TRB

TNTET

Saturday, 30 June 2018

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டது அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மாணவ-மாணவிகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் தேர்வுகள் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் www.aucoeweb.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதுதவிர 5 லட்சத்து 23 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் உடனே தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா உத்தரவின்படி, பதிவாளர் எஸ்.கணேசன் ஏற்பாட்டில் தேர்வு துறை கட்டுப்பாட்டு அதிகாரி எம்.வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் எஸ்.எம்.எஸ். அனுப்பும் பணியை செய்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 June 2018

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

TNPSC - Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து எழுதுதல், கொள்குறி வகை மற்றும் விவரித்து எழுதுதல் என்ற புதிய பாடத்திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டம் நீங்கலாக சென்னை உட்பட 31 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தி முடித்துள்ளது. மேற்படி துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. இது போன்று துறைத்தேர்வின் உத்தேச விடைகளை இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு, பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்ப`தாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, விரைவு தபால் மூலமாகவோ (அ) contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் | CLICK


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து, 2 லட்சத்து 41 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைக் காக காத்திருக்கின்றனர். இருப்பினும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி,‘‘தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதா வது: தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இருப்பினும் அவற்றை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, பணிக்காக காத்திருக்கும் பட்டயம் முடித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 ஆகும். தற்போது தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் 29 ஆயிரத்து 297 பள்ளிகளில் 85 ஆயிரத்து 109 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உபரியாக உள்ளனர். மேலும், இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் குறைந்துள்ளதால் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. மேலும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தான் பணியாற்றுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இதை முறைப்படுத்துவதற்கு உரிய சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் 5-ம் வகுப்புவரை உள்ள பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களுடன் 848 பள்ளிகள் உள்ளன. குறைந்த பட்சம் 40 மாணவர்கள் இருந்தால்தான் 2 ஆசிரியர் கொண்ட பள்ளி செயல்படும். குறைந்த மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து அப்பள்ளிகளை 4 ஆசிரியர் கொண்ட பள்ளிகளாக தரம் உயர்த்தி வருகிறோம். அவ்வாறு இருந்தால்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் வெளிமாநில மா

விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறோம் வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் வெளிமாநில மாணவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாத அளவுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்து பேசியதாவது:- சதி செய்து வருகிறார்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சார்ந்திருக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக இருப்பிட சான்றிதழ் பெற்றுக்கொண்டு இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது என மிகப்பெரிய குற்றச்சாட்டு தொடர்ந்து உலவிக்கொண்டு இருக்கிறது. எனவே, இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோசடிகளைப் போல, இந்த ஆண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க இந்த ஆண்டு ஒரு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மற்ற மாநிலத்தவர் எப்படியோ யாருடைய துணையோடோ ஏதோ சதி செய்து இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் நிலை என்னவாயிற்று?. அதன் தற்போதைய நிலை என்ன? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை வேண்டுமென்றே விதிமுறைகளின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால், அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி அனுமதிபெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புக்கு பதில் அளித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- சேர முடியாது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ இடங்களாக 3,393 இடங்கள் உள்ளது. நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் சேரும் வகையில் விதிமுறைகளை கடுமையாக்கியிருக்கிறோம். மாநில ஒதுக்கீட்டில் ஒரு இடத்தை கூட பிற மாநில மாணவர்கள் பெற முடியாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். இதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. தேசிய ஒதுக்கீட்டில் 15 சதவீதம் போக 85 சதவீதம் நமக்கு தான். இருப்பிட சான்று தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. வெளிமாநிலத்து மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்று பெற்று சேருவதை தடுக்க மிக தெளிவாக 12 ஷரத்துக்களை சேர்த்து இருக்கிறோம். எனவே அவர்கள் விண்ணப்பிக்கும்போதே நிராகரிக்கப்பட்டு விடுவார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்து இருக்கிறார். இதற்கான காரணத்தையும் நாங்கள் கேட்டு இருக்கிறோம். கடந்த முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இருப்பினும் இந்த அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- தற்காலிக சான்றிதழ்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 உள்ளன. இந்த கல்லூரிகளில் தற்போது படித்து முடித்த மாணவர்களின் தற்காலிக சான்றிதழ்கள் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.unom.ac.in ) வெளியிடப்படுகிறது. அந்த சான்றிதழ்களை ஜூலை 1-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது 3 மாதம் செல்லும். அதற்குள் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும். இனி இளநிலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் தற்காலிக சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ்களை கொண்டு மாணவர்கள் எந்த கல்லூரியிலும் சேரலாம். அதற்கான உத்தரவு அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். அந்த சான்றிதழில் ரகசிய கோடு உள்ளது. இலவச கல்வி சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி முன்னாள் இயக்குனர் ஜி.மோகன்ராம் பணியில் இருந்தபோது தணிக்கை குழுவினர் பண விஷயம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வுபெற்ற பிறகும் ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காமல் உள்ளார். இந்த கூட்டத்திலும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இளநிலை படிப்பில் இலவச கல்வி அளிக்க 3 இடங்கள் வழங்க உள்ளோம். அதற்கு பெற்றோரில் ஒருவரை இழந்தவராகவும், ஏழை மாணவராகவும், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த இடங்களை 10 ஆக அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மோசடி சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி சார்பில் வெளிமாநிலங்களில் மையம் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது. அப்போது சிலர் மோசடியாக கையெழுத்திட்டு தேர்வு எழுதியது தெரியவந்தது. அவர்கள் எந்த பல்கலைக்கழகத்திலும் இனிமேல் தேர்வு எழுத முடியாது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்கிற மாணவி முதல் இடத்தை பிடித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் ‘ரேண்டம் எண்’ வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவ-மாணவிகளின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதனை வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியல் www.an-n-au-n-iv.edu என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- என்ஜினீயரிங் படிக்க 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 387 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தகுதி பெற்ற 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 விண்ணப்பதாரர்களில் 65 ஆயிரத்து 926 பேர் மாணவர்கள் மற்றும் 38 ஆயிரத்து 527 பேர் மாணவிகள் ஆவர். சான்றிதழ் சரிபார்ப்பில் மற்றும் தரவரிசை பட்டியலில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்ய மாணவ-மாணவிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. தவறை சரிசெய்ய அவர்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செயலாளரை நேரில் அணுக வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்த ஆண்டு 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. 26 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. தரச்சான்று உள்ள கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலம் வரும் மாணவர்களுக்கு கட்டணம் ரூ.55 ஆயிரம் ஆகும். தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.50 ஆயிரம் ஆகும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தரச்சான்று உள்ள கல்லூரிகளில் கட்டணம் ரூ.87 ஆயிரம் என்றும், தரச்சான்று இல்லாத கல்லூரிகளில் கட்டணம் ரூ.85 ஆயிரம் என்றும் உள்ளது. தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தவர்களில் 47 ஆயிரத்து 29 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். தனியார் கல்லூரிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும். தமிழகம் முதல் இடம் உயர் கல்வித்துறையில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் 2-வது இடத்திலும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் 3-வது இடத்திலும் உள்ளது. என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் விவேகானந்தன், என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். 200-க்கு 200 கட்-ஆப் எடுத்தவர்கள் தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் எடுத்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் பின்வருமாறு:- 1. கீர்த்தனா ரவி - கோவை 2. எஸ்.ரித்விக் - மதுரை. 3. ஆர்.ஸ்ரீ வர்ஷினி -திருச்சி. 4. அர்ஜூன் அசோக் -கோவை. 5. ஆர்.சுஜித்ரா - புதுக்கோட்டை. 6. ஏ.அப்துல் காதர் -கிருஷ்ணகிரி. 7. எஸ்.யமுனா ஸ்ரீ -சிவகங்கை. 8. என்.ஏ.நிஷா - திருவள்ளூர். 9. எஸ்.நிதிஷ்குமார் -தஞ்சாவூர். 10. ஏ.ஏ.மணிகண்டன் -திருவள்ளூர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த கீர்த்தனா ரவி கூறியதாவது:- நான் கடந்த ஆண்டு கேரளா மாநிலம், பாலக்காடு பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். ஆங்கிலம் உள்பட அனைத்து பாடங்களிலும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றேன். மொத்தம் 1200 மதிப்பெண்ணுக்கு 1200 மதிப்பெண் எடுத்துள்ளேன். கோவை சொந்த ஊர் என்பதால் நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டும் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்றேன். எனக்கு என்ஜினீயரிங் படிப்பில் சேர விருப்பம் இல்லை. நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி.வேதியியல் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறேன். இப்போது அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் இடம் வந்ததற்கு மகிழ்ச்சி. என்ஜினீயரிங் சேர்வது குறித்து யோசித்து தான் முடிவு எடுக்க விரும்புகிறேன். காரணம் நான் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று அதிகாரியாக விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளத்தில் ( www.tnd-alu.ac.in ) காணலாம். இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 11 மற்றும் 12-ந்தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது கலந்தாய்வுநேரம் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு

நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டேகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நிகர்நிலை பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 June 2018

ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்

ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய சீருடை என்பதால், துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரே அளவுள்ள சீருடை வழங்கப்பட்டு உள்ளது. மூன்று, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் இறுக்கமாகவும், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதாகவும் உள்ளது. அளவுக்கு ஏற்ப சீருடை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். ஒரே ஒரு செட் மட்டும் வழங்கியிருப்பதால், கடந்தாண்டு சீருடையையும் அணிந்து வர, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காரமடை வட்டார கல்வி அலுவலர் தேசிங் கூறியதாவது:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 98 துவக்கப்பள்ளிகள், 26 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 9,793 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் நான்கு செட் இலவச சீருடை வழங்க வேண்டும். இந்தாண்டு சீருடை மாற்றம் செய்ததால், ஒரு செட் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு வரை ஒரு அளவிலும், நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு ஒரு அளவிலும் சீருடைகள் தைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஏற்ப, 'சைஸ்' மாற்றம் செய்து கொடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பேக், செருப்பு, பென்சில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்கள் வந்தவுடன் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடந்தது. 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனை யாகின. இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் சுமார் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டன. இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி (நாளை) வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 1-ல் வகுப்பு தொடக்கம் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரையும், 2-ம்கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையும் நடக்க உள்ளது. கல்லூரிகளில் முதலாண்டு வகுப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை காலை வெளியிடப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின் றனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 June 2018

சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in , www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இளநிலை மறுகூட்டலுக்கு 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2017-18 ஆம் கல்வியாண்டு வரை 1232 புதிய பாடப்பிரிவுகள் முன்னாள் முதல்-அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டன. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணவ-மாணவிகள் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கிலும், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிப்பதால் மாணவ-மாணவிகள் அதிகளவில் பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறும் இதனால் வேலைவாய்ப்புகள் அதிகம் பெற ஏதுவாக முதல்-அமைச்சர் கடந்த ஜூன் 1-ந்தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும் என்றும் இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். ரூ.26 கோடி நிதி மேற்காணும் அறிவிப்பின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வியாண்டிலிருந்து 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.பில் மற்றும் 71 பிஎச்.டி. ஆக மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும், இப்பாடப்பிரிவுகளை கையாளுவதற்கான 693 உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் முதலாமாண்டிற்கு 270 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் அதற்கென ரூ.26 கோடியே 39 லட்சத்து 73 ஆயிரத்து 840 நிதி ஒப்பளிப்பு வழங்கியும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேற்காணும் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (27-ந்தேதி) அரசாணையில் குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 264 பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகள் அடங்கிய அரசாணையினை தமிழக அரசின் இணையதளத்தில் ( www.tn.gov.in ) உயர்கல்வித் துறையின் கீழ் காணலாம். மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை இக்கல்வியாண்டிலிருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 June 2018

நீட் மதிப்பெண் அடிப்படையில் தயாரிப்பு எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடைபெற்றது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வாங்கினர். அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றனர். 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது? தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம்

சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்படவில்லை. வழக்கமாக உத்தேச விடைகள் வெளியிடப்பட்டதும் அடுத்த சில நாட்களிலேயே தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிடும். ஆனால், முதல்முறையாக நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில், உத்தேச விடைகள் வெளியிட்டு 8 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவு வெளியிடப்படாத நிலையில், தேர்வெழுதியவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், பள்ளிக் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிடுவது என தொடர்ந்து பல்வேறு நிலைகளில் போராடி வந்தனர். ஆன்லைனில் விடைத்தாள் நகல் இந்த தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கடந்த ஜூன் 14-ம் தேதி மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் நகலை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்க்கலாம் என்றிருந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வில், அதுபோன்று இல்லாமல் அவரவர் தங்களின் விடைத்தாள் நகலை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து கணினியில் பார்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆன்லைனில் பார்க்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்துவருவதாக தேர்வெழுதியவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டால் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் விரைவில் வரும் என்று சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் என்று தேர்வர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள். பொதுவாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் 3 மாதங்கள் அல்லது 5 மாதங்களில் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், தேர்வு முடிவடைந்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தேர்வர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’ சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு ‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட வேண்டும். அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு ஏற்ப மதிப்பெண் (அதிகபட்சம் 5) அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுபட்டியல் வெளியிடப்படும். மதிப்பெண் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்கள் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் எப்போது இறுதி தேர்வுபட்டியல் வெளியிட்டு பணிநியமனம் வழங்கப்போகிறார்களோ? என்று தேர்வெழுதியவர்கள் அச்சத்தில் உள்ளனர். இனியும், காலதாமதம் செய்யாமல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 24 June 2018

1,200 அரசு பள்ளிகளை செப்டம்பருக்குள் இணைக்க திட்டம்: தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்

மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது. அத்துடன், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. செப்டம்பருக்குள், 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யவுள்ளனர். இதில், சேலத்தில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், ரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில், 2,800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது. இதனால், அந்த எட்டு மாவட்டங்களில், கடந்த, 21ல் நடந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில், மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக வைத்துவிட்டது. இடமாறுதல் ரத்தாகுமா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, ``மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது. இதனால்தான் அவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். கவுன்சலிங் மூலம் அவர்களுக்குப் புதிய பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆங்கிலப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் உள்ளார். மாணவ, மாணவிகள் போராட்டத்தால் ஆசிரியர் பகவான் உடனடியாக விடுவிக்கப்படவில்லை. மாணவ, மாணவிகளை சமரசப்படுத்திவிட்டு அவரை அங்கிருந்து விடுவிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். அதற்காக மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் பேசிவருகின்றனர். இதனால், இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான், கவுன்சலிங்கில் தேர்வு செய்த அருங்குளம் பள்ளிக்கு இடமாற்றப்படுவார். ஆசிரியை சுகுணா, ஏற்கெனவே இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் விதிப்படிதான் இடமாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. ''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு!

பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன.இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பலலட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. எனவே, 'ஆசிரியர்கள், தங்கள் பதவியைகாப்பாற்றிக்கொள்ள, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை உயராவிட்டால், அந்த பள்ளிகளை மூடுவது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்டில் மாணவர் சேர்க்கை முடிய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு முன்னும், பின்னும் அறிக்கை தர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் மூடப் படுவதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்

கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது. 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்கள், இடம் பெற்ற பள்ளிகள் விவரம் குறித்த எல்லை வரையறைக்கான அரசு உத்தரவும் வெளியாகவில்லை. கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மாவட்ட, உதவி கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலருக்கான சம்பளம் வழங்கப்படும். வரையறை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்ஏற்படும், என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி |

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில்பயிற்சி தொடங்க உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதியபாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது. 1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தபயிற்சி அளிக்கப்படும். பகுதி வாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 23 June 2018

அரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது!

அரசுப்பள்ளிகளை மூடுவதை எதிர்த்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரியும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் சென்னயைில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கலைவானர் அரங்கம் அருகே இருந்து புறப்பட்ட அவர்கள் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை வழியாக தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அரசு விருந்தினர் மாளிகை அருகே சாலையில் அமர்ந்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை அடுத்து தலைமை செயலகம் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடாதபடி போலீசார் சாலைகளில் தடுப்புகளை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தடையை மீறி உள்ளே சென்ற மாணவர் பெருமன்றத்தினர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு

தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை,தமிழக அரசு உருவாக்கி உள்ளது. அனைத்து, பள்ளிகளுக்கும், பொதுவான, ஒரே சட்டம், உருவாக்கியது, தமிழக அரசு,சட்டத்துறை,ஆய்வுஇந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ.,என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது. சுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது. தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன. பின்,1920ல்,மெட்ராஸ் தொடக்க பள்ளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து, 1973ல், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியாக சட்டம் இயற்றப் பட்டது.இந்த சட்டப்படி, 1976 முதல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட பள்ளிகளுக்கு, சென்னை மற்றும் மதுரை பல்கலைகள் அனுமதி வழங்க, அரசு ஒப்புதல்அளித்தது.பின், 1994ல், தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் இயற்றப் பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, 2009ல் மத்திய - மாநில அரசுகள் தனித்தனியாக இயற்றின. இந்த சட்டங்களின் கீழ், நர்சரி மற்றும்பிரைமரி பள்ளிகளுக்கு தனியாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும்,அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன.இதனால், இந்த பள்ளி களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் நியமனம், அவர்களுக்கான பணி விதிகள், ஊதிய விகிதம் என, அனைத்தும் வெவ்வேறாக பின்பற்றப்படுகின்றன. இந்த விதிகளில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், நீதிமன்ற வழக்குகளின்போது, கல்விதொடர்பான வழக்குகளில் முடிவு எடுப்பதில், பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், சமமான நிர்வாக முறை இல்லாததால், ஆசிரியர்கள், பணி யாளர் நியமனங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன.இந்த நிலையை மாற்ற, அனைத்து பள்ளி களுக்கும், ஒரே விதமான சட்டத்தை உருவாக்க, 40 ஆண்டுகளுக்கு முன்,உச்ச நீதிமன்றமும், பின், உயர் நீதிமன்றமும்பரிந்துரைத்தன. இந்நிலையில், தற்போதைய நிர்வாக சீர் திருத்தத் தின் முக்கிய அம்சமாக, அனைத்து பள்ளிகளுக்கு மான பொது பள்ளிகள் சட்டத்தை, தமிழக அரசு தயாரித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், சட்டத்தின் முக்கிய அம்சங் களை, சட்டத்துறை ஆய்வு செய்யத் துவங்கி உள்ளது. விரைவில் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. முக்கிய அம்சங்கள் என்ன? *அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் தமிழக பாடத்திட்டத்தை நடத்தும், சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் ஆகியவற்றுக்கு, தற்போது அமலில் இருக்கும், தனித்தனி விதிகள்ரத்தாகும். இனி, புதிய சட்டத்தில்இடம்பெற்றுள்ள விதிகளையே, அனைத்து வகையான பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் *மாணவர்கள் சேர்க்கையில், அரசு பள்ளிகளைப் போன்றே, நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் *அனைத்து பள்ளிகளுக்கும், தனியார்சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயகமிட்டியே, கட்டணத்தை நிர்ணயிக்கும் *ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், அரசு பள்ளிகளின் அனைத்து விதிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை பள்ளிகளுக்கு, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சலுகைகளின் படி, இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் பள்ளிகள், பொது சட்டத்தையே பின்பற்ற வேண்டும் *தனியார் பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளை போல ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமனங்களில், அரசு விதிக்கும் கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நியமன பணிகளை, தனியார் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம். *மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிஅமர்த்தப்பட வேண்டும். உள் கட்டமைப்பு விதிகளையும், அங்கீகார விதிப்படி மேற்கொள்ள வேண்டும். பொது பள்ளி சட்டத்தின் படியே, புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.இந்த அம்சங்கள் எல்லாம், புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் பாராட்டு

அரசு பள்ளி ஆசிரியர் பகவான் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். அவரை ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் உள்ளிட்டோர் பாராட்டினர். மாணவர்கள் மனதில்... மக்களிடையே தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசு பள்ளிகளை தற்போது புறக்கணித்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து சில அரசு பள்ளிகளை மூடுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதே சமயம் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு ஒரு காலத்தில் தனி மரியாதை இருந்து வந்தது. ஆனால் இப்போது ஆசிரியர்-மாணவர்கள் உறவு மெச்சத்தக்கவகையில் இல்லை. இருப்பினும் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர். இடமாறுதல் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பகவான். பாடம் எடுக்கும் அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட அக்கறை போன்ற காரணங்களால் இப்பள்ளி மாணவர்களுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. மேலும் பகவானின் அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்த சூழ்நிலையில் பகவானுக்கு, திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்ய உத்தரவு வந்தது. இதை அறிந்த மாணவ-மாணவிகள் அவரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் அரசு உத்தரவின் பேரில் வேறு வழியின்றி பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்க வந்த பகவானை, வெளியே செல்ல விடாமல் மாணவ-மாணவிகள் தடுத்து கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதையடுத்து பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் பணிபுரிய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். பாச போராட்டம் மாணவர்கள் - ஆசிரியர் இடையே நடந்த இந்த பாச போராட்ட காட்சிகள் பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இது வழக்கமான இடமாற்றம் தான். ஆனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் மாணவர்களின் அன்பால் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. பகவானை கட்டிப்பிடித்து மாணவர்கள் அழுத காணொலியை கண்ட பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர். ஆசிரியர்-மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற படத்தில் மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருந்தது. அன்று திரையில் நிகழ்ந்தது, தற்போது வெளியகரம் அரசு பள்ளியில் நிஜமாகி இருக்கிறது. பாராட்டு குவிகிறது பகவான் பற்றிய செய்தியை பார்த்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குரு- சிஷ்யர்கள் என்று பாராட்டி பூங்கொத்து படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் டுவிட்டரில், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த இந்த பாசப்பிணைப்பு நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது, ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டு இருக்கிறார். நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு ஆசிரியரின் இடமாற்றம், மாணவர்களை கதறி அழ செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்து பாருங்கள். அவருக்கு சிறந்த ஆசிரியருக்கான (நல்லாசிரியர்) ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். பணிமாறுதலை 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விவேக் மற்றொரு பதிவில், ‘சூப்பர். பள்ளிக்கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும், உயர்கல்வி அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதிகாரி ஆய்வு இதனிடையே திருத்தணி கல்வி மாவட்ட அதிகாரி அருட்செல்வன் நேற்று வெளியகரம் பள்ளிக்கு திடீரென சென்று ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் மனநிலையை அவர் கேட்டறிந்தார். ஆசிரியர் பகவான் உள்பட அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் மாவட்ட கல்வி அதிகாரியை செய்தியாளர்கள் சந்தித்து, ஆசிரியர் பகவான் தொடர்ந்து இதே பள்ளியில் நீடிப்பாரா? அல்லது வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதை முதன்மை கல்வி அதிகாரி தான் முடிவு செய்வார் என கூறிவிட்டு சென்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு நாமக்கல் மாணவி முதல் இடம்; கோவைக்கு 3-ம் இடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ், தமிழகம் முழுவதும் 14 உறுப்பு கல்லூரிகளும், 26 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, பிடெக். வேளாண்மைப் பொறியியல்,ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் உறுப்புக் கல்லூரிகளில் 1,262 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3,422 இடங்கள் உள்ளன. இதற்காக கடந்த மே18-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி இரவு 11.59 மணி வரை www.tnau.ac.in/admission.html என்ற வேளாண்மை பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 32, 561 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 18, 19 மற்றும் 20-ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு துணைவேந்தர் கே.ராமசாமி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி எஸ்.என்.ஆர்த்தி முதலிடம் பிடித்தார். 199.67 கட்-ஆப் மதிப்பெண் பெற்று கொடுமுடி மாணவி ஸ்ரீகார்த்திகா 2-வது இடத்தையும், 199.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்று கோவை மாணவி எம்.மேக்னா 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஒற்றைச்சாளர முறையில், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் ஜூலை 7-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கும், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். 16-ம் தேதி தொழிற்கல்வி பிரிவுக்கும், 17 மற்றும் 18-ம் தேதிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில்துறையினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் என்றார். அப்போது டீன் எஸ்.மகிமைராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவப் படிப்பு இந்திய ஒதுக்கீடு: கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 20, 21-ம் தேதிகளில் நடத்தியது. கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தவர்கள் இன்று முதல் ஜூலை 3-ம் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ம் தேதி வெளியீடு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 1 லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் 5-ம் தேதி ஆன்லைன் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதை கருத்தில்கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8 முதல் 14-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 42 மையங்களில் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொள்ள இய லாத மாணவர்களுக்கு மட்டும் அண்ணா பல்கலைக்கழக மையத்தில் கூடுதலாக 3 நாட்கள் (17-ம் தேதி வரை ) சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட நிகழ்வான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளி யிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத்தேர்வு மையத்தில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். தரவரிசைப் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட் டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் மாவட்டந்தோறும் நீட் தேர்வு மையங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

ஐஐடியில் மாணவர்களின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஹெக்காத்தன்’ என்ற குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ள மாணவ, மாணவிகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘ஹெக்காத்தான்’ கண்டு பிடிப்பு போட்டிக்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் மாணவர்கள் தங்கள் புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளனர். பல்வேறு துறைகளில் நிலவும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கான தீர்வுகளையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்தும் அளித்து வருகிறது. ஆய்வுகளுக்கான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கிறது. அத்துடன் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித் தொகைகளையும் வழங்குகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் 200 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான கால அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏராளமான பிழைகள் இருந்ததாக கூறுகிறீர்கள். நீட் தேர்வு கேள்விகளில் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க வினாத்தாள் தயாரிப்பில் தமிழகத்தில் இருந்து மொழிபெயர்ப்பாளர்கள் இடம்பெற வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை வேறு மாநிலங்களில் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்கள் அவரவர் மாவட்டங்களிலேயே நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப் படும். நீட் தேர்வுக்கான வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமின்றி மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் கேட்கப்படும். தமிழகத்தில் கூடுதல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள் சேருவதை விட என்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது. அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கம் போல பி.காம். படிப்பில் சேர கடும்போட்டி நிலவியது. கடந்த 18-ந்தேதி பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் பல ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை முடித்தன. கல்லூரிகளின் வாசலில் மாணவர்களுடன் பெற்றோர்களும் காத்துக் கிடந்தனர். கல்லூரிகளில் மகள் அல்லது மகனுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இடம் கிடைத்துவிட்டால் ஏதோ பணப்புதையல் கிடைத்தது என்று நினைக்கும் நிலையும் உருவானது. இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் உத்தரவிட்டார். இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 June 2018

சென்னையில் புத்தகங்கள் தட்டுப்பாடா? பிளஸ்-1 பாடபுத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டது பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் 91 சதவீதம் அச்சடிக்கப்பட்டுவிட்டதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். பிளஸ்-1 பாடப்புத்தகம் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 11-வது வகுப்புக்கு மட்டும் புதிய புத்தகங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் பிளஸ்-1 விலை இல்லா புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்ததுடன், புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. 91 சதவீதம் அச்சடிப்பு இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் கூறியதாவது:- புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 1 கோடியே 2 லட்சத்து 83 ஆயிரம் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறந்த அன்றே (ஜூன் 1-ந் தேதி) புத்தகங்கள் வழங்கப்பட்டது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில புத்தகம் கடந்த ஏப்ரல் மாதமே அச்சடிக்கப்பட்டு குடோன்களுக்கு அனுப்பப்பட்டது. மற்ற புத்தகங்கள் அச்சடித்த உடன் அனுப்பிவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 14-ந் தேதி அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 91 சதவீதம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டன. எஞ்சிய 9 சதவீத புத்தகங்கள் மட்டும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் நேற்று தான் பள்ளிகளுக்கு 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வந்து இறங்கின. அவை உடனுக்குடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அரசு டாக்டர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் கே.புருஷோத்தமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- வயது உயர்வு இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2007-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, அரசு டாக்டர்களின் பணி ஓய்வு பெறும் வயது 70 என்று நிர்ணயம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில், அரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதை உயர்த்தியதை பிரதமரும் வரவேற்றுள்ளார். கோரிக்கை மனு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதனால், பொதுமக்களுக்கு மிகவும் நன்மை ஏற்படும். அனுபவம் வாய்ந்த டாக்டர்களிடம் அவர்கள் சிகிச்சை பெறலாம். அதுமட்டுமல்ல, மருத்துவ மாணவர்களுக்கும் நன்மை ஏற்படும். எனவே, அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை உயர்த்தும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. பணி ஓய்வுபெறும் வயதை உயர்த்தினால், என் வயதையொட்டி உள்ள 800 டாக்டர்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு அதில் கூறியிருந்தார். பரிசீலிக்கவேண்டும் இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர். பின்னர், மனுதாரர் கடந்த ஆண்டு கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். அப்போது மனுதாரர் மட்டுமல்லாமல், அரசு டாக்டர்களின் கருத்தையும் கேட்கவேண்டும். அதன்பின், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து தகுந்த முடிவினை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளிலும் பிஎட் படிப்பில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன. ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ‘தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலர், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5’ என்ற முகவரிக்கு ஜூலை 3 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளிலும் பிஎட் படிப்பில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன. ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ‘தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலர், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5’ என்ற முகவரிக்கு ஜூலை 3 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பணியாளர் சீரமைப்பு குழுவுக்கு ஜூன் 30-க்குள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்

தமிழக அரசு பணியாளர் சீரமைப்பு குழுவுக்கான ஆலோசனைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என உறுப்பினர் -செயலர் மு.அ.சித்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணியிடங்களை கண்டறிதல் தமிழக அரசுத் துறைகளின் பணியாளர் அமைப்பை மதிப்பீடு செய்து அவசியமற்ற பணியிடங்களை கண்டறிதல், வெளிமுகமை மூலம் அல்லது ஒப்பந்தப்பணி அடிப்படையிலோ பணியமர்த்தலுக்கு வழிவகையுள்ள பணியிடங்களை கண்டறிதல் மற்றும் அரசுத்துறைகள், அரசு முகமைகளின் நி்ர்வாக செலவு மேலாண்மை குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகள் அளிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆலோசனைகளை பெறத் தொடங்கியுள்ளது. பணியாளர் சீரமைப்புக்குழுவுக்கான ஆலோசனைகளை நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அல்லது ‘src_2018@tn.gov.in’ என்ற மின்னஞ்சலுக்கோ ஜூன் 30-ம் தேதிக்கு முன் அனுப்பலாம். இக்குழு தொடர்பான விவரங்களை, ‘www.tn.gov.in/src’ என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொலைதூரக்கல்வி படிப்புகளில் ஜூலை 15 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக்கல்வி படிப்புகளில் ஜூலை 15 வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பல்கலைக்கழக மான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. பிளஸ் 2 முடிக்காத, 18 வயது நிரம்பியவர்கள் பட்டப் படிப்பில் சேர வகை செய்யும் 6 மாத கால இளங்கலை முன்தயாரிப்பு படிப்பும், சிஏ, ஏசிஎஸ், ஐசிடபிள்யூஏ படித்துக்கொண்டிருப்பவர்களுக்காக சிறப்பு பி.காம். படிப்பும் வழங்கப்படுகிறது. இளங்கலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எவ்வித கல்விக்கட்டணமும் செலுத்த தேவை யில்லை. 2018-ம் ஆண்டின் ஜூலை பருவ மாணவர் சேர்க்கையின்கீழ் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் ஜூலை 15-ம் தேதி வரை சேரலாம். ஆன்லைன் (www.ignou.ac.in) மூலமாகவும் மாணவர் சேர்க்கை செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ள லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 21 June 2018

ஆசிரியர்கள் பணிநிரவல்: விடிய விடிய கவுன்சலிங்

உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர். சென்னை: ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இரவு முதல் அதிகாலை வரை கவுன்சலிங் நடந்ததால் ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் கடந்த 13ம் தேதி தொடங்கியது. கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்னதாக பணி நிரவல் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய கவுன்சலிங் இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணிக்கு முடிந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உபரி ஆசிரியர் பணியிடங்கள் தவறாக கணக்கிட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நேற்று நடக்க இருந்த கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டது. இதுனால், நேற்று காலை கவுன்சலிங்குக்கு வந்த ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கவுன்சலிங் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பதால் காலையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வந்துவிட்டனர். ஆனால் கல்வி அதிகாரிகளின் தவறான கணக்கீடுகளால் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்குத்தான் கவுன்சலிங் தொடங்கியது. காலை 3.30 மணிக்கு முடிந்தது. இதுபோன்ற கவுன்சலிங்கை வாழ்நாளில் பார்த்ததே இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை என எல்லா மாவட்டங்களிலும் இதுபோல நடந்துள்ளது. மேலும் திருச்சி முதல் சென்னை வரை உள்ள பணியிடங்கள் காட்டவில்லை. பணி நிரவல் ஆணைக்கு எதிராக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை வைத்து கவுன்சலிங் நடத்தப்படுகிறது. இது முற்றிலும் தவறு. பலமுறை கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தவறான செயல்முறை மூலம் கவுன்சலிங் நடத்துவதால் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாணை எண்266ல் பணி நிரவல் செய்யும் போது பாடவாரியாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முதலில் தமிழ் பாடத்தை எடுக்க வேண்டும். ஆனால் கல்வி அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல பாட ஆசிரியர்களை எடுக்கின்றனர். மேலும், 9, 10ம் வகுப்புகளுக்கு 5 ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையில் கூறப்பட்டுள்ளது. அந்த விதி பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்கு சாதகமான விதிகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். ஆணைப்படி பாட வாரியாக எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. மேலும் உபரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் எடுத்த கணக்கின்படி 17000 ஆசிரியர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். உண்மையில் 2 ஆயிரம் ஆசிரியர்கள்தான் உபரியாக உள்ளனர். தவறான கணக்கின்படி பணி நிரவல் செய்ததால் இப்போது காலிப் பணியிடங்களே இல்லை. அதனால் இன்று நடக்கவேண்டிய, மாவட்டத்துக்குள் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற கவுன்சலிங் ரத்தாகிவிட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 20 June 2018

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு 28-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். படம்: ம.பிரபு M_PRABHU எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது. அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையானது. இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு கொடுக்கப்படுகின்றன. 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைனில் பதிவு செய்வது கடந்த 13-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற்றது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE