்வி கனவு இதுகுறித்து மாணவியின் தந்தை பெருமாள் கூறுகையில், ‘எனது மகளுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு கூட இதுபோன்ற குழப்பங்கள் கிடையாது. இப்போது இந்த தேர்வு மையத்தை மாற்ற முடியுமா? அல்லது அங்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டுமா? என்று தெரியவில்லை. ‘நீட்’ தேர்வு வேண்டும் என்று கூறும் ஆதரவாளர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதனால் எனது மகளின் மருத்துவக்கல்வி கனவு என்ன ஆகுமோ? என்ற பயம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆரம்பத்தில் இருந்தே ‘நீட்’ தேர்வு பல்வேறு குளறுபடிகளை சந்தித்து வந்த சூழலில், தமிழக மாணவி ஒருவருக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்து உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 April 2018

RMSA - 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை - GO 288 வெளியீடு.

RMSA - தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை. GO 288 DATE 24.04.2018 - RMSA - POST CONTINUATION PAY ORDER - 3550 B.T, 710 LAB ASSISTANT AND 710 JUNIOR ASSISTANT - CLICK HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு இந்த ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாயம் என்ற விதியில் மாற்றமும் செய்யப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது . முன்னதாக மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘டாக்டர்கள் பணிப்புரியும் பகுதிகளை பிரித்து, தகுதி நிர்ணயம் செய்தது தவறு. தமிழக அரசின் அரசாணையில் விதிமுறைகளும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை. மேலும், மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்களுக்கு என 50 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று தெரிவித்தது. எம்.டி., எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மருத்துவ மேற்படிப்பில் உள்ஒதுக்கீட்டை இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிக்காட்டுதலின் படி நடத்துவதற்கு பதிலாக, அந்தந்த மாநில அரசின் ஒதுக்கீட்டு நடைமுறையில் இந்தாண்டு நடத்திட அனுமதி கோரிய இடைக்கால கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 2016ம் இந்திய மருத்துவ சங்கம் கொண்டு வந்த விதிமுறை செல்லும் என்றும் அதன் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC - தேர்வில் வென்றவர்கள் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றலாம்: மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு இ-சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றுக்காக 2 அல்லது 3 முறை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குச் செல்லும் சூழல் உள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தைத் தவி்ர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்க்க ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சிஅடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இதில் முதல் கட்டமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்து அனுப்பும் இணையதளத்தை சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார். மேலும் சென்னையில் உள்ள 209 இ-சேவை மையத்திலும் ஆன்லைனில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.குரூப் 2-ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.எனவே, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு அந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்,தங்கள் வசம் உள்ள அனைத்து சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இனி நடக்கும் மற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களும் இம்முறையைப் பின்பற்றலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்' எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், 'எட்டாம் வகுப்புக்கான தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'உணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை பெண்கள் உடுத்த வேண்டாம்' என்ற வரிகள் நீக்கப்படும்' என தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாடப் புத்தகம் அச்சிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடங்கள் அனைத்தும் மீண்டும் மறுசீராய்வுக்கு அனுப்பப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்

மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,'என கணித ஆசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வழக்கமான பாடங்களுடன், புள்ளியியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம், புவியியல் என மிக குறைந்த எண்ணிக்கையில் எழுதிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.மதுரைக்கு புள்ளியியல் 5000, அரசியல் அறிவியல் 4000 விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்கான ஆசிரியர் மிக குறைவு. இதனால், 'கணிதம் ஆசிரியர்களை புள்ளியியலும், வரலாறு ஆசிரியர்களை அரசியல் அறிவியலும் திருத்த வேண்டும்,' என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: கணிதம் திருத்த வேண்டும் என்றால் அதற்கு முன் புள்ளியியல் திருத்த வற்புறுத்துகின்றனர். ''நடத்தாத பாடங்கள் விடைத்தாளை எவ்வாறு திருத்த முடியும்,'' என கேட்டால் "கீ ஆன்சர் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்," என்கின்றனர். இதேநிலை தான் வரலாறு ஆசிரியர்களுக்கும். மறுகூட்டல்,விடைத்தாள் நகலில் மதிப்பெண் வித்தியாசம் மற்றும் தவறு ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.இப்போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும், என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்

விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர். அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 210 வேலை நாட்களில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர், மாணவர்களுக்கு நற்சான்று வழங்கப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.2016-17க்கான வருகைப் பதிவேட்டை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் குழு ஆய்வு செய்தது. மாநிலத்தில் 45 ஆயிரத்து 120 பள்ளிகளில் பணிபுரியும் 2.21 லட்சம் ஆசிரியர்களில் 51 பேர்; 37.81 லட்சம் மாணவர்களில் 20 ஆயிரத்து 739 பேர் விடுப்பு எடுக்காதது கண்டறியப்பட்டன.இதில்பிப்., 12 ல் சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு மட்டும் நற்சான்று வழங்கினார். ஏப்., 20 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், இதுவரை மாணவர்களுக்கு சான்று வழங்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆசிரியர்கள் கூறுகையில், ' மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தத்தான் 100 சதவீத வருகைக்கு நற்சான்று வழங்கப்படுகிறது. அதை குறித்த காலத்தில் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது,' என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரெயில்வே வேலைக்கு 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையில் காலியாக உள்ள சுமார் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. கை நிறைய சம்பளத்துடன் பல சலுகைகள் கிடைக்கும் என்பதால் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதில் மொத்தம் உள்ள 89 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கு 2 கோடியே 37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 502 டெக்னீசியன் பணியிடங்களுக்கு 47 லட்சத்து 56 ஆயிரம் பேரும், 62 ஆயிரத்து 907 குரூப்-டி பணியிடங்களுக்கு 1 கோடியே 90 லட்சம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு நடத்தி முடிக்க 2 மாதங்கள் ஆகும். ஆன்லைன் தேர்வால் காகித பயன்பாடு குறைக்கப்பட்டு, 10 லட்சம் மரங்களின் பயன்பாடு மிச்சமாகும். ரெயில்வே பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது. மேற்கண்ட தகவல்கள் ரெயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் பணி நியமனம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை

இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு பேராசிரியர்களை நியமித்தால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மனித வளத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது. இயக்குனர் நியமனம் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது நியமனம் ஐ.ஐ.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முரளிதரன், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேலும், கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். முறைகேடு அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தியை நியமித்தது செல்லாது என்று நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பியுள்ளார். தற்போதும் பலரை நியமிக்கிறார். இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்கு பொது விளம்பரம் எதுவும் கொடுக்காமல், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், ஆட்களை நியமித்துள்ளார். எனவே, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது’ என்று கூறியுள்ளார். சி.பி.ஐ. விசாரணை மேலும் அந்த மனுவில், ‘ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நியமனத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், மேற்கொண்டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும்’ என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். கடும் நடவடிக்கை இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘பேராசிரியர் பணியிடங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றி நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், பணி நியமனம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. ஒருவேளை பணி நியமனம், இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டால், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். விசாரணையை ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே கலந்தாய்வு நடத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு

மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படியே மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டில் மனு கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்துள்ள விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவர் அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “சென்ற ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவில் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. மருத்துவ படிப்பில் தரக்கட்டுப்பாட்டை மருத்துவ கவுன்சில் கவனித்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் மாநில அரசு வழங்கும் இடஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இடைக்கால உத்தரவு இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் மீதான இடைக்கால உத்தரவை நீதிபதிகள் அறிவித்தனர். அதில், “இந்த மனுவின் மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்த புதிய விதிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற வேண்டும். மாணவர் சேர்க்கை என்பது இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே அமையும்” என்று தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 April 2018

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், ஐ.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofindia.co.in ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரிக்கை

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ-யில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள். படம்: க.ஸ்ரீபரத் G_SRIBHARATH ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி டிபிஐ வளாகத்தில் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் முன்னதாக பூட்டப்பட்டன. டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்கள் முன்பும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, அனைவரும் டிபிஐ முதன்மை நுழைவுவாயில் முன்பு கூடத்தொடங்கினர். மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ரெக்ஸ் ஆனந்தகுமார், கே.கண்ணன், எஸ்.வேல்முருகன், டி.ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குடும்பத்தினரோடு கைதுசெய்து போலீஸார் வேனில் ஏற்றிச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் மற்றும் அதன் அருகேயுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 3,000 ஆசிரியர்களையும் பிற்பகலில் விடுவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக போராட்டத்தின்போது தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கேட்கவில்லை. மாநிலத்தில் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்று போராடி வருகிறோம். அப்போது அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், 2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால், நடைமுறைப்படுத்தப் படவில்லை. அதனால்தான் குடும்பத்தோடுஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுறபடுகிறோம் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கே.பி.அன்பழகன் கூறியதாவது:- என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 42 உதவி மையங்கள் தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம். மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம். சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். தகவல் கையேடு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும். இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள். தற்காலிக இட ஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும். இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும். குறுஞ்செய்தி கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.an-n-au-n-iv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப ஆதிதிராவிட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக சென்னையில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு

சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் நடக்க உள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில்10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 10ம் வகுப்பிற்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்கள் எழுதிய கருத்தை உள்வாங்கி மதிப்பெண்களை வழங்குவர். ஆனால் பாடம் எடுக்காத ஆசிரியர்கள் 'கீ ஆன்சர்களை' மட்டும் கொண்டு மதிப்பெண்வழங்குவதால், மாணவர்கள் உரிய பதிலை கருத்தோடு எழுதியிருந்தாலும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கவாய்ப்புள்ளது. ஆங்கிலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாடங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் திருத்த வாய்ப்புள்ளதால் மதிப்பெண் குறைய வாய்ப்புஉள்ளது, என்றார். பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: விடைத்தாள்களுக்கு ஏற்பபட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது, பாடம் எடுக்காத ஆசிரியர்கள் இருந்தால்திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆங்கில பாடத்திற்கு ஆங்கில ஆசிரியர்களைகொண்டு திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது, என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது. அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 - 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 -12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினசரி ஒரு மணி நேரம், உடற்கல்வி கட்டாயமாக்கப்பட உள்ளது.இதன்படி, மாணவர்கள், மைதானத்திற்குச் சென்று, தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில், ஒரு மணி நேரம் ஈடுபட வேண்டும். இணையதளம் : இந்த ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்கு, தனியாக மதிப்பெண்கள் உண்டு. இந்த மதிப்பெண்களை, ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும், சி.பி.எஸ்.இ.,யின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.மேலும், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு களில் பங்கேற்கும் தகுதியை பெற, இதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இறுதி மதிப்பெண்களில், இது சேர்த்துக் கொள்ளப்படாது. 'இதற்காக, தனியாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அவசியமில்லை. 'மற்ற வகுப்பு ஆசிரியரின் உதவியுடனேயே, இந்த வகுப்புகளை நடத்தலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 150 பக்கங்களில், புதிய வழிகாட்டுதல் புத்தகத்தையும், சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது. வெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர். வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர். ஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது. பல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.மேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 April 2018

காஸ்ட்லி ஆகிறது இலவச எல்.கே.ஜி.,!

இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வருமான சான்றிதழ் வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிக்கலாம். இதற்கு தமிழகம் முழுக்ககடந்த, 20ம் தேதி முதல், &'ஆன்லைன்&' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி இணையதளத்தில், (www.dge.tn.gov.in) அந்தந்த மாவட்டத்திற்கு தனியாக, மெட்ரிக் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குடியிருப்பின் அருகாமையில் உள்ள, ஐந்து பள்ளிகளை பெற்றோர் தேர்வு செய்யலாம். ஏதேனும் ஒரு பள்ளியில் அட்மிஷன் உறுதி செய்யப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு, வருமான சான்றிதழ் தேவையில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியோராக இருந்தால், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம். இதற்கு, வருமான சான்றிதழ் பெறும் நடைமுறைகள், ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து இ - சேவை மையங்களிலும், விண்ணப்ப கட்டணம் செலுத்தினால், 15 நாட்களில், இச்சான்றிதழை இலவசமாக பெற முடியும். இதற்காக தகவல் வேண்டி, இ - சேவை மையம் செல்வோரை, இடைத்தரகர்கள் சூழ்ந்து கொண்டு, விரைவில் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் சிலர் கூறுகையில், &'இ - சேவை மையங்களில் விண்ணப்பித்தால், விரைவில் சான்றிதழ் பெற முடியாது என கூறி, இடைத்தரகர்கள் மூளைசலவை செய்கின்றனர். படிக்க தெரியாதவர்கள், வீண் அலைச்சலுக்கு பயந்து, பணம் கொடுக்கின்றனர். இடைத்தரகர்கள் மூலமாக, இ - சேவை மையத்தை அணுகுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உரிய துறை அதிகாரிகள், இ - சேவை மையங்களில் ஆய்வு நடத்தினால், பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருக்காது. மே 18ம் தேதி வரை மட்டுமே, இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலும். எனவே, சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை, துரிதப்படுத்த வேண்டும்&' என்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE