பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
|
பகுதிநேர பி.இ., பி.டெக் படிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு பகுதிநேர பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை மைய செயலாளர் வி.செல்லதுரை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வருகிற 2018-19-ம் கல்வி ஆண்டில், பகுதி நேர பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதன்படி கோவை அரசு பொறியியல் கல்லூரி (ஜி.சி.டி.), சேலம் அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, கோவை தொழில்நுட்ப கல்லூரி (சி.ஐ.டி.), மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., பி.டெக் ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த படிப்புகளில் சேர டிப்ளமோ படிப்புகளை முடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
இதன்படி பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்புபவர்கள் கடந்த 5-ந் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். அடுத்த மாதம் 10-ந் தேதி 4 மணிக்குள் www.ptp-et-n-ea.com என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Monday, 16 April 2018
பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. ...
-
ரத்து செய்யப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்து இருக...
-
கொரோனா தாக்கத்திற்கு பிறகு பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பது கல்வித்துறை மட்டுமே என்றால் மிகையாகாது . இக்காலத்தில் ஆசிரியர்கள் பணியாற்றிட தயா...
-
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அசாதாரண சூழல் நில...
-
'சட்ட படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 5ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது. தமி...
-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் வருகிற 12-ந்தேதி முதல் ‘ஆன்லைன்’ வகுப்புகள் தொடங்கும் என்றும், நவம்பர் 9-ந்தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும...
-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் 11 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்...
-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) ஆன்லைன்வழி மாணவர் சேர்க்கை ஆக. 16-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக அதன்...
-
TN FORMS | 112. GPF PART FINAL WITHDRAWLS GPF.PDF TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்...
-
TN FORMS | 5. ATTENDANCE CERTIFICATE - STUDENT.DOC TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | வி...

No comments:
Post a comment