TRB

TNTET

Monday, 28 May 2018

பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்

கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 99 மேல்நிலைப் பள்ளிகள், 114 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 216 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாடப் புத்தகங்கள், பள்ளி வாரியாக பிரிக்கப்பட்டு, விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பை, கல்வி உபகரணங்கள், அட்லஸ் ஆகியவை அரசு பாடநூல் கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டன. இந்நிலையில், வரும் ஜூன் முதல் தேதி, கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு பெற்றுச் செல்கின்றனர். பிளஸ் 1, வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள், கல்வி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெற்றதும் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: